வசந்தம் வீசியது... 005

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

வசந்தம் வீசியது... 005

வசந்தம் வீசியது

அதிகாலை நேரம் லெட்சுமி பாட்டி பேரக் குழந்தை பாலாவை எழுப்பினாள். என்ன பாட்டி நேரம் இருக்கு என்று சொல்ல பாட்டி இவனுக்கு இதே வேலைத் தான் என கிளம்பி விட்டாள். 
பாலாவுக்கு அம்மா இல்லை அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் 
பாட்டியின் அரவணைப்பில் பாலா பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறான் .
செங்கல் சூளையில் வேலையும் பார்க்கிறான்.
கிடைக்கும் வருமானத்தில் பாட்டியையும் காப்பாற்றி பள்ளி படிப்பையும் பார்க்கிறான்.
வயதான காலத்தில் லெட்சுமி பாட்டி உயிரை கையில் பிடித்துக் கொண்டு பேரக் குழந்தைக்காக வாழ்கிறாள்.
பாலா பள்ளிக்கு எப்போதும் காலம் தாழ்த்தி தான் வருவான்.
வகுப்பு ஆசிரியை மலர் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொள்வாள்.
ஒரு நாள் பாலாவிடம்
சத்தம் போட கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது பாலாவுக்கு,ஏம்பா என்று மலர் கேட்க கைகள் இரண்டையும் தேய்த்து தேய்த்து நின்றான்.
மலர் பாலாவின் கையை பார்க்க திகைத்து நின்றாள் காய்த்து போன கைகளுடன் பள்ளிக்கு வருவதைப் பார்த்து திகைத்து நின்றாள்.
மலருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பள்ளி விட்டது.இரவில் மலருக்கு தூக்கம் வரவில்லை. தன் கணவர் மகாலிங்கத்திடம் சொல்லுகிறாள் பாலாவின் கதையை மனைவியை சமாதானம் செய்கிறார் மகாலிங்கம்.
நாளை பாலாவை எனது அலுவலகத்தில் வந்து பார்க்க சொல் என்று சொல்ல மலருக்கு மகிழ்ச்சி பொங்கியது.
மறுநாள் பாலாவிடம் சொல்லி தனது கணவரின் அலுவலகத்திற்கு போக சொல்லுகிறாள்.
பாலாவும் போகிறான்
மகாலிங்கம் உனது படிப்பு செலவு அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் நீ வேலைக்கு செல்ல வேண்டாம் படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்ல பாலாவுக்கு மகிழ்ச்சி, ஓடிப் போய் பாட்டியிடம் சொல்லுகிறான்.பாட்டி நான் பாடுபட்டாவது என் வயிற்று பிழைப்பை பார்த்துக் கொள்வேன்.நீ மகாலிங்கம் சொல் படி கேள் என்றாள்.நாட்கள் நகர்ந்தன.பொதுத்
தேர்வும் நெருங்கின
பாலா படிப்பில் கவனம் செலுத்தினான். தேர்வும் நெருங்கியது. ஒரு மாதத்திற்கு பிறகு ரிசல்ட் வந்தது.
பள்ளியில் மலர் பார்க்க பாலா தான் வகுப்பில் முதலிடம் கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்த பாலா 600 க்கு 595  மதிப்பெண் பெற்று மாநிலத்திலே முதலிடம் பெற்றான்.
தொலைக்காட்சியும்,பத்திரிகையும் பாலாவையும் மலரையும் மகாலிங்கத்தையும் பேட்டி கண்டன.
மலர் பாலாவின் கதையை கூறினான்
இரண்டு மாதத்திற்கு பிறகு அரசாங்கம் பாலாவின் படிப்பு செலவை ஏற்றது. நான்கு வருடம் பொறியல் படிப்பை முடித்தேன்.
அரசாங்க தேர்வை எழுதினான். அதிலும் முதலிடம் ,
இரண்டு வருடங்களுக்கு பிறகு அவன் படித்த ஊருக்கே மாவட்ட ஆட்சியாளராய் பணி அமர்த்தினார்கள. மலரையும்,மகாலிங்கத்தையும் பார்க்க ஒடி வந்தான் பார்த்த பிறகே பணியில் சேர்ந்தான். தனது வகுப்பு ஆசிரியருக்கு பெருமை தேடி தந்த பாலாவை அவ்வூர் மக்கள் பாராட்டினார்கள்.தன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என எண்ணி பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு பெரிதும் உதவினான் பாலாவால் பயன் பெற்ற குழந்தைகள் ஏராளம்.
படித்த பள்ளிக்கும் ஏராளமான நிதியுதவிகளையும் செய்தான் ஊரே வியந்து பார்த்தது.
நல்லவர்களை இறைவன் ஒரு நாளும் கைவிட மாட்டான் தர்மம் தலை காக்கும்.

- ம.செ.அ.பாமிலா பேகம், 

  நாகர்கோவில்