அண்ணா என்னும் ஆகாயம் 027

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும்  ஆகாயம் 027

அண்ணா என்னும் ஆகாயம்

 1.காஞ்சியில் பூத்த கருங்குவலை அறிஞர் அண்ணா//

2.காரிருள் நீக்கிய பெரும்புலமை ஆனார்/ 3.வஞ்சினம் விரட்டிய உயர் லட்சியம்/ 4.வசந்தத்தை காட்டிய பெரும் விடியல்/ 5.தமிழிலும் ஆங்கிலத்திலும் அடுக்குத்தொடராய், பலரையும் ஈர்ப்பவர்/ 6.வண்ணம் பேசும் திறனோடு எழுத்தாற்றலும் பெற்றவர்/

7.முதுகலை மூன்று முறையாக கற்று/ 8.முன்னேற்றப் பாதையில் முப்போக்கை சேர்த்து/

9.முன்னேற்றகழகம் மூன்று தமிழ் விரும்ப!!/

10.முக்கனியில் சர்க்கரையாய் முகவரி தந்தாய்/

11.புத்தகத்தை! வாசிப்பார் வாசிப்பார் என்பதைவிட சுவாசிப்பார்/

12.சுவாசித்துக் கொண்டே இருப்பார் புத்தகத்தை/

13.வடக்கின் இடக்கை வடக்கே சென்று தெற்கின் தேடலைத் தெளிவாய் சொல்லும்/

14.தென்னவன் நீயே மன்னவன் ஆனாய், தென்னாட்டு காந்தி தேன் தமிழேந்தி/ 15.நம் நாடு போற்றும் தம்பிக்கு மடலை தவறாமல்/

16.எழுதி தாய் தமிழ்நாட்டிற்கு பெயரை வைத்த பெருமை சீலனே/

17.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்/

18.அனைவருக்கும் சமமாய் மேடை அமைத்தவர்/

19.அகிலம் போற்ற, சமூகநீதி கொடுத்தவர்/

20.பகுத்துப் பார்க்கும் பண்பினை தந்தவர்/

21.பைந்தமிழ் நாட்டின் தாயானவர், எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய்/

22.அழகு தமிழ் மேடையேற, அன்னை மனம் மகிழ்ந்து போக/

23.உயர்ந்த மொழி, உலகம் வணங்க, மாற்றம் பல தந்தவரே!!/ 24.மதிப்புமாண்பின் உயர்ந்தவரே, மானுடவிடியலும்,மனக்குகையில் வாழ்பவரே//

வி.கணேஷ் பாபு,ஆரணி