அண்ணாவின் அற்புதங்கள் 057

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணாவின் அற்புதங்கள் 057

அண்ணாவின் அற்புதங்கள்

நடராஜன் பங்காரு தம்பதியின் புதல்வரே! 

நெசவாளர் குடும்பத்தில் வாழ்ந்தவரே!

உழைக்கும் வர்க்கத்தில் வந்தவரே!

பிறப்பில் யாரும் அறியாது பிறந்தவரே!

இறப்பில் பலகோடி பேரை பெற்றவரே!

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவரே!

ஊடகங்களுக்கும் உள்ளடக்கம் தந்தவரே!

உண்மையை உலகிற்கு உரைத்தவரே!

உரிமையோடு தம்பியென்று அழைத்தவரே!

ஆட்சிக்கு அடித்தளமிட்டவரே!

ஆண்டுகள் பல வரலாற்றில் இடம் பிடித்தவரே!

தமிழ்நாடு என்னும் பெயரை சூட்டியவரே!

தமிழர்களுக்கு அங்கீகாரம் அளித்தவரே!

திராவிட நாடென பத்திரிக்கை பெயர் வைத்தவரே!

கடவுள் நம்பிக்கை மிகுந்தவரே!

கற்ற சங்கத்தமிழால் வளர்ந்தவரே!

மேடைப் பேச்சுக்கு உரித்தானவரே!

ராணி அம்மையை மணந்தவரே!

ராஜா போல் கவலையின்றி வாழ்ந்தவரே!

எழுத்தராக தமிழாசிரியராக பணியாற்றியவரே!

நீதிக்கட்சியில் தொடர்பு கொண்டவரே!

பெரியாரைத் தலைவராக ஏற்றவரே!

பெரியாரால் தலைமைப் பொறுப்பை பெற்றவரே!

பெரியாருக்கு தளபதியாக இருந்தவரே!

அதிமுகவில் தடம் பதித்தவரே!

திரைத்துறையில் வேலைக்காரியால் புரட்சியானவரே!

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவரே!

இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவரே!

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவரே!

பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியவரே!

புற்று நோயால் மரணப்படுக்கையில் விழுந்தவரே!

புத்துயிரை எமனுக்கு அளித்தவரே!

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவரே!

மண்ணுள்ளவரை மறையாது உன்புகழ்!

முனைவர்
ச.செல்விசேகர்,கரூர்.