"வீறு கொண்டெழுந்த வின்னக விளக்கு" அண்ணா 026.

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி


"வீறு கொண்டெழுந்த வின்னக விளக்கு"
அண்ணா

காஞ்சி வரகுவாசல் வரவு

கைத்தறி நெசவாளர் பிரிவு

நல் உள்ள நடராசராம் தந்தை - நீரோ

விந்தைகள் செய்ய வந்த மேதை 

பதிபக்தி பங்காரு அம்மாள் தாய் - நீரோ

உலக மக்களின் உளம் கவர் சேய் 

ஈடில்லா இராசாமணி அம்மையார் வளர்ப்பு 

அதனால் வந்தது பொறுப்பு 

மாணவ‌‌ப்‌ பருவத்தில் மணம்

பொறுப்புகளை சுமந்தது உம்முடைய மனம் 

நகராட்சி உதவியாளர் பணி
 
வருங்காலம் உம்மைப் போற்ற பொற்காலத்தின் முதற்படி

சொற்பொழிவின் சுரங்கம் அதனால்
 
பூரித்தது எங்கள் அங்கம் 

மக்களின் சீர்திருத்தவாதி

உம்முடன் உரையாட வேண்டும் ஒரு தேதி 

மூட நம்பிக்கைகளுக்கு முட்டு கட்டை இட்ட முற்போக்குவாதி

சமய சுரண்டல்களை சாடிய சத்தியவான் 

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்‌டின் மூலகர்த்தா 

பத்திரிகைகளின் பரமாத்மா 

தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தாரக மந்திரம் 

குல வழிக் கல்வியை கூண்டோடு எதிர்த்த குரு பிரம்மா 

மொழிப்‌பற்றாளர் மக்களின்

விழிக்குள் கருவிழியானவர்

கண்ணியப் பேச்சாளர்- ஏழை 

கருணை உள்ள உள்ளங்களின் மூச்சாளர் 

அமெரிக்கர் அல்லாதவருக்கு  
அளிக்காத பட்டத்தை அள்ளிக் குவித்த அற்புதவாதி 

ஆட்சி இரண்டாண்டு களானாளும் இன்னும் பல பல காலங்கள் இதயங்களில் வாழும் இச்சா சக்தி .

முனைவர் ச. முத்துமாரி உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை தரும மூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி பட்டாபிராம் சென்னை - 600072