ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கார் 021

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கார் 021

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கார்.

நாட்டின் தங்க மகன்,
ஓங்கிய குரலில் மாற்றம் விதைத்தவர்,

நாதியற்ற மக்களின் தலைவர்,
விளிம்பு நிலை மக்களின் ஒளி விளக்கு,

ஊமைகளின் தலைவர், தொழிலாளர் நலன் காத்தவர்,

தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை, பெண்களின் தன்மானம் காத்தவர்,

 வறுமையில் கூட வரலாறு படைத்தவர். புறக்கணிப்பின் வலி அறிந்தவர்,

தன் வழி தனி வழி எனப் போராடிய மாமனிதர்,

பொருளாதார நிபுணர், பெண் உரிமை மீட்டவர்.

தொழிலாளர் நலன் காத்தவர், ஆண் பெண் ஒரே ஊதியம், எட்டு மணி நேர வேலை, பிரசவ கால விடுமுறை, பெண்ணுக்கும் சொத்தில் உரிமை என அனைவருக்கும் போராடியவர்.

கற்பி ! ஒன்று சேர்! புரட்சி செய்! என்ற கொள்கையோடு சாதி மத பேதம் இல்லா உலகை உருவாக்கியவர்.

எங்கள் விடிவெள்ளி அம்பேத்கார் சரித்திர நாயகன், தன்மான சிங்கம், புரட்சியாளன், கல்வியாளன், இந்திய அரசியலமைப்பின் தந்தை,

உலக நாடுகளில் பட்டம் பெற்றவர், 9 மொழி அறிந்தவர், எல்லாத் துறைகளிலும் ஞானமும் அறிவும் பெற்றவர், பொருளாதார நிபுணர், எல்லோருக்கும் மாணவர் எங்கள் அன்பு தலைவர்.

இந்தியாவின் தலைசிறந்த மனிதருள் முதல் மனிதர் அம்பேத்கார்.

பாரத ரத்னா விருது பெற்ற எங்கள் தேசத்தின் விலை மதிப்பற்ற அரிய சொத்து.

அண்ணலே மீண்டும் பிறந்து வா இன்னும் இத் தேசத்தில் வேலை இருக்கிறது பிறகு ஓய்வெடுக்கலாம்.

ஜெய் பீம்.

அ . மதுமிதா, 7 இந்திரா காந்தி தெரு, கக்கன் காலனி, கேகே நகர், திருச்சி 21.