மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி சிறப்புகள்

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி 

மலைகளில் சிறப்பான மேருமலை யாகத்தில் சிறந்த அஸ்வமேத யாகம் நதிகளில் பேறு பெற்ற கங்கை நதி
போன்று விரதங்களில் சிறந்தது சிவத்துடன் சம்பந்தமான சிவராத்திரி!  

முக்தியும் புத்தியும் கிட்ட வைத்து
செய்த கோடி பாவங்களைத் தீர்த்து  நினைத்த காரியம் நிறைவேற்றி நெஞ்சுக்கு நிம்மதி தரும் சிவராத்திரி!

பேரின்ப காரணன் 
தூய தன்மையன் 
*சிவன்* என்பதன் பொருளாகி ,
தன்னை அடைந்தவர் துன்பம் துடைத்து இன்பம் தருகின்ற, 
அக இருளை நீக்கி 
சிவ ஒளியை நம்முள் அமர்த்தும் இராத்திரியான சிவராத்திரி!

உமை தேவி விளையாட்டாக /
சிவன் கண்ணினை மூட
இருள் சூழ/ தேவகணங்கள் தடுமாற, லிங்கபூஜை செய்து,
நான்கு ஜாம பூஜைகளை விதிப்படி  
தேவர்கள் மேற்கொள்ள, 
சிவனும் தன் நெற்றிக்கண் திறந்து தண்ணொளியாக மாற்றி 
தேவகணத்தை *இரட்சித்து* 
உலகின் இருள் நீக்கி
அக இருளை நீக்க சிவ ஒளி தேவை என உணர்த்தும்  சிவராத்திரி!

தேவர்களும் அசுரர்களும்
வாசகியைக் கயிறாக்கி
மந்தாரமலை மத்தாக்கி
பாற்கடலை கடையும் போது
வாசுகி கக்கிய விஷத்தை 
சுந்தரர் உருண்டையாக்கி
 எடுத்து வர,
சிவன்  சாப்பிட்டு நீலகண்டனாக ,
விஷம் உடலில் பரவாதிருக்க உமையுடன் தேவர்கள் கண் விழித்து 
தொழுது உளமுருகி அழுது உடல் ஸ்தம்பித்து ஆடி அலறி பாடி பரவி 
விஷத்தின் உஷ்ணம் குறைய பிரம்மன்/திருமால்/ரிஷிகள்
 ஆறு கால பூஜை செய்து 
"சிந்தை/செய்கை/வேள்வி/வாக்கு சீர் இந்த ஐம்புலன்களால் முந்தையான காலம் என்னை எய்திடும் முக்கண்ணன்!" என திருவாசக வரிகள் மெய்ப்பிக்க 
பாடி வழிபட்ட தினமான சிவராத்திரி!

ஆணவத்தால் அறிவிழந்து
அடிமுடி தேடிய பிரம்மன்/திருமால்
 தன்னை உணர 
அழல் உருவத்தில்/ஜோதி பிழம்பாக
"திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை உரு நாம் அறிய அந்தணனாய் ஆட்கொண்டு ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளெனக் கொட்டோமோ?"
என்று *திருவாசகம்* வரியாகி
 அண்ணாமலையானாக 
பிரகாசித்த சிவராத்திரி!

திருநாகேஸ்வரர் கோயிலிலே சிவராத்திரி பூஜை காண கொடியவன்
*சுகுமாறன்* சிவகணமான,
சிவாலயங்களுக்கு விளக்கேற்ற எண்ணெயை சிவராத்திரியன்று கொடுத்த கலிங்கத்து குணநீதி 
மன்னன் *குபேரனான*,
சிவராத்திரி பூஜை பங்கேற்க முற்பிறவி பிற்பிறவி பலனறிந்த 
*விபரீசன்* மன்னன்,
குரங்கான பிறவியில் தன்னை அறியாமல் வில்வ இலைகளை
சிவராத்திரியன்று சிவ பார்வதி சிலைக்கு கிள்ளிப் போட 
*முசுகுந்த சக்கரவர்த்தி* யான,
எலி பிறப்பெடுத்த வேளையில் 
சிவன் கோயிலில் நெய் விளக்கு திரியை தன்னை அறியாமல் 
சிவராத்தியில் குதித்து ஓடி தூண்டிவிட/வாமனனுக்கு
மூன்றடி மண் கொடுத்த 
*மாபலி சக்கரவர்த்தியான*,
மான் பிறவி எடுத்த போது 
வேடன் ஒருவன் சிவராத்திரி பூஜை செய்வதைக் காண/ மறுபிறவியில் சத்தியம் நேர்மைக்கு பெயர் போன ராமனுக்கு படகோட்டியான *குகனாக*,
எனும் அத்தனை சிறப்புகளும்
"தொட்டும் நோய்கள் பற்றி விடாமல் துயரில் நெஞ்சம் தோய்ந்துவிடாமல் பற்றும் பாசமும் மாந்தர் ஏன் திட பகுதிக்கும் அவன் நாமும் சரணடைய!"
சிவராத்திரி பலனான நிகழ்வுகளே!

சித்திரையில் உமாதேவி 
வைகாசியில் சூரியன் 
ஆனியில் விநாயகர் 
ஆடி மாதம் முருகன் 
ஆவணியில் சந்திரன் 
புரட்டாசியில் ஆதிசேஷன்
ஐப்பசியில் இந்திரன் 
கார்த்திகையில் சரஸ்வதி 
மார்கழியில் லட்சுமி 
தையில் நந்திதேவன் 
மாசியில் தேவர்கள் 
பங்குனியில் குபேரனால்
வழிபாடாகி சிறப்புடையதென
சிவராத்திரி *விரத கல்பம்* நூலில்
பதிவான சிவராத்திரி!

சங்கடங்கள் நீங்க/காரியம் கைகூட வில்வம் மகிழம் பூ சாத்தி,
ஆயுள் விருத்தி/வியாபார விருத்தி அடைய செந்தாமரை மலர்களாலும், தம்பதி ஒற்றுமைக்காக மனோரஞ்சிதம் கொண்டு,
புத்தி கூர்மை/மன சஞ்சலம் நீங்க 
வெண்தாமரை, மல்லிகை நந்தியாவட்டையாலும்,
 கடன் நீங்க/விவாக பிராப்தம் கூட அரளி ,செவ்வந்திப் பூ கொண்டு, சுகபோகம் ,உறவினர் ஒற்றுமைக்கு மரிக்கொழுந்து  மலராலும்,
தொழில் விருத்திக்கு செம்பருத்தி மலர் கொடுத்தும் ,
தரித்திரம்/அவச் சொல் நீங்க 
நீல சங்கு *மலர்* சாத்தி/ சிவபூஜை
செய்ய பலன்கள் கூடும் சிவராத்திரி! 

நோயற்ற வாழ்வு கிட்ட தூய நல்லெண்ணெய், 
தீர்க்காயுசு கிட்ட பசுவின் பால் 
துக்கம் நீங்க தேன், 
அஞ்ஞானம் நீங்க எலுமிச்சம்பழம், ஈசன் காலடியில் வாழும் பேறு 
பெற இளநீர் ,
சாதிக்கும் மனோபலம் கிட்ட பஞ்சாமிர்தம், 
சகல சம்பத்தும் கிடைக்க தயிர் ,
நீங்கா செல்வம் கிட்ட திராட்சை சாறு,
வயிற்று உபாதைகள் நீங்க அன்னம்,
மன நிம்மதிக்கு கங்கை நீர், அஞ்ஞானம் விலக சந்தனம் பன்னீருடன் ,
சகல ஐஸ்வர்யம் கிடைத்திட விபூதியால் 
*அபிஷேகமாகும்* சிவராத்திரி!

ஒற்றைப்படையில் வில்வத்தை 
நரம்பு கீழிருக்கும் படி சாத்துதல்,
வெள்ளெருக்கம் பூ /ஊமத்தை/நீறு கொண்டு அழகு படுத்தல், 
குழந்தை இல்லாதவர் 5-7மணி வரை தட்சிணாமூர்த்தி வணங்குதல் ,
இரு கரம் சிரம் மேல் குவித்தல், மும்முறை கொடி மரம் வணங்குதல் ,
ஆண் எனில் அஷ்டாங்க நமஸ்காரம் பெண் எனில் பஞ்சாக நமஸ்கரித்தல் செய்து *வணங்கும்*
முறையான சிவராத்திரி!

பீடம் *பிரம்மன்* சொரூபம்,
 மத்திய பாகம் *மாதவன்* சொரூபமாகி, மேல்பாகம் *ஈசனின்* சானித்தியமான லிங்கத்தினை வழிபட்டு
முக்தி அடைந்த *கண்ணப்பனும்*,
சிவபதம் பெற்ற *யானை* 
அரசாளும் தன்மை கிட்டிய *சிலந்தி*  
ஆயுள் பெற்ற மார்க்கண்டேயனும், 
பயனடைந்ததை நினைந்து,
மோட்சம் கிட்ட புற்று மண் லிங்கம் 
பூமிலாபம் பெற ஆற்றுமணல்லிங்கம்/ திரவிய லாபம் தரும் பச்சரிசி லிங்கம்/ஞான விருத்தி தரும் ருத்ராட்சலிங்கம், ஆயுள் விருத்தி கிட்ட புஷ்ப லிங்கம் ,உடல் வலிமை தரும் மாவுலிங்கம் சுகம் தர பழ லிங்கம் 
நிலைத்த லக்ஷ்மி கடாட்சம் கிட்ட ரத்தின லிங்கம்,
வேண்டிய வரம் பெற மண் லிங்கம், 
தர்மம் வந்தடைய உலோக லிங்கம், 
சகல இன்பம் தரும் சந்தன லிங்கம் என சிவராத்திரியின்
லிங்க வழிபாடு பலன்களை 
உணர்த்தும் சிவராத்திரி!  

லஷ்மி வாசம் செய்யும் மர இலை,
ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையான இலை,
உலர்ந்து போனாலும் 
சமர்ப்பித்தலான இலை,
1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் தரும் இலை ,
கங்கையில் நீராடிய பலனாகும் இலை அஸ்வமேத யாகம் செய்த 
பலன் தரும் இலை 
எனும் சிறப்படையுடைய ,
மாதப்பிறப்பு/சதுர்த்தி/அமாவாசை பௌர்ணமி/அஷ்டமி/நவமியில் பறிக்கக்கூடாது என்ற 
தாத்வர்த்தமாகிய பெருமை மிக்க
*வில்வ இலையை*
சிவனின் கழுத்தில் 
சமர்ப்பிக்கும் சிவராத்திரி!

இல்லறம் இன்பமயமாக, அன்னியோன்ய அன்பு கிட்ட 
தம்பதி சமேதரர்களாக ,
நாலு ஜாமத்தில் ஒரு ஜாமமாவது 
*சிவ வழிபாடு* செய்ய 
உணர்த்தும் சிவராத்திரி! 

உணவு உறக்கம் விலக்கி 
திருவாசகம்/கோளறு பதிகம்/நடராஜ பத்து/சிவபுராணம் /லிங்க புராணம் படித்து/பஞ்சாட்சரம் மந்திரத்தை உச்சரித்து அனுஷ்டிக்கும் விரதமுறை
என்று நந்திக்கு சிவன் உபதேசித்து நந்தி தேவர் தேவ கணங்களுக்கும்,  தேவர்கள் ரிஷிகளுக்கு உபதேசித்து, ரிஷிகளின் மூலம் மனிதர்களுக்கென உபதேசமாகி/எம பயம் நீங்கவும், உடற்பிணிகள் நீங்கி/தான தர்மம் செய்ய கோடி புண்ணியம் கிட்ட 
*விரதமுறையான* சிவராத்திரி!

"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் 
துதியா பிழையும்/தொழாப் பிழையும் ஐந்து எழுத்தை சொல்லா பிழையும் எல்லா பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகாம்பரனே!" என்று வேண்டி,
எல்லா ஆலயங்களும் தரிசித்த பலன் கிடைத்து/அனைத்து நலன்களும் ஐஸ்வர்யமாகத் தருகின்ற ,
"ஓம் ஸ்ரீ வைதீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ பிரகதீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ கபாலீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ வெள்ளீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ மல்லீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ முனீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ சரபேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ விருப்பாசுராய நம 
ஓம் ஸ்ரீ அக்னீஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ சோமேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ ஸர்வேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ கும்பேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ நந்திகேஸ்வராய நம 
ஓம் ஸ்ரீ சதாசிவாய நம 
ஓம் ஸ்ரீ சாம்ப பரமேஸ்வராய நம" என்று *16 நாமங்களை*  கூறி வணங்கும் சிவராத்திரி !

வியாதி நோய் தீர பஞ்சகவ்வியம் முதல் ஜாமம் ,
ஒற்றுமை கிட்ட. பஞ்சாமிர்தம் இரண்டாம் ஜாமம்,
சண்டை பிணக்கு தீர 
தேன்/பால்/தயிர் மூன்றாம் ஜாமம்,
பாவம் போக கருப்பஞ்சாறு
நான்காம் ஜாமம்  என
 *அபிஷேகம்* காணும் சிவராத்திரி!

வில்வம்/குருந்தை/விளா/ நொச்சி 
என  முறையே நான்கு ஜாமங்களில் *அலங்காரம்* காணும் சிவராத்திரி!
தாமரை அரளி துளசி மூன்று இதழ் வில்வம் ஜாதி மலர் நந்தியாவட்டை *அர்ச்சனை மலர்களாக* 
நான்கு ஜாமங்களில் சாத்துபடி
செய்யும் சிவராத்திரி!

பால் அன்னம்/பாயசம்/ சர்க்கரை பொங்கல் /எள் அன்னம்/வெண்சாதம் 
என நான்கு ஜாமங்களும் 
*நிவேதனம்*  ஆகும் சிவராத்திரி!
பழமையான/வழிபாடுகள் பற்றி கூறும் /சமய கிரிகைகள் ஆன *ரிக்*,
இயற்கை மற்றும் மூத்தோர்களை வணங்கும் முறை பற்றி கூறும் *யஜுர்*/இசையோடான தோத்திரத்துடன் வழிபடும் *சாமம்*, சடங்குகளை விளக்கும் *அதர்வணம்* எனும் வேதங்களை  4 ஜாமங்களில்
*தோத்திரமாக*  காணும் சிவராத்திரி!

செம்பட்டு/மஞ்சள் பட்டு/வெண்பட்டு நீல *பட்டு* களை  முறையே
நான்கு ஜாமங்களிலும் உடுத்தி, வில்வம்/பலா/மாதுளை/நான்கு வித *பழங்களோடு* நிவேதனமாகி,
புஷ்ப தீபம்/நட்சத்திர தீபம்/3 முகம்,
ஐந்து முக தீபங்களின் ஒளி நடுவே
நான்கு ஜாமங்களிலும் 
"என்னிலே இருந்த உன்னை 
யான் அறிந்து கொள்ளும் முன்னே, என்னிலே இருந்த ஒன்றை 
யாரும் காண வல்லரோ?
என்னிலே இருந்த ஒன்றை 
யானும் கண்டு கொண்டேனே!
 என்று நம்முள்ளே உணர்த்தி
*ஆராதனை*  காணும் சிவராத்திரி!

ராமன் வனவாசம் இருந்த தண்டக்காரண்யம் பக்கம் உள்ள கமலாபுரம் ஊரிலே,
ரிஷிகளின் ஆசிரமம் இருந்த 
கலசரஸ் நதியோரம் கண்ட
கௌஸ்திமிதி ரிஷியிடம்
தன் மகள் வசுமதியை  மணக்க *வித்வஜிஷ்மர்*  ரிஷி கேட்க,
குந்திக்கு குழந்தை பாக்கியம் தர 
5 மந்திரம் அளித்த துர்வாசர் பற்றியும், பூமாதேவியை வளர்த்து தனக்குத் தந்த மார்கண்டேயர் பற்றியும்
திருமால் எடுத்துரைத்தபின் வித்வஜிஸ்மர் மகள்  வசுமதியை மணந்த கதையை படித்து/தெரிய
வேண்டிய  தினமான சிவராத்திரி!

சுவை உணர்வை  குறிக்கும் 
உணவு படையல் ... நீர் ,
நுகரும் புலனாம் சாம்பிராணி சந்தனம் அர்ப்பணிப்பு ... மண்,
ஸ்பரிசம் எனும் தொடு உணர்வாக சாமரம் வீசுதல்/ மலரிடுதல்.... காற்று,
ஒலியோடு தொடர்புடைய மணி
அடித்து/சங்கு ஊதுதல் .... ஆகாயம்,
கண் பார்வையுடன் தொடர்புடைய தீபம்/கற்பூரம் ஏற்றி வழிபடும் .... தீ 
என *பஞ்சபூதங்களில்* இறைவன் பணி உள்ளதை உணர்த்தும் சிவராத்திரி!

முதுகுத்தண்டில் 32 கட்டு இருப்பது போல கொடி மரத்திலும் 32 கட்டுண்டு என நம் ஆன்மாவை/தர்மத்தை உயர்நிலைக்கு கொண்டு வருகின்ற, நெடுஞ்சாண்கிடையாக வணங்கிட, *தான் என்ற அகந்தை போகும்* 
என்றே கொடி மரத் தத்துவம் 
உணர்த்தும் சிவராத்திரி!

*ந* - கிழக்கு முகம் உணர்த்தி 
நிலம் குறிக்கும்,
*ம* - தெற்கு முகமான
 நீரை குறிக்கும் ,
*சி* - மேற்கு முகம் சொல்லும் 
நெருப்பு குறிக்கும்,
*வா* - வடக்கு முகம் காட்டும் 
காற்று குறிக்கும்,
*ய* - மேல் நோக்கிய முகமான ஆகாயம் காட்டும்,
"நட்ட கல்லை நம்பியே சுற்றி வந்து நாலு பூ சாத்தி மொடமொட என சொல்லும் மந்திரம் நமச்சிவாயவே!"
 என்று அறிந்து ,
"மணி வெளுக்க மண் உண்டு துணிவெளுக்க தூள் உண்டு
மனம் வெளுக்க நமச்சிவாய 
மந்திரம் உண்டு!" என தெளிந்து ,
"கோயிலுக்கு செல்வது பக்தி இல்லை பக்தி செய்ய கோயிலுக்குப் போக வேண்டும்!" என உணர்த்தும் 
தினமான சிவராத்திரி!

புண்ணிய நதியில் மூழ்குவதாலும், அசுமேதயாகம் செய்வதாலும்,
 ஏழு கோடி மகா மந்திரம் ஜெபிப்பதாலும் கிடைக்கும் பலன் கிடைத்து/ பார்க்கக் கூடாததை பார்த்தாலும், உண்ணக்கூடாதவை உண்டாலும் ,கேட்கக்கூடாததைக்  கேட்டாலும்/நுகரக்கூடாது நுகர்ந்தாலும்/சொல்லக்கூடாததை சொன்னாலும் /கேட்கக்கூடாதது கேட்டாலும் /கொடுக்கக்கூடாதது
கொடுத்தாலும் உண்டாகும் அத்தனை பாவமும் போக்குகின்ற, 
சிவஞானம் கிட்டும்/ சொத்து சுகம் வரும்/முப்புரம் எரித்து அரக்கர்களை அழித்து /திருநடனமாடிய போது ருத்ரனின் அட்சம் எனும் கண்ணில் இருந்து தெறித்த *ருத்ராட்சம்*
அணிகின்ற சிறப்பு 
உணர்த்தும் சிவராத்திரி ! 

சிவ சிவ என்றிடட தீவினை அகலும் சிவசிவ என்றிட தேவரும் ஆகலாம் சிவசிவ என்றிட சிவகதி பெறலாம் என்ற திருமூலர் வார்த்தை உணர்ந்து,
 
துக்கம் கால்வாசி 
தூக்கம் கால்வாசி 
ஏக்கம் கால்வாசி 
மீதி உள்ள கால் வாசியை 
தவணை முறையில் வாழாமல் தவமுறையில் வாழ்வோம் சிவராத்திரியில் 
சிவனை வணங்குவோம்!

முனைவர் பெ. தமிழ்ச்செல்வி வாலாஜாபேட்டை