காட்டுக்குள்ளே கொண்டாட்டம்...! 028

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்...! 028

காட்டுக்குள்ளே கொண்டாட்டம் ..         

    ஒரு அழகான காட்டுக்குள், பல வகை மிருகங்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு வகை, யானை, புலி, என பல மிருகங்கள்  ஒற்றுமையாக இருந்து  நரி வரையும் சித்திரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது, வலிமை மிக்க யானை அமைதியாக உட்கார்ந்து தன் மடியில் இரண்டு முயல் குட்டிகளை சுமந்து, அழகாக ஓவியத்திற்கு காட்சி தருகிறது, அடுத்தபடியாக புலிக்குட்டியும்  யார் மீதும் பாயாமல் அமைதியாக உட்கார்ந்து ஓவியத்தை கண்டு ரசிக்கிறது, புலியை கண்டாலே பயந்து ஓடும் பூனையும் அமைதியாக உட்கார்ந்து, நரி வரையும் ஓவியத்தை கண்டு ரசிக்கிறது, பூனை கண்டாலே பயந்து ஓடும் எலியும், ஒன்றும் தெரியாத பாப்பாவைப் போல அமைதியாக உட்கார்ந்து, சித்திரத்தை கண்டு ரசிக்கிறது, தண்ணீரில் மட்டுமே இருக்கும் கொக்கு ஒரு படி முன்வந்து  எலி மீது காலை வைத்து ஓவியத்தை கண்டு ரசிக்கிறது, கொக்கின் மேலோ  வானகரமான குரங்கு, தத்தி தத்தி ஓடும் குரங்கு  ஓடாமல் அமைதியாக ஓவியத்தை பார்க்கிறது, அதற்கு  மேலும் ஆந்தை, திருட்டுப் பார்வையுடன் பார்க்கிறது ஓவியத்தை, பின்னோக்கிப் பார்த்தோமானால்  ஒட்டகச்சிவிங்கி, தனக்குத் தெரியவில்லை என்று  கழுத்தைத் திருப்பி  ஓவியத்தை கண்டு ரசிக்கிறது, இப்படி அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக ஒன்றாக  மகிழ்ச்சியாக இருக்கிறது, இதிலிருந்து நாம் கற்கும் பாடம், ஒவ்வொரு விலங்கும்  ஒவ்வொரு விலங்கை அடித்து சாப்பிடும் குணம் தான், ஆனால் இங்கோ அப்படி இல்லை, ஒவ்வொரு விலங்கும் ஒற்றுமையாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறது, அதற்குக் காரணம் அன்பால்  மனதை வென்றிருக்கிறது, அறிவால் உலகத்தை வென்று இருக்கிறது, நாமும் கூட, அந்த விலங்குகளை போல ஒற்றுமையாக ஆடி பாடி  மகிழ்ந்தோம் ஆனால் நமக்கும்  என்னாலும் மகிழ்ச்சி தான், நாமும் கூட அவ்விலங்குகளை போல என்றும் ஒற்றுமையாக அன்போடு அனைவரின் மனதையும் வெல்வோம் நாம் பெற்ற அறிவால் உலகத்தையே வெல்வோம்.....///    நன்றி.

 வி.கணேஷ் பாபு , ஆரணி