அஞ்சலில் கடிதம்

உலக அஞ்சல் தினம் கவிதை

அஞ்சலில் கடிதம்

அஞ்சலில் கடிதம்...:
&&&&&&&&&&&&&&&&&
அஞ்சல்துறை இன்றுவரை
உயிர்ப்பின்
உறவானது...
நெஞ்சினில்
நினைவினில்
மலர்ந்திடும்
கடிதங்கள்...
எத்தனையோ அறிவியலின்
ஆக்கத்தாலே
புதுமலர்ச்சி...
எதிர்ப்பார்ப்பு
ஏக்கங்கள்
வரும்பதில்
எழுத்தேடாய்...

தாய்தந்தை விளிப்பினில்
அன்புமழை
அரவணைக்கும்...
நண்பவரவர்
விளிப்பினிலே
உலகமது
உல்லாசமே...
பள்ளியின்
அழைப்பது
மதிப்பெண்கள்
தாங்கியதாய்...
அலுவலக
அழைப்பிதழ்
பணியேற்பு
உத்திரவாய்...

விழாக்களின்
கொணடாட்டம்
வாழ்த்தட்டை
வண்ணமயமாய்...
வீட்டிற்கு
அழைப்பிதழ்
திருமணமோ
புதுமனையோ...
எண்ணங்கள்
சுமந்துசெல்லும்
வாரமாயினும்
தாமதமாக...
உடனழைப்பு
தந்தியென
பறந்துவரும்
அவசரமாக‌..

அலைபேசி வந்ததிங்கு
அனைத்தையும்.
மறந்தோமே...
குறுஞ்செய்தி
நொடிப்பொழுதில்
உடன்சேரும்
விந்தையிது...
கையெழுத்து
பிரதிகள்
தொலைத்தோம்
எழுதுதலில்லை...
கண்ணீர்த்துளி
பலகதைகள்
உணர்த்திடும்
உரைத்திடுமே...
&&&&&&&&&&&&&&&&&&&&&&
        சா.சையத் முகமது
             கிருட்டிணகிரி
&&&&&&&&&&&&&&&&&&&&&&