தமிழும்... பாரதியும்...! 028

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும்... பாரதியும்...!  028

பைந்தமிழ் பாவலன் பாரதி

பாரதியின் சிந்தனைகள் மானுடன் உள்ளத்தில்//
காற்றோடு இரண்டற கலந்து விட்டதே//
வானும் மண்ணும் உள்ள வரை//
சமுதாயத்திற்கு நல்ல
 வழிக்காட்டியாய் திகழ்ந்ததே//
கலையை கலைச்சாரலை தோளில் சுமந்தவன்//
நிகழ்காலம் அல்ல
எதிர்காலமும் உணர்த்தும்//
அறிவை வளர்த்திட பாரதி காட்டும்//
ஆர்வம் நம்மை வியக்க வைத்தன//
புழுவின் உடலில் புலியின் வீரத்தை//
பாய்ச்சியவன் பாரதி சொல்லவும் வேண்டுமா//
ஆண்களோடு பெண்களும் சரிநிகர்யென
உரக்கச் சொன்னானே//
இந்திய திருநாட்டின் குடியரசு தலைவர்
பதவிக்கு// 
பெண் வேட்பாளரை நிறுத்தும் நிலை உருவானதே//
தேசப்பற்றையும் ஒருமைப் பாட்டையும்//
தெளிவாக உணர்த்திக் காட்டினானே//
பாரதி பல மொழிகளை கற்றவன்//
ஆயினும் தமிழ்/மொழியைப் போல//
இனிதாவதெங்கும்
காணோம்யென்று//
தமிழ் மொழியின் பெருமையை//
தரணியெங்கும் எடுத்து
உரைத்தானே// 
பாரதியின் எழுதுகோல்
சமூகத்தை நோக்கியே 
எழுதியது//
இனியொரு பாரதி பிறப்பாரா ஏக்கத்தோடு//


-ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்