எல்லாமே நீ தான் கண்ணா...! 033

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

எல்லாமே நீ தான் கண்ணா...! 033

*எல்லாமே நீ தானே கண்ணே* 

என்ன வசந்தா! உன் குழந்தை  பேச ஆரம்பிச்சிடுச்சா???     என்ன ஆச்சு? என்று விசாரித்தாள் கமலா.
அவனுக்கென்ன ராஜா மாதிரி இருக்கான். பேச ஆரம்பிக்கும் போது பேசட்டும். ஊர் உலகம் பேசறதெல்லாம் பத்தி எனக்கு கவலை இல்ல...
அது இல்ல வசந்தா!! வயசு 8 ஆச்சு... எல்லா பிள்ளைகளும் ஸ்கூலுக்கு போறாங்களா!! நீ மட்டும் வீட்டுலேயே வச்சிருந்தா? நல்லா இருக்கா சொல்லு...ஏதோ ஆட்டிஷம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க... அதான் கேட்டேன்.
அக்கா... இப்படி என் பிள்ளையை பத்தி பேசுற மாதிரி இருந்தா... வீட்டு பக்கமே வராதீங்க. போய் உங்க பிள்ளைகளை நல்லா வளர்க்குற வேலையை பாருங்க..
வந்துட்டாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.. என் பிள்ளையை பத்தி... செத்து பிழைச்சு வந்துருக்கான் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போது, கண்களில் கண்ணீர் தான் வந்தது அவளுக்கு..
அழுது கொண்டிருந்த அவளின் கண்களை துடைத்தது பிஞ்சு கை. அந்த நிமிடமே, அவளின் அத்தனை கவலைகளும் மறந்து போனது..
வாடா  என் ராஜா குட்டி... என்று சீனுவை அணைத்துக்கொண்டாள் வசந்தா.
உன்னை எப்படியாவது பேச வச்சு காமிக்குறேன் பாரு என்று மனதில் நினைத்துக்கொண்டே வேலையை பார்த்தாள்.
மாலை 6 மணிக்கு, வழக்கம் போல, கந்த சஷ்டி கவசம் ஓடி கொண்டிருந்தது.
தம்பிக் குட்டிக்கு பால் எடுத்துட்டு வரேன்னு போனவளுக்கு ஒரே ஆச்சர்யம்... கூட கூட பாடிக்கொண்டே இருந்தது ஒரு குரல்...
அது யாரும் இல்லை... நம்ம சீனு குட்டி தான்...
அட செல்லமே... இத்தனை நாள் எல்லாத்தையும் மனசுல வச்சுக்கிட்டு இருந்தியா... என்று சீனுவுக்கு முத்தமிட்டாள்.
அப்போ தான் கமலாவுக்கு புரிந்தது. இவனுடைய  திறமை என்ன ன்னு கண்டுப்பிடுச்ச்சு  திறமையை வளர்க்கணும்.. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நிச்சயம் ஒரு திறமை உண்டு. எந்த ஒரு சூழ்நிலையிலும் கவலை கொள்ளாமல் குழந்தைகளை கொண்டாட கத்துக்கணும்னு கண்டிப்பாக புரிஞ்சுக்கிட்டேன் என்று பெருமிதம் கொண்டாள் வசந்தா...

-நித்தியாலட்சுமி, கும்பகோணம்