சுதந்திர காற்றை சுவாசிப்போம்...2

சுதந்திர தின கவிதை 2

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...2

சுதந்திர காற்றை சுவாசிப்போம் ...

கரண்டி பிடித்த நம் கைகள் 
கணினி பிடித்து செல்லட்டும்.

கலங்கி நின்ற நம் கண்கள் 
கனலை அள்ளி தெளிக்கட்டும். 

சுவாசிப்போம் வா
சுதந்திர காற்றை

பேச்சுரிமை நமக்குண்டு.
பேருவகை கொள்வோம் வா.
பேச்சில் வீரியம் நிறைப்போம் வா.
பேரிடர் பல வெல்வோம் வா.

ஏழுத்துரிமை நமக்கு உண்டு.
ஏடெடுப்போம் உடனே வா.
எழுத்துப்போர் புரிவோம் வா.

விதி செய்யும் சதி தன்னை.
மதி கொண்டு வெல்வோம் வா.
அன்பு ஒன்றே பிரதானம்.
அதற்குத் தேவையான வெகுமானம்.

சுவாசிப்போம் வா சுதந்திர காற்றை.

அகன்றது அன்னியனின் நரித்தனம்.
வென்றது நம் பாரதம்.
அகிம்சையில் கிடைத்தது சுதந்திரம்.
இனம் மொழி கடந்து நேசிப்போம்.
சுதந்திர காற்றை சுவாசிப்போம்.

அனைத்தும் இருந்தும்
தன்னையே நாட்டிற்காக அர்பணித்த
எங்கள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும்
இனிய எழுபத்தி ஆறாவது  இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

ஜெய்ஹிந்த்....
       வந்தே மாதரம்...

-பா.சுரேஷ்
பொறையார்
மயிலாடுதுறை மாவட்டம்.