புரட்சியாளன் அம்பேத்கர் 020

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சியாளன் அம்பேத்கர் 020

புரட்சியாளன் அம்பேத்கார்

ஆயிரம் ஆயிரம் மக்கள் இன்று தலை நிமிர்ந்து வாழ தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் பீமாராவ் அம்பேத்கார்.

தன் காலம் அவமானம் 
நிறைந்தாலும், வருங்காலம் நிலை பெற்றிட வெறும் வார்த்தைகளால் அல்லாமல் இந்திய அரசியல் அமைப்பின் தந்தையாய் சட்டம் இயற்றி எல்லாக் காலமும் வாழ வைத்தவர்.

புறக்கணிப்பின் வலி அறிந்ததால் புது வரலாறு படைக்க எண்ணியவர்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்த மாமனிதர் அவர். ஆகவே நாதியற்ற மக்களின் நடுவே நம்பிக்கை எனும் ஜோதியை ஏற்றினார்.

சென்ற இடமெல்லாம் வலி , வேதனை, தீண்டாமை என்னும் சாதியின் பெயரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்.

பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன் ஆனார்.

வாய்ப்புகளை இழந்த மனிதர்கள் நடுவே புது வரலாறு படைத்தவர் .

வாழ்நாள் முழுக்க சமூக பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, பற்றாக்குறை நீங்க போராடிய மாமனிதர்.

சத்தம் வராத கூட்டம் நடுவே யுத்தம் நடத்த கற்றுக் கொடுத்தார்.

தவித்த வாய்க்கு தண்ணீர் தராத உயர் ஜாதி மக்களிடையே மகா சத்யா கிரகம் செய்து மகற்குளத்தில் நீர் குடிக்க அனுமதி பெற்றார்.


தீண்டாமை எனும் சாதி பேயை தன் கல்வி எனும் கூறிய வாளால் குத்திப் போட்டவர்.

அன்று அவமதிப்புக்கு உள்ளான மக்கள் இன்று அரசுப்பணியில் அமர ஆவண செய்தவர்.

சாதியின் பெயரால் வேரறுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களும் உயர் ஜாதி மக்களுக்கு இணையான கல்வி பெற உதவி புரிந்தவர்.

தன் இனத்திற்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் போராடியவர்.

சமத்துவ பாலின வேறுபாடுகளை களையவே தளராது பாடுபட்டவர்.

தன்மான சூரியனாய் தவறுகளை சுட்டரித்தவர்.

தன் என்ன கதவுகளை விசாலமாக திறந்து விட்டதால் இன்று எங்கும் எதிலும் பயமில்லாமல் எளிய மக்கள் பயணிக்கின்றனர்.

யாரும் படித்திட முடியா அத்தனை துறைகளையும் படித்து முடித்தார் பட்டமும் பெற்றார்.

இன்று கல்வியிலும் , பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் மிடுக்காய் பலர் நடை போட காரண கர்த்தா அவர்.

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மனிதன் பிற்காலத்தில் மாமேதை ஆனார் இந்திய அரசியல் அமைப்பின்  தந்தையாகி போனார்.

சரித்திரத்தில் எல்லோருக்கும் இடமிருந்தாலும் சாதனை நாயகனாய் தனித்த இடம் பெற்றவர் நம் அம்பேத்கார்.

புரட்சி நாயகனே புவி உள்ளவரை நினது புகழ் மறையாது. அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்காரே தலை வணங்குகிறோம். தன்னலம் கருதாத உனது சேவை கண்டு! ஜெய்பீம்.

-அ . கோமதி, 7 இந்திரா காந்தி தெரு, கக்கன் காலனி, கேகே நகர், திருச்சி 21.