சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திர தினம் கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
 என்ற பாரதியின் தாகம் தீர்ந்தது                      பலரது குருதியால்
சுதந்திரம் இழந்து பாழ் பட்டு நின்ற                நம்  பாரத தேசம் தன்னை மீட்டனர்                   எம்முடை முன்னோர்

சுட்டெரித்த போதிலும்                                          சுடரெழுப்பும்  சூரியனாய் 

கொடி பிடித்த உங்களினால் அன்றோ!
 பார் இன்று வாழுதையா நன்றாய் !

பேர் புகழும் உங்களுக்கே என்றும்!

மக்களை வாழ்விக்க வந்த                                   மகாத்மா காந்தியை
 உறுதி கொண்ட நெஞ்சினராம்                        பாரதியை
 அஞ்சாத உறுதி கொண்டு                                    கொடிகாத்த  குமரனையும்
 நெஞ்சார நினைக்கின்றோம்                            தேசமெங்கும்  நாளும்

தங்கள் நல்லுயிரை ஈந்தும்                               கொடியினைக் காத்திட்ட 
தலைவர்கள் பலருண்டு தாய்மை                   வடிவம் கொண்டதுண்டு!
 நிலைகொண்ட மெய்ஞ்ஞான                           கலை தந்த தலைவர்க்கு
சிலை வைத்து விட்டால் மட்டும்                        சிறப்பாமோ!

சினம் கொண்ட நம்மனத்தில்அவர்                தந்த நற்குணம் தாங்கி 
அதன்படி நடப்பது அதுவன்றோ                      இனி வேண்டும்!

பேருக்கும் பெருமைக்கும் யோகம்                  பேசித் திரிந்திடாமல் 
ஊருக்கு உழைத்திட்ட உத்தமர்தம்                  வழி நடப்போம்!

விந்தையிலும்  விந்தையாய்                        சிந்தையில் நிறைந்து நிற்கும்
 ஈடில்லா வளம் பெற்ற இந்தியத்                       தாயைப் போற்றுவோம்!
 பெற்ற சுதந்திரம் பேணியே உற்ற                   குடிமக்கள் நாமுமே 
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்! இந்தியத் தாயை நேசிப்போம்!

ஜெ. மணி வாசகி தென்றல்,

திசையன்விளை.