சுதந்திர காற்றை சுவாசிப்போம்..8

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..8

"சதந்திரக்காற்றை சுவாசிப்போம்"

முக்கால் நூற்றாண்டை கடந்தோம் !சுதந்திரம் அடைந்து!!

முன்னோர்நாளில் ஒற்றுமைஇழந்தோம்!
பரங்கியதந்திரவலையில் வீழ்ந்தோம்!

இன்னல் பல அடைந்தோம்!
இடர்பல ஏற்றோம்!!

வீருகொண்டெழுந்தன! வீரச்சிங்கங்கள் சில!
விவேகம் கொண்டெழுந்தன! அகிம்சை வழியிலே பல!
 தீவிரவாதத்திற்கு சுபாஷ் சந்திரபோஷ்சும்!
மிதவாத்திற்கும் காந்தியாரும்!

இரெண்டென பிரிந்தாலும் !சுதந்திர நோக்கங்கள் ஒன்றே!

 கவிதைகளால் தீமூட்டினார்பாரதி(தீ)!
விடுதலைவேட்க்கை
பாமரன் நெஞ்சத்திலும் பற்றியது! இந்தவேட்க்கைத்தீ!!

இன்னுயிரையும்! தன்னுயிரையும் ஈந்தோர்பலர்!!
இளமைவாழ்வையும்,
இல்லறவாழ்வையும்சிறையிலே! களித்தனர் பலர்!

அகிம்சை வழியிலே!
ஆகஸ்ட் பதினைந்திலே!
நள்ளிரவிலே! நம் இந்தியா சுதந்திரத்திலே!

பெற்றசுதந்திரத்தை பேணிகாக்க மறந்தோம்!!
பெற்றுத்தந்தவர்களை !நினைத்து துதிக்கமறந்தோம்!

கள்கடைமறியமல் கண்டோம்அன்று!
மதுக்கடையில்குடியரசானோம்நன்று, இன்று! 

மாதரையும்‌ மங்கையரையும் போற்றிபாடினோம் அன்று!
மங்கையரின் மார்பக வரிகட்டமறுத்து!
மார்பக்தையே அறுத்து !தட்டில் வைத்து!!
தலைநிமிர்ந்தோம் அன்று!!

மார்பினை பார்த்து!
மனைவியைதவிர
மற்றவர்களை தங்கையாய் எண்ணாது!!

மாணவி உள்பட!
மாதர் பலரை!
மழலைகள் சிலரை!
பாலியல் தொல்லையில் கொலைசெய்து குற்றம்மறைத்தோம்!

சாதிகள் இல்லையடி பாப்பா!
பாரதியார் ஏட்டிலே! குழந்தைக்கு மட்டுமேஆனது!
நம் நாட்டிலே!

சுதந்திர தென்றலிலே!
நஞ்சுகலந்த நாய்களும், பேய்களும் நாம்தானே!!

செப்புமொழி பதினெட்டிலே!
சிந்தனை ஒன்றிலே!
சிதறிகிடப்பவர் நாம்தானே!

சமதர்மகல்வியை!
சமதர்ம கொள்கையை!
குழியில்புதைத்து!
கல்வியை விற்று
காசாக்குவது நாம்தானே!!

இலவசகல்விக் கூடங்கள் எல்லாம் கலையிழக்கவைத்தது !நம் அரசியல் வாதிகள் தானே!!

நாணயமான நல்ஆட்சியாளனை! தேர்ந்தெடுக்க கூட
கைக்கூலி கேட்டவர்கள் நாம்தானே!

இந்தியதாயின் விலங்கொடித்தோம்அன்று!!
இன்று !ஈன்ற தாயை
முதியோர் இல்லத்தில் அடைத்தோம் நன்று!

போதும் நிறுத்துவோம்!
நாம்சுவாசிக்கும் காற்றில்!
நாமே நஞ்சுகலப்பதை!!

சுதந்திரம் பெற
தன்னுயிர் ஈந்த
தியாகிகளை!
அவர்கள் சிந்தியகுருதிகளை!

வீரத்தின் வித்துகளாய் நினைத்து!
வீருகொண்டெழுவேம்!!

வீரத்தமிழராய் !
வீரம் விளைந்த இந்திய நாட்டுக்குள்ளே! தமிழ்நாடு !வீரம் தீரம்
விளைந்த மண் என்பதை!

நிலைநாட்டிய
நம்தமிழ்நாட்டு விடுதலை போராளிகளை! தியாகிகளை!

கவிபடைத்து! கொடிபிடித்து! செக்கிழுத்து !
வாள் பிடித்து பெண்ணென மறந்து !
தற்கொலைப்படை யிலே அன்றேசிறந்து!
கப்பம் கட்டமறுத்து!

கடும் இன்னலிலும்!
இந்தியாவின்சுதந்திரபோராட்டத்திலும் !
தமிழ்நாட்டில் பங்களித்தோரை சாதி ,இனம் மதம்,எனபாராது!

சாதனைகளை
வரலாராக்கி!!
இந்தியதியாகிகளை
நினைவில் உயர்வாக்கி!

இந்தியதேசிய கொடியை! ஒவ்வொரு இந்தியனும்! நம்
இதயத்தில் பறக்கவிடுவோம்!
நாடு காக்கும்நல்லோர் வீட்டிற்கு! நாம்பாதுகாப்பு கொடுத்திடுவோம்!

என்பதை உறுதியாக்கி!
சுவாசிப்போம்சதந்திரகாற்றை!

பார்த்மாத்க்கே ஜே!
ஜெய்ஹிந்த்!!

கவிதை மாணிக்கம்