வெள்ளை மனம்...! 036

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

வெள்ளை மனம்...! 036

வானம் முத்துச் சிதறல்களை அள்ளித் தூவிக்கொண்டிருக்க  மகள் தன்வி வீட்டை விட்டு வெளியே விளையாடச் செல்ல முடியாமல் தவிக்கிறாள். அகிலாவைத் தன்னுடன் விளையாட வரும்படி அடம்பிடித்து அழைக்கிறாள் .

ஏ தன்வி சும்மா சொல்றதையே சொல்லிட்டு இருக்காத எத்தனை தடவை சொல்றது ஒரு வேலை செய்யும் போது சும்மா கூப்பிடக்கூடாதே, ஒரு தடவை சொன்னா போது அம்மா வந்துருவேன்னு சொல்லி இருக்கறனல்ல எதுக்கு சும்மா சும்மா கத்திட்டு இருக்குற   டென்ஷன் படுத்தாத அப்புறம் பாரு அப்படி என்று அகில மகளுக்கு அறிவுரை பகர்கிறாள்.

 தன் வீட்டு வேலைகளை தன் மகளுக்காக விரைவில் முடித்துவிட்டு தன் மகளின் ஆசைகளுக்கு உயிர்கொடுக்க கைகளை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டே தன்வி வந்துட்டேன் பாரு என்று அழைக்கிறாள்.

 கூப்பிட்டா நீ வர மாட்டியா வாம்மா என்று தன் மகளை கொஞ்சி குரலில் அழைத்தாள். ஓடோடி வந்து அகிலாவின் கழுத்தை இறுகப்பற்றிக் கொண்டால் தன்வி. என் செல்லமே சொல்லுடா தங்கம் என்ன விளையாடலாம் நீயே சொல்லு என்று தன் மகளிடம் கேட்டால் அகிலா. அதுக்கு என்று தன்வி குரலை உள் இழுக்க தன் மகளை கட்டி அணைத்து மெல்ல மடியில் சாய்த்துக் கொண்டு தன் மகளின் கூந்தலை வருடி கொடுத்துக் கொண்டிருக்கும்போது இடி மின்னலுடன்    மழை பொழிய ஆரம்பித்து விட்டது .

மழை பெய்யும் போது தன் சிறு வயதில் மழை பெய்யும் பொழுது மழையில் நனைந்ததையும், மழையில் கப்பல் விட்டதையும் ,தன் அன்னை சூடாக பலகாரங்கள் செய்து கொடுத்ததும் நினைவில் ஓட அதுமட்டுமல்லாமல் தன் வீட்டுக்கு கூரையில் மழைநீர் கொட்டும் பொழுது அண்ணன்  அக்காவோடு போட்டி போட்டுக் கொண்டு ஒழுகும் மழை நீரைச் சேமித்ததையும் எண்ணி மனதிற்குள் புன்னகைத்து மகிழ்ச்சியாக இருந்த தருணம்  ,அடப்பிடித்து யார் முந்திக்கொண்டு அந்த ஒழுகும் இடத்தில் பாத்திரம் வைத்தது என்று எண்ணங்களை என்னை மெல்ல மனதுக்குள் சிரிக்கிறாய்.

 அம்மா விளையாடலாம் சொல்லிட்டு சும்மாவே இருக்கிறியா வாமா விளையாடலாம், பாப்பா மழை பெய்து எங்கடா போறது நான் உனக்கு கதை சொல்லட்டுமா என்று கேட்கிறாள் அகிலா. கதையா சரி சொல்லுமா என்று  தன்வி மெல்லத் தலை அசைக்கிறாள் அப்போது கதை கூற ஆரம்பித்தபோது நண்பர்களுடன் விளையாடச் சென்ற மகன் நித்துவின் மழையில் நனைந்தபடி வீட்டிற்குள் நுழைகிறான்.

 ஏன்டா தம்பி இப்படி ஏண்டா மழையில் நனைஞ்சிட்டு வர மழை வந்தா அம்மாச்சி வீட்ல இருக்கணும் ஏண்டா இப்படி இங்க நனஞ்சுட்டு வந்தே  என்று  கேட்டால் அகிலா.

நித்வின் உடனே அம்மாச்சி இல்லம்மா அம்மாச்சி வீட்ல யாருமே இல்லம்மா அதனால தான் இங்க ஓடிவந்தேன் என்று கொஞ்சும் மழலை பேச்சில் கூறினான் நித்வின்.

 அம்மாச்சி  வரலையா பாவன்டா மழைல்ல  எங்க நிக்குதோ பஸ்க்கு கிடச்சுதோ இல்லையோ ஒன்னும் தெரியல  பாவம் அப்படின்னு தன் குழந்தைகளுடன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அகிலா. ஆமாம்மா பாவம் அம்மாச்சி என்று அண்ணன் தங்கைகளும் அதங்கப்பட்டார்கள்

சரிம்மா நீ கதையைச் சொல்லுமா என்று தன்வி நச்சரிக்க அகிலாவின் மனதுக்குள் தன் அன்னையைப் பற்றிய ஆயிரம் என்ன ஓட்டங்கள் மனதில் மேலும் தொடங்கியது.  குழந்தைகளை நல்ல வளர்த்து உக்காந்து சாப்பிட வேண்டிய நேரத்துல இப்படி வயசான காலத்துல கஷ்டப்படறதப் பாத்தா எனக்கு ரொம்ப கட்டமா இருக்கிறது என்று எண்ணி கண்ணீர்த் துளிகளை மெல்ல விடுதலை செய்கிறாள் அகிலா.

 அகிலாவிற்கு உடனே தன் அன்னை சொல்லிக் கொடுத்த தன்னம்பிக்கை கதைகளே தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறாள்.

  வானமே மௌனம் காக்க ஆரம்பிக்கிறது, அவ்வேளையில் நித்வின் திடீரென்று அம்மா என்று அலற ஏன்டா தம்பி இப்படி கத்தக் கூடாதுன்னு   எத்தன தடவ சொல்றது உனக்கு இப்படி கத்தக்கூடாது, டென்ஷன் ஆகக்கூடாது, பொறுமையா இருக்கணும் சொல்லியிருக்கிறனா இல்லையா சொல்லு  என்று மகனை அதட்டிக் அகிலா.
சாரிமா நம்ம டவுனுக்குப்  போகும்பொழுது அந்த பாலத்துக்கு அடியில டென்ட் போட்டு குடி இருக்கிறாங்கல்ல அவங்க பாவம் தானே இப்ப நம்ம வீட்டுக்கு இடி மின்னல் அடிச்சா கதவு சாத்தி வீட்டுக்குள்ள உட்கார்றோம் அந்த குழந்தைகளை என்னம்மா பண்ணுவாங்க அவங்களை நினைச்சு எனக்கு கஷ்டமா இருக்குது அதுதான் என்றான் நித்வின்.

 அம்மா நான் படிச்சு நல்ல வேலைக்குப் போய் ஏழைகளுக்கு வீடு கட்டி தரணும் என்று நித்வின் கூறினான். அப்பாவும் பாவம் இந்த மழையில நனஞ்சுட்டு நடுங்கிக் வருவார்  என்று சொல்லிக் கொண்டே  
கடுமையான குளிரில் 
கொட்டும் மழையில் இதமான அம்மாவின் உடல் கதகதப்பில் பேசிக்கொண்டே இருந்த  குழந்தைகளும் உறங்கி விட்டனர். அகிலா தன் இரு குழந்தைகளையும் தன் சிறகுகள் என்னும் போர்வைக்குள் போர்த்தி அணைத்தபடி தன் இமைகளை மெல்ல மூடி உறங்கினால் தன் மகன் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நினைவுகள் அகிலாவும் தன் இமைகளுக்குப் போர்வை இல்லாமல்   கண்களை மெல்ல உறங்க வைத்தாள்.. 

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.