முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கலைஞர் கவிதைகள் 1000 பகுதி - 02

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கலைஞர் கவிதைகள் 1000 பகுதி - 02

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கலைஞர் கவிதைகள் 1000 பகுதி - 02

முத்தமிறிஞர் விருது கவிதைப் போட்டி கலைஞர் கவிதைகள் 1000 பகுதி - 02

***********************************************

0101

தமிழ்க் காத்த தலைவன் கலைஞர்.
===================
திருவாரூர் திருக்குவளையில் உதித்த சூரியனே //
தென்றலாய் வளர்ந்த செந்தமிழ் ஆதவனே //2

உயர் தமிழால் வளர்ந்த தலைவனே//
தமிழினை செம்மொழியாய் தந்த முதல்வனே// 4

பிறந்து வளர்ந்து மடிந்தோர் மத்தியில் //
பெரும் புகழ் கண்ட தென்னவனே //6

எழுதுகோல் கொண்டு  செங்கோலாய் நின்று //
ஏழைகளின்  இன்னலை தீர்த்த மன்னவனே //8

எண்ணத்தில் சிந்தனை கைவண்ணத்தில் தெரிந்தன //
உனது எழுத்துக்கள் தமிழன்னையை வரைந்தன //10

தமிழினை வீழ்த்த வந்தது வடமொழியே // 
தடம் தெரியாமல் போனது அவ்வழியே //12

தமிழ்நாட்டை வளைக்க நடந்தது சதி //
சாதூரியமாய் வென்றார் முதல்வர் கருணாநிதி //14

முரசொலி எழுத்தால் எல்லோரையும் இழுத்தீர்//
எங்களை காக்கவே அதிகாலையில் விழித்தீர் //16

ஓய்வின்றி உழைக்கும் உன்னத இளைஞர் //
தமிழ்க் காத்த தலைவன் கலைஞர் //18

ஜெ. சிவக்குமார், ஆசிரியர்.
அருளவாடி, விழுப்புரம் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0102. 

நம் மூதறிஞர் கலைஞர்

தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர்

அண்ணாவின் தம்பியாய் பெருமை
சேர்த்தவர்

பெரியாரின் பாதையை
பின்பற்றி நடந்தவர்

எம்ஜியார் சிவாஜியுடன்
நட்பில் இருந்தவர்

பராசக்தி திரைவசன
புகழுக்கு உரியவர்

பூம்புகார் காப்பியம்
திரையில்  படைத்தவர்

தொல்காப்பிய பூங்கா
இலக்கணம் தந்தவர்

திருக்குறள் கருத்தை
எளிமையாய் வழங்கியவர்

இராமனூசர் வாழ்க்கை வரலாறு உரைத்தவர்

கருப்பு மஞ்சள் துண்டுகள் அணிந்தவர்

இலங்கை அமைதிக்கு
உண்ணாநிலை இருந்தவர்

 *கூட்டாட்சி* தத்துவத்தை
எப்போதும் முன்மொழிந்தவர்

அவசரநிலை காலத்தை
துணிந்து எதிர்த்தவர்

பலகட்சி தலைவருடன்
நட்பாக இருந்தவர்

அரசியல் சாணாக்கிய
திறமை பெற்றவர்

பல்வேறு திட்டங்களை
நல்லாட்சியில் கொடுத்தவர்

பன்முக தன்மை 
கொண்ட தமிழறிஞர்

கலைஞர் பிறந்தநாளை
கொண்டாடி மகிழ்வோம்.

படைப்பாக்கம்
கவிஞர்.ச.குமார்
சிவகங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0103.

தலைப்பு
=================
 முத்தமிழ் வித்தகனே!!
================= 

அகக்கண்  அறிவில் அசரவைத்த அமுதசுரபியே!!

தமிழகத்தை தமிழால் தழைக்கச்செய்த முத்தமிழறிஞரே!!!

உழவர் சந்தையை உருவாக்கிய உதயசூரியனே!!!

திருவள்ளுவருக்கு சிலைவைத்த குன்றாத குறளோவியமே!!!

பகுத்தறிவை பகிர்ந்திட்ட பதுமநிதி பகலவனே!!

நினைவாற்றலில் நிறைவான நிலையான நிவேதனமே!!

வசனங்களாலே வரலாற்றை வடித்த வரப்பிரசாதமே!!!

மேடைப்பேச்சிலே மேதையான மேதினி மேதாவியே!!!

கலைகளை களையின்றி வளர்த்த கவிச்சிகரமே!!

அலைகளையும் அழகாக்கி மகிழும் அற்புதமணியே!!

மறதியின்றி இறுதிவரை உறுதியான  உன்னதமே!!!

காலத்தால் அழியாது காவியமான காளமேகப்புலவனே!!!

பேனாவால் பேராண்மையைப்  புகட்டிய பேரறிவாளனே!!!

முத்தமிழால் முக்காலத்தை உரைத்த முத்திரைவேந்தனே!!!!

பல்கலைக்கழகங்கள் பலவற்றை நிறுவிய பரிபூரணனே!!!

நிந்தித்தலையும் சிந்தித்தலாக்கிய மந்திர மலையானவனே!!

சாரதிகளையும் பாரதியாக்கி வாசமாக்கிய வானசாத்திரமே!!!

எதிர்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு  ஏணியாக்கிய எழிலோவியமே!!!

கவியருவி.
த.கலைச்செல்வி
காவேரிப்பட்டினம்
கிருட்டினகிரி.மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0104.

தலைப்பு
 தமிழும் கலைஞரும் 

திருக்குவளை தந்த தங்க மகன்/

திராவிடத் தாயின் மூத்த மகன்/

தமிழை வளர்த்தெடுத்த தமிழ் மகன்/

தமிழ் மீது பற்று கொண்ட தமிழன்/

தமிழோடு இணைந்த தமிழறிஞன் கலைஞன்/

தமிழை வளர்த்தவன் தமிழால் வளர்ந்தவன்/

திரைவசனம் அனைத்தும் திறம் வாய்ந்தவை/

பராசக்தி வசனத்தால் பார் போற்றும்/

நாடகங்கள் பல எழுதிய நாடகக்கலைஞன்/

நாவல்கள் எழுதிய நாவல் ஆசிரியன்/

சிறுகதைகள் எழுதிய சிந்தாமணி அவன்/

கவிதைகள் பல எழுதிய. மகாகவிஞன்/

இதழ்களின் மூலம் இவன் பேசினான்/

இதழ்கள் இவன் கதை பேசும்/

மடல்களால் பல மாலை செய்தவன்/

வரலாறு எழுதி வரலாறு படைத்தவன்/

கட்டுரைகளால் கருத்தை வெளிப்படுத்தினான் அவன்/

பேச்சால் மக்கள் மனங்களை வென்றவன்/

பல்துறைஅறிஞன் பார் போற்றிய கலைஞன்/

தமிழ் வாழும் வரை வாழ்வான்/

என்றும் வாழ்க அவன் புகழ் .

முனைவர்.இ.பாப்பு ரேவதி, திருநெல்வேலி.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0105. 

அவதாரத்தின் கலைஞனே//....   

பெண்களுக்கு கல்வி.  ஊக்கத்தொகை தந்தவரே//....     

விதவை பெண்களை கைம்பெண் ஆக்கியவர் //.... திருநங்கைகள் என்று பெயர் வழங்கியவர்//....

அரசியல் சாணக்கியனே தமிழ் நாட்டின் முதலமைச்சரே//

மாபெரும் நூலகம் அமைத்த ஆசானே//

ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கிய வள்ளலே//....  வசனம் எழுதும் திறன் பெற்றவரே// ....    சமூகநீதி தந்து மக்களை காத்தவரே//... வீறுகொண்ட பேச்சாற்றாலால் நின்றவரே//....           

உன் பேச்சால் மேடை அலறும்//....       

சாதனை சூரியன் என்றுபெயர் சூட்டியவரே//.... ஒளவையாரும் இருந்திருந்தால் செய்யுள் இயற்றிருப்பார்// ....       

தமிழ் தாய்க்கு கோவில் அமைத்தவரே//....

நடிக்கும் திறன் பெற்ற ஆசானே//

இலவச வண்ணத் தொலைக்காட் சி தந்தவரே// ....   தமிழ் தாயின் அழகிய தலைமகனே// சமூக நீதியின் அவதார கலைஞனே//.....

-த.மாலதி MA Bed தாரமங்கலம் ஒன்றியம்.ஓமலூர்TK சேலம் மாவட்டம்...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0106. 

தமிழ் மகன் 

கன்னித்தமிழ் கண்டெடுத்த கணவான் நீரே
 நெடுந்தமிழின் நீள் கவிஞன் நீரே//2
முத்தமிழில் மூழ்கிய முத்தாரத் தமிழ் ... 
 செந்தமிழின் பள்ளிக்கூடத் தமிழ் நீரே//4
செழுந்தமிழ் வளர்த்த பல்கலைக்கழகம் நீரே..
 தாய் தமிழின் தலைமகன் நீரே...//6
 தீந்தமிழ் கவசனாம்  திலகர் நீ...
திகட்டாத ஓவியக் கலையின் நீரே..//8
மோனை தேடும் மோட்சப் புயல் நீரே.... 
எதுகை நாடும் நாட்காட்டி நீரே..//10
இயைபு அண்ணாந்திடும் அழகன் நீரே..
  உவமைகள் மண்டியிடும் மதுஓடை நீரே..//12
பாட்டுகள் கொண்டாடும் மெட்டுகள் நீரே.‌.
மேன்மைகள் போராடும் மேதகன் நீரே..//14
பறவைகள் பறைசாற்றும் தமிழ்போற்றி  அல்லவோ.. 
      
இன்னும்  போற்ற  வார்த்தைதான் உள்ளனவோ..//16

தமிழால் போற்றினேன்  தமிழால் விருந்தளித்தேன்..

  இப்படிக்கு   தமிழ் புதல்வியாகிய நான் ..//18


தமிழால் வாழும்
இளமுனைவர்.ச. இசக்கியம்மாள்.
அகஸ்தியர் பட்டி.
திருநெல்வேலி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0107.

இறவாப் புகழ் கலைஞர் 

முத்தமிழே முக்கனியே எங்கள் உயிர்மூச்சே

எத்திசையும் புகழ் மணக்க இருந்தவரே

தமிழரசே தன் மானச் சிங்கமே

தட்சிணா மூர்த்தி யெனும் பெயரைக் 

கருணாநிதி யெனவே மாற்றி வைத்தாய்

காருலகில் கலைஞரெனப்  பேர் படைத்தாய்

ஏழையா னாலும்  கோழை யில்லை 

கோழை வாழ்வதில்லை வீரன் சாவதில்லையென்ற

 கோமானேநீ அய்ந்து முறை முதலமைச்சர் 

நாடே போற்றும்  நல்வாழ்வுத் 
திட்டங்கள்

ஆலைகளும் சாலைகளும் மென்பொருள் பூங்காவும்

கண்ணொளியும் காணொளியும்
தந்தாய் நீ

 நாவசைத்தால் நற்றமிழின் மணம் வீசும்

எழுத்திலும் பேச்சிலும் புதுப்புனல் பாய்ச்சினாய்

செந்தமிழுக்குச் செம்மொழி நிலை பெற்றாய் 

எண்ணற்ற காவியங்கள் படைத்த எழுத்தரசன்

ஓய்வெடுக்காது உழைத்தவரே ஓய்வெடுக்கச் சென்றீரோ

உலகம் உள்ளவரை உம்புகழ் 
இறவாதே

சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0108.

கலைஞர் போற்றும் கலைஞர்.  -தலைப்பு
முத்தமிழ்க் கலைஞரே முதல்வரே முழுமையே. //
திருக்குவளை நாயகனே திருமகனே திறவுகோலே. //
அஞ்சுக மைந்தனே அஞ்சா நெஞ்சனே//
அரசியல் பிரவேசம் இளம் ஆளுமையல்லவா. 
சொல்லெடுத்து உரைபாட சபை ஏறிடின்//
சங்கதிகள் உருண்டோடும் சரித்திரம் புரளும். //
இடைநிறுத்தி சொல்லாட யாருண்டு?
நடிகவேள் அளித்த பட்டம் கலைஞர். //
முத்தமிழும் முத்தமிட
முத்தமிழ்க் கலைஞர்.// 

காவியம் படைத்து காவியத் தலைவனானாய். //
கவிதை கரத்தில் கரை புரண்டிடும். //
வசனம் எழுதும் போதே நடிக்கும். //
வாழ்வியல் உம்மை மனதில் கொண்டு//
குறளமுது படைத்தாரோ வள்ளுவர் பெருமகன். //
நோவு உம்மைத் தொட அஞ்சியதோ? 
முதுமையை புறந்தள்ளி இளமையோடு வாழ்ந்தவரே//
தமிழ்ப்பால் அருந்தி தமிழன்னை மடியில்//
தவழ்ந்ததால் இந்தியை இறுமாப்புடன் எதிர்த்தீரே


நீர் மறைந்தாலும்  எழுத்துக்கள் வாழும். 
உம் எழுச்சி உரை கேட்டால்//
ஊமையும் சொல் உரைப்பான். 
மீளாத் துயில் கொண்டவரே
மீண்டெழுவாய். 

தமிழ் உள்ள வரை உம் புகழ் நிற்கும். 


ல. மதுமதி லட்சுமணன் ,

உசிலம்பட்டி ,

மதுரை மாவட்டம் உதவி தலைமை ஆசிரியை நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0109.

 ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அஞ்சாத சிங்கம் 

===================

அஞ்சுதத்தாய் பெற்றெடுத்த தமிழக சூரியனே

அகிலம் போற்ற வாழ்வாங்கு வாழ்ந்தவரே

தமிழ் உச்சரிப்பில் தமிழகத்தைச் தன்வசப்படுத்தியவரே

தமிழ்நாடு என்பதை சென்னையாக மாற்றியசுடரே

திரையுலகில் திரைக்கதை வசனத்தில் 
தனித்துவமே

ஏழை எளியோரின்‌‌ கலங்கரை விளக்கே

பெண்மை‌ போற்றி மகிழும் விடிவெள்ளியே


பெண்களை  பற்பல திட்டங்களால் உயர்த்தியவர்

அரசியல் சாணக்கியரே
ஆசிரியர்களின் காவலரே

அய்யன் வள்ளுவர்க்கு சிலைவைத்த தியாகச்செம்மலே

செங்கோலை ஐந்து முறை கையிலெடுத்தவரே

தமிழுக்கு மகுடம் சூடி மகிழவைத்தவரே

தமிழ் அறிவை வளர்க்க நூலகந்தந்தவரே

தாலிக்கொடுத்து தரணியில் பெண்ணை வாழவைத்தவரே

காவலர்க்கு காவலாணையம்
அமைத்து தந்தவரே

பாம்புக்கும் பல்லிக்கும் அஞ்சாத 
பண்முகச்சிங்கமே

முத்தமிழ் அறிஞரே முத்துக்களின் பவளமே

வாழ்த்த‌வயதில்லை அய்யா வணங்குகிறேன் 

கவிக்குயில்
செ.பேச்சியம்மாள்
ஆசிரியர்
தூத்துக்குடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0110. 

எழுதுகோலால் பலரின் தலையெழுத்தை மாற்றி, 
ஏழைகளின் கண்ணீர் துடைத்த மனிதகடவுளே! 
புறம்போக்கு இல்லத்திற்கு மின்சாரம் தந்தவரே! 
முத்தமிழ் வித்தகரே! செம்மொழி நாயகரே ! 

அண்ணா!சூரியனை தாரை வார்த்தார்
அந்த   உதயசூரியனை ஓய்வில்லாமல் சுமந்தவரே! 
என்னுயிரினும்  மேலான உடன் பிறப்புகள்
கணீரென்ற குரலுக்காக
தவமிருந்தது தமிழகம் 

அன்னை தமிழுக்காக அய்யன் திருவுருவசிலை
உலகமே விஞ்சும்படி உயர்த்தி காட்டியவரே! 
விஞ்ஞானமே தோற்கும் தங்கள் அறிவைகண்டு 
நாங்களென்ன தங்களுக்கு
விளையாட்டு பொம்மை

காகித ஓடம் கடலைமேல இயற்றியவரே
பெண்கள் இடஒதுக்கீட்டில்
இதயத்தில் நின்றவரே! 
தொல்காப்பியர்திருவள்ளுவர்இளங்கோகண்டதில்ல
பெரியார் அண்ணாவையும்
ஒன்றினைத்து கண்டோம்

மெரினா கடற்கரையில் உறங்கினாலும் தலைவர்
ஆன்மா உறங்காமல் தமிழுக்காக  விழித்திருக்கும்...... 

-கவிஞர் முனைவர் கா. கிருஷ்ணமூர்த்தி
தமிழ் கௌரவ விரிவுரையாளர், முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி தன்னாட்சி
வேலூர்-2
நெ:55/18, சின்ன லைன், தெரு டிட்டர் லைன், 
வேலூர்-1


@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0111. 

முத்தமிழறிஞர் கலைஞர்.

திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைத்த மகான்/
திறமையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டியவர்/
திகைக்க வைக்கும் நற்பணி செய்தவர்/

ஏற்றத்தாழ்வு நீங்கிட வேண்டும் என்று/
சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்தவர்/
சமபந்தி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சகாப்தம்/

நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள/
நானிலம் யாவையும் வீட்டிலிருந்தே காண/வண்ணத்
தொலைக்காட்சியை 
 இலவசமாகத் தந்த வள்ளல் /

சிலப்பதிகாரம் எனும் அமர காவியத்தை/
பாமர மக்களுக்குப் புரியும் வகையில்/
பூம்புகார் படமாக்கி பெண்மையைப் போற்றியவர்/

உலகப் பொதுமறை வான்புகழும் வள்ளுவம்/
மேன்மை உணர்ந்து குறளோவியம் படைத்தவர்/
கன்னியாகுமரியில் மாதானுபங்கியை சிலையெடுத்து வணங்கியவர்/

முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்/
கருணையை நிதியாக வழங்கும் தலைவர்/
தமிழும் திராவிடமும் இவர்பேர் சொல்லும்.


சு.ஜெயசித்ரா சுந்தரராஜன்,
ஸ்ரீ வில்லிபுத்தூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0112. 

கலைஞர் கருணாநிதி 
************************
குவளையிலேபூத்த அருள் நிதியே!

குவலயமேபோற்றும்நின் கூர்மதியே!

பேரறிஞர்அண்ணாவின் உடன் பிறப்பே!

செம்மொழியாம்தகுதியினை பெற்றுத் தன்தாய்! 

அறியாதோர்வாய்ப்பளித்த அறிஞர் நீயே!

வாழ்நாளில்போராட்டம் பலவும் கண்டாய்! 

வீழ்ந்தபின்னும்போராடி நீதி வென்றாய்!

நிலையாதுஇதயத்தில் நின்றபெரும் எழுதாளன்! 

தெற்கில் உதித்தொளிர்ந்த திராவிடச் சூரியனே! 

மஞ்சளாடைக்கண்ணாடி மயங்காத விழிப்பார்வை! 

மயக்குகின்றதமிழாலே மாநிலமே போற்றுபவன்!

ஓரிடத்தில் நில்லாமல் உதயமாகி எழுந்துவரும்!

கலைஞரென்றசூரியனால் கனிந்தமிழ் அழியாது!

உயிர்கலைஞா  திரவிடத்தின் சூரியனே    வாழ்க !

திருக்குவளை பெற்றெடுத்த தீந்தமிழ்ப் பாவலனே! 

உன் திறமைகளின் வார்த்தைகள் அடைக்கயியலா! 

இறந்தும் வென்றாய் இடஒதுக்கீட்டு போராட்டத்தில்!

திராவிடச் சூரியனே புகழாய்  வாழ்க!! 

கவிஞர். 
இ. ஜீனத்நிஸா
பி. ஏ. தமிழ்
காயல்பட்டினம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0113. 

கலைஞர் என்னும் தமிழ்...

யாருக்கும் சாமரம் வீசியவன் நீயில்லை 
எதற்கும் சமரசம் ஆனவனும் நீ இல்லை 
உனக்கு   சரிநிகர் இங்கு   எவருமில்லை 

சாதிக்க நீதானே எங்களின் தமிழெல்லை
அரசியலில்  நீ என்றும்  சாணக்கியனாம்
அருவுருவாய் வந்தபெரும் பொக்கிசம்நீ

தேடி நாங்கள் கற்ற இலக்கியம் நீரன்றோ
தேர்வில் கலங்கள் பலகண்ட காவியம் நீ 
உன்நிழலில் தமிழகம் கண்டது பலகோடி 

கருணையெனும்  கவின்மிகு  நிதியாலே
கலைஞர் என்ற பேரெழுத்தில்  நானிலம் 
பெற்ற சீர்மிகும் அருந்திட்டங்கள் கோடி 

எத்தனை சறுக்கல்களை  கண்டாலும் நீ 
எதற்கும் மயங்காத தலையாய் நின்றாய் 
எங்கள் லட்சியத்தீப்பொரி  நீயுமானாய்

தமிழிருக்கும் வரை   நீயும்  இருப்பாய்
புவிருக்கும் வரை உன் புகழுமிருக்கும் 
ஏனெனில் தமிழும் தமிழ்நாடும் நீதான்...

கவிஞர் முத்தையா மோகன்,
கோயமுத்தூர் 18 .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0114.

கலைஞரின் பேனா

பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., PGDCA.,

1. இலவசக் கல்வி வழங்கிய பேனா
2. உள்ளாட்சி தேர்தல் வரவைத்த பேனா
3. உழவர் சந்தை உருவாக்கிய பேனா
4. திருமண உதவி தந்த பேனா
5.     ஒதுக்கப்பட்டோருக்கு ஒதுங்கிடம் தந்த பேனா
6. கால்நடை பல்கலை அமைத்த பேனா
7. காவல்துறை ஆணையம் அமைத்திட்ட பேனா
8.  கிராமங்களுக்கும் சாலைவசதி தந்த பேனா
9. குடிசைமாற்று வாரியம் வழங்கிய பேனா
10.  குழந்தைகளுக்கு கருணையில்லம் கட்டிய பேனா
11.  கைரிக்ஷாவை கைகழுவ வைத்த பேனா
12.  சமதர்ம சமத்துவபுரங்கள் சமைத்திட்ட பேனா
13.  சிப்காட்டை சிறகடிக்க வைத்த பேனா
14.  சேலம் இரும்பாலையை செப்பனிட்ட பேனா
15.  தமிழுக்கு செம்மொழி வாங்கித்தந்த பேனா
16.  தாழ்த்தப்பட்டோர் துறை தந்த பேனா
17.  நெய்வேலி 2ம் அலகை நெய்திட்ட பேனா
18.  நேரடி நெல்கொள்முதல் அமைத்த பேனா

கலைஞரின் பேனா செய்ததோ பல...
இங்கு நான் தந்திருப்பதோ ஒரு சில...

-பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ* M.A., PGDCA.,

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0115. 

தலைவர்

அன்பும், பண்பும் பாசமும் காட்டினார், 

நேயத்துடன் வாழ்ந்து வளங்களை கூட்டினார், 

தமிழன் வாழ்வில் வறுமையை ஓட்டினார், 

வந்தான் வென்றானென புகழ் நாட்டினார், 

அண்ணாவின் அன்புத்
தேரினை ஓட்டினார், 

தமிழர்க்கு தன்மான
உணர்வை உணவாக்கினார், 

வீரமெனும் குணத்தோடு
வளர்ந்து சீராட்டினார், 

உலகம் போற்றிய
ஒப்பற்றவரை பாராட்டுவோம், 

உடன்பிறப்பு என்னும்
சொல்லுக்கு உயிரூட்டியவர், 

சாகாவரம் பெற்று
சரித்திரம் ஆனவர், 

தமிழை காத்து நின்ற மூலவர், 

அந்நிய இருளுக்கு
இவர் ஆதவ(ன)ர், 

தமிழ்த்தாயின் இதயத்தில் வாழும்
மூத்தவர், 

பகைவர்க்கும் அருள் வழங்கும் பண்பாளர், 

எல்லா தொகுதிக்கும்
வெற்றி வேட்பாளர், 

உள்ளதை உள்ளபடி பேசும் உத்தமர், 

தமிழ்ச்சோறு உண்ண
பாடுபட்ட உழவர், 

தலைமைப்பண்புக்கு
ஏற்றதொரு தலைவர். 
             

-சு. ஜெகநாத சேதுபதி, இராமநாதபுரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0116.

கலைஞர் தமிழ்மொழி விடி வெள்ளி 

கலைஞர் தமிழ் இயல் இசை// 1
நாடகம் என முத்தமிழ் சிறப்பு//2
பேச்சில் ஓர் இனிமை நடை//3
மக்கள் மனதில் நீங்கா இடம்//4
தேன் சொட்ட சொட்ட சுவை//5
போல் இவரது பேச்சின் அருமை//6
எழுத்துக்களோ எண்ணக் குவியலில் தொகுப்பு//7
புதினங்கள் புத்திசாலிகளை உருவாக்கி மகிழும்//8
இவரது படைப்புகள் பகுத்தறிவு மிக்கவை//9
சோற்றுக்கு ஒரு அரிசி பதம்//10
இவர் அறிவுக்கு பூம்புகார் திரைப்படம்//11
சிறப்பு பெற்ற நிலையில் இன்றும்//12
சிங்கார சென்னை சிறப்பு பெற//13
வள்ளுவர் கோட்டம்  கட்டிட அழகு//14
எண்ணற்ற பாலங்கள்   தலை நகர்//15
சென்னையில் இவரால் உருவாக்கி இன்று//16
வரை பயன்பாடு என பெருமையுடன்//17
மேதகு கலைஞரை போற்றி வாழ்த்துகிறேன்.//18


பொ.சுப்புலட்சுமி
பி.லிட்.எம்.எ
கல்விச் சுடர் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0117.

கலைஞருக்கோர் கவிமாலை!!

 பார் போற்றும் பாரதத்தில்// தன்னிகரில்லா தமிழகத்தில்//

 காவிரி கரையோர, திருக்குவளையில் உதித்த இளஞ்சூரியனே//
 திருக்குறளுக்கு உரை எழுதிய திருமகனே//

 சங்கத் தமிழின் தவப்புதல்வனே//
 ஐந்து முறை அரியணை ஏறிய ,அரசியல் ஆசானே//

 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் படைத்த கல்விப் புரட்சியாளரே//

 அரை நூற்றாண்டு தலைமை வகித்த, தனிப்பெரும் தலைவரே//

 முடியுமான்னு நம்மால் என்றால், முடித்தே தீருவேன் எனக் கூறும் வெற்றியின் நாயகனே//

 காந்தச் சொற்களால், கணீர் குரலால், மக்களை கவர்ந்தவரே//

 சிறுபான்மையினரின் வாழ்வினை, சீர்தூக்கிய சிந்தனையாளரே//

 முத்தமிழின் முன்னுரையே//

 முடிவறா உன் சிந்தனைகளும் செயல்களையும் ,
எம் தளபதி தொடர்ந்திடவே//
 இந்நாளும், என்னாலும், வையம் வாழ, வாழ்ந்திடுமே நின் புகழ்!!

ரா.சாந்தி ஆசிரியர், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0118.

செம்மொழியின் மாமனிதன்.. 

கடமைக்கு வாழாதவர் கடமையாக வாழ்ந்தவரே,,,,. 

வளர்ச்சி கொடுத்து மகிழ்ச்சி கொடுத்தவரே,,,, 

 அடுக்கு மொழியில் இலக்கியம் எழுதியவரே,,,,. 

தமிழில் அருமை பெருமை உணர்த்திவரே,,,,. 

சாதிப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்து சாதித்தவரே,,,,. 

உங்கள் சிந்தனை மண்ணில் சாதனை,,,, 

 வரலாறு படித்து வரலாறு படைத்தவரே,,,, 

தமிழை உயிரை போல நினைத்தவரே,,,,  

கலைத்துறைக்கு பாடல் எழுதிய நாயகனே,,,, 

சட்டத்தோடு மக்களுக்கு திட்டம் கொடுத்தவரே,,,, 

சமத்துவபுரத்தில் சமமாக வாழ வைத்தவரே,,,, 

காவல்துறை கடமைக்கு சுதந்திரம் கொடுத்தவரே,,,, 

கற்பனையில் பாடல் எழுதிய நாயகனே,,,, 

சிந்தனையில் காவியம் எழுதிய நாயகனே,,,,  

குடிசை வீடு மாளிகையாக மாற்றியவரே,,,, 

மாற்று திறனாளிக்கு மாற்றம் கொடுத்தவரே,,,, 

சம்பவமாக வாழாமல் சரித்திரமாக வாழ்ந்தவரே,,,, 

தமிழின் படிப்பாளி தமிழகத்தின் படைப்பாளி,,,,

 கவிஞர் சுஜி மாதேஸ் பெரிய புளியம்பட்டி கிராமம் கிருஷ்ணகிரி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0119.

செந்தமிழ்த் தலைவன்...

திருக்குவளையில் சுடரொளியாய் தோன்றிய பகலவன்,

பார் போற்றும் மக்கள் தலைவன்,
ஏழை எளியோர்களின் எழில் வேந்தன்,
எத்துறையிலும் தடம் பதித்த ஏகலைவன்,

வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் ஆயிரம்,
தோல்வியுராது கண்ட சாதனைகள் நூறாயிரம்,
செந்தமிழை தொடுத்துத் தந்த குறலோவியம்,
சோதனைகளை பல சாதனைகளாக்கிய சொல்லோவியம்,

தமிழ் மொழிக்கு மூத்தவனும் நீ,
கற்பவற்கு முத்தமிழை படைத்தவனும் நீ,
வாசகங்கள் அனைத்திலும் அர்த்தம் நீ,
என்றும் வாடாத வாசமலரும் நீ,

காற்றிலே கலந்த மக்கள் காவலன்,
கடலிலே கரைந்த தமிழ்க் காதலன்,
வள்ளலாக வலம் வந்த வல்லவன்,
பலரின் வாழ்விற்கும் ஒளியான தென்னவன்,

தமிழ் உலகம் பேசும் கலைஞன்,
வள்ளுவனையும் வானளவு உயர்த்திய வானவன்,
வசனங்கள் பல படைத்த வித்தகன்,
தமிழர்கள் மனதில் மறையாத உத்தமன்,

 -கு.சுரேஷ்
உதவிப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0120. 

தரணிபோற்றும் , தானைத்தலைவன்:

அஞ்சுகத்தின் அடிவயிற்றில் அருமை புதல்வனாய்!
அன்றே பிறந்திட்டாய் அழகுதமிழ் காவலனாய்!
அகவை பதிநான்கில் அரும்தமிழ்பத்திரிக்கை எழுத்தாளனாய்!

சாதிகொடுமைக்கு சவுக்கடிதரும் தலைவர்கள் ஈர்ப்பால்!
சாதனை படைகக்க அரசியலில் நல்பொறுப்பால்!
சரித்திர தடம்பதித்தார்
குளித்தலை தொகுதியில் !

நாடகம் இலக்கியம் திரைவானில் ஜொலிப்பால்!!
நாடே! பாராட்ட உயர்ந்தார்
அவர்உழைப்பால்!
நல்லதோர் தம்பியாய்
அண்ணாபெரியார்க்கு நட்பால்!!

செம்மொழி மாநாடு கண்ட சிங்காரதமிழர்!
செந்நா புலவருக்கு சிலைகண்ட தமிழகமுதல்வர் !!
செங்கடலோரம் கண்ணகிக்கு  சிலை அழங்காரம்!

பெண்கள் முன்னேற 
பெரியார் அண்ணா! வழியில்  தொண்டாற்றி பெரும்சாதனை கண்டவர்!!
பெரும்புகழ் குறளுக்கு
குறளோவியம் தந்தவர்!!

அரசியலில் சாதனை
இதுவரை தோற்காதது!
அருந்தமிழிலே! முனைவர் பட்டம் பெறவில்லை!
ஆனாலும், முனைவர்பட்டம் பெற்றவர்கூட, உமக்குநிகரில்லை!

ஊ ,முத்துமாணிக்கம்
சங்குபட்டி 
திருவேங்கடம்தாலுகா,
தென்காசிமாவட்டம்,

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0121. 

கலைஞர் என்னும் வித்தகர்

அரசியலில் எதிரிகளையும் மதிக்கும் பண்பாளர்//

திரைத்துறையிலும் கதைவசனத்தினால்  முத்திரை பதித்தவர்//

மாபெரும் பல கலைஞர்களை உருவாக்கியவர்//

பேச்சாற்றலால் மாபெரும் கவிஞர்களை கவர்ந்தவர்//

சாதிமத பித்து எனும் சனி//

தொலைந்தால்தான் சமத்துவமெனும் ஞாயிறு பிறக்கும்//

என்று சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்//

விதவை எனும் வெற்றுச் சொல்லை//

கைம்பெண் என்னும் மங்கலச் சொல்லாக மாற்றியவர்//

ஊனமூற்றோர் எனும் கேலிச் சொல்லை//

மாற்றுத்திறனாளி என்னும் மந்திரசொல்லாக மாற்றியவர்//

திராவிடத்தின் ஞாயிராக ஒளி வீசுபவர்//

தமிழை செம்மொழியாக மாற்றி பெருமைப்படுத்தியவர்//

தகவல் தொழில்நுட்பத் துறைக்கென ஒரு//

கொள்கையை அறிவித்தவர் கலைஞர் தலைமையான்//

மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நுலகத்தை//

உருவாக்கி அனைவரின் படிப்புத் தாகத்தை தீர்த்தவர்//

அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஒரே தலைவர்//

சி. சங்கீதா
கிருஷ்ணகிரி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0122.

     முத்தமிழ்ச் சாரதி
      ********************
முத்துவேல் கருணாநிதி ஐயா வந்தாரே

முத்தமிழைத் தன்
எழுத்தால்
அலங்கரித்தாரே

திரைத்துறையில்
பெயரினைத்தான்
நாட்டி வைத்தாரே

திரும்பும் திசையெங்கும் புகழ்
பரப்பினாரே

கவிதையிலே கற்பனையைத் தெறிக்க விட்டாரே

கல்விக்காய்ப் பல திட்டம் தந்திட்டாரே

ஏழைகளின் வாழ்வு தன்னை உயர்த்திட்டாரே

எப்போதும் மக்கள் நலம் காத்திட்டாரே

அரசியலில் ஆகச்சிறந்த
ஆளுமை இவரே

அன்றாட நாட்டு நிகழ்வின் நாயகராமே

நாடகத்தில் புதுமைகளைப் புகுத்தி வென்றவரே

நாட்டு மக்கள் நலனையே  நினைத்திருப்பவரே

ஆன்மிகத்தை அழகுத் தமிழில் ஆக்கித்தந்தவரே

.அடித்தட்டு மக்களுக்கும் புரிய வைத்தவரே

இராமானுஜம் தந்ததிலே இமயம்
ஆனவரே

இன்றும் என்றும் அழியாமல் நெஞ்சிலிருப்பவரே

 

விஜயலட்சுமி சீனிவாசன் திருமங்கலம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0123. 

கலைஞர் கருணாநிதி

அய்யா,

உம் புகழ் உரைப்பதால் என் 
இதழ்கள் பெரும் பாக்கியம் கொள்கிறது... 

அன்பைக் கொண்டு ஆட்சி செய்தவரே, 

இன்பமுடன் பழகி ஈசனாய் காத்தவரே

உண்மையின் உருவமென்று ஊரார்களால் உயர்த்தப்பட்டவரே, 

எம்மதமும் சம்மதமென்று ஏற்றம் கொண்டவரே, 

ஐம்புலன்களையும் போற்றி உலகை வெற்றிக்கண்டவரே,

ஒற்றைத் தமிழனாய் தரணியை தலைநிமிர்த்தயவரே, 

ஓங்கிய புகழைப்பாட ஔவையும் ஆசைக்கொள்வாள்,

தமிழ்மொழியின் பல படைப்புகளின் சொந்தக்காரரே

வாழ்வை அறியாதவர்களின்
 வலியைப்போக்கிய தமிழ்மகனே, 

மக்களின் மனதை வென்ற  
தனித்தமிழனே, 

 பாமரர்களால் பலமுறை முதல்வராக வெற்றிக்கொண்டவரே, 

தமிழை உலகெங்கும் எடுத்துரைத்த உத்தமரே, 

தமிழேப் புகழ்பாடும் தமிழ்த்தாயின் தவப்புதல்வனே, 

தான் நேசித்த மக்களின் நாயகனே, 

இளைஞர்களின் எழுச்சிக்கு 
எடுத்துக்காட்டாய் நின்றவரே, 

ஆசிரியரின் காவலனே காவலரின் ஆசானே, 

ஏழைகளின் வலியையும் மறைத்த வழிப்போக்கனே, 

மங்கைகளின் மனங்களில்  இடம்பெற்ற மணவாளனே, 

காவியங்களின் கதாநாயகனே வசனங்களின் வல்லாலனே.....

மு. பிரகாஷ்ராஜ்
சிந்தனைக் கிறுக்கண்,
திருச்சிராப்பள்ளி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0124.

Dr.கலைஞர் பிறந்தநாள் முத்தமிழறிஞர் விருது 
கவிதைப்போட்டி 
_________________________

அரியணையில்  முதல்வன்! கழகம் என்னும் 
     அமைப்புக்கோ தலைவன்நீ! தொண்டர்  நெஞ்ச
          ஆலயத்தில் இறைவன்! மனித நேயக்

கருனணயிலே  வள்ளல்நீ! இலக்கிய த்தின் 
     கற்பனையில்  வானம்நீ! பெரியார், அண்ணா
            கலவைக்கோர்  வடிவம்நீ! குறல்ம றைக்குப்

பொருள்வழங்கும்  மனிதம்நீ! கோள்க   ழுக்கும்
       புரியாத கணிதம்! திராவி  டத்தைப் 
            புதுபித்த துரிதம்நீ!தென்ன கத்தின் 

இருள்துடைத்தே  ஒளிபடைக்க  வந்த வன்நீ!
       இனம் ,நாடு,  மொழிகாக்கத்  தன்னைத்  தந்தே
             இன்னுமொரு  தலைமுறையும்  தந்த வன்நீ!

கேடுவரும்  தமிழுக்கெத்  திசையென்  றாலும் 
      கிளிர்ந்தெழுந்தே  தலைவைத்துத்  தடுத்த  வன்நீ!
         கிடைத்ததெல்லாம்  தமிழர்க்கே  கொடுத் தவன்நீ!         

பாடு 'நலங் கிள்ளி ,நெடுங் கிள்ளிக்' குப்பின் 
     பாவலன்நீ! நாட்டுக்கு காவலாய் இருந்தவன்நீ!
            உன்புகழ்  பல்லாண்டு வாழிய! வாழியவே!

       அரிமா கவிஞர்  முனைவர் ச.அய்யர் 
மதுரை.
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0125.

எனது பார்வையில் கலைஞர்


தமிழ் அகத்தில் முளைத்து தவழ்ந்தவன்
கவிதையை வசனமாய் வெறுப்பில்லாமல் கொடுத்தவன்
தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்த தலைமகன்
செங்கோல் செலுத்திய செம்மொழி சிகரம்
ஓய்வில்லாமல் தமிழகத்தை காத்த கரம்
மண் பூத்த திருக்குவளை மனிதர்
விண் பூத்த இளம்பரிதி கலைஞர்
வீறுகொண்டு கிளர்ந்து வீதியெங்கும் திரிந்து
மொழிக்காத்தாய், இனம் காத்தாய், மானம் காத்தாய்
மடிந்து கொண்டிருந்த மறத்தமிழனை மீட்டாய்
இலக்கணமும் இலக்கியமும், அறிவியலும் அரசியலும்
கண்கள் காண இன்றெங்கும் திருக்குறளும் 
அண்ணாவின் இதயத்தை இரவலாக கேட்ட இரங்கலும்
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கவிவரிகளும்
இந்திரஜித் ,வாலி பற்றிய புதிய பரிமாணமும்
பகுத்தறிவை, மொழி உணர்வை ஊட்டிய புரட்சியும்
பல்வேறு தலைப்புகளில் பாடிய கவியரங்கமும்
தமிழ் சமூகத்திற்கு அளித்த வள்ளலே
சங்கத்தமிழும்,கன்னித்தமிழும்  உமைவாழ்த்தி செல்லும் 
தமிழ் இருக்கும் வரை உன் புகழும் 
தமிழன் இருக்கும் வரை உன்  பெயரும் நிலைத்து நிற்கும் 


முனைவர் ஆ .கமலா 
திருவாரூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0126. 

மறுபடி பிறந்து வா

  தமிழ் என்ற மழையிலே அனைவரையும்//

 நனைத்த  கருணையின் நதியே எம் கருணாநிதியே//


 திருவாரூரில் உதித்த உதய சூரியனே//

 தமிழமுதினை நிதம் வாசித்த கீதமே//


 தமிழை மட்டும் சுவாசித்த வேதமே//


 திரையுலகின் கதை வசன பிரம்மாவே//


 வரலாற்று நாவலெழுதி வாழ்ந்த வரலாறே//


 ஐந்து முறை முதலமைச்சரான அஞ்சுகப்புதல்வனே//


 மக்களின் மனதில் மங்கல நாயகனே//


 தரணி என்றும் போற்றும் தாயகனே//


 விதவைகளுக்கு கைம்பெண்ணென பொட்டு வைத்த//


 மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை  என//

 அழகாய் பெயரிட்ட எங்கள் தாயுமானவனே//

 வையக தர்மத்தில் அழகிய சுடர்விளக்கே/

 கோடி சூரியனும்  தேடிடும் கலைஞரே//

 இங்கு விரைவில் பிறந்து வா //

அமுதத் தமிழ் உனக்காக காத்திருக்கிறது//

தமிழை  வளர்க்க விரைந்தே வருக. . . //


இசைப்பேரரசி
 லதா சங்கரன் 
சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0127. 

டாக்டர் கலைஞர்

முத்தமிழ் அறிஞரே டாக்டர் கலைஞரே //

காவியத் தலைவரே கலைகளின் அரசரே //

முன்னாள் முதல்வரே எந்நாளும் தலைவரே //

பகுத்தறிவு பாவலரே பார்போற்றும் படைப்பாளரே //

தமிழின் காவலரே தமிழை வளர்த்தவரே //

விளிம்புநிலை மனிதருக்கு வீரம் தந்தவரே //

படைப்பு பெட்டகமே  பழமையை காத்தவரே  //

மூடநம்பிக்கைகளை ஒழித்த முற்போக்கு சிந்தனையாளரே //

மொழிஉணர்வு கொண்ட சரித்திர நாயகரே //

சாமானியருக்கு ஒளி தந்த சூரியனே// 

சாதி ஒழிய சமத்துவபுரம் தந்தவரே //

ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்தவரே //

அரவாணிகளை திருநங்கையென்று அழைக்கச்  சொன்னவரே //

உங்கள் வெள்ளை நிற வேட்டி //

உங்கள் வெள்ளை மனதை காட்டுதய்யா//

மஞ்சள் துண்டு மகத்துவத்தை சொல்லுதய்யா //

நீங்கள் இல்லையென்றாலும் இறவாமல்  வாழ்கிறீர் //

எங்கள் அனைவரது உள்ளத்திலே எண்ணத்திலே   //

கவிஞர்  அ.கனகவள்ளி காரைக்கால் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0128.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்....

பேரறிஞர் அண்ணாவின் பாசமிகு நம்பிக்கைதூணே

பல திரைக்காவியங்கள் எழுதிய  காவியத்தூணே

சமத்துவபுரம் உருவாக்கிய அன்பின் சமத்துவத்தூணே

குறள் ஓவியத்தின் சிறந்த எழுத்துத்தூணே

தமிழ் இலக்கணம் தொல்காப்பியம்த்தின் தெளிவுரைதூணே

செம்மொழி நாயகன் செம்மொழி மாநாடுத்தூணே

எழுத்துலகின் சீர் மிகு கம்பீரதூணே

அரசியலில் சிறப்பாக செயல்பட்ட சாணக்கியத்தூணே

தமிழ் மொழி வளர்ச்சியின் பாதுகாப்புதூணே

ஐந்து முறை சிறப்பாக நல்லாட்சி

தந்த தமிழகத்தின் சிறந்த ஆட்சித்தூணே

கோடிக்கணக்கான உடன் பிறப்புகளின் இதயததூணே

திமுக என்ற சாம்ராஜ்யத்தின் வெற்றிதூணே

கலைஞர் என்கிற திமுகவின் சரித்திரத்தூணே

காலத்தால் அழியாத புகழ் கொண்ட

சங்ககால தமிழே தமிழாக்கத்தின் முதல்வரே

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரே

நீர் வாழ்க  நின் புகழ் ஓங்குக 


கவிஞர் கணுவாய் கிருஷ்ணமூர்த்தி கோயம்புத்தூர் மாவட்டம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0129. 

கலை மகனாம் கலைஞர்...

கலைகளில் தடம்
 பதித்து நின்ற

கலைமகளின் பிள்ளையாய்
 பிறந்த தமிழே//

முத்தமிழை கைக்கொண்டு
 மூவுலகிலும் தனக்கென

முத்திரை பதித்துக் 
 கொண்ட முத்தமிழே//

பாவனைகளின் இருப்பிடமாய்
 திகழும் நாடகத்தில் 

பழனியப்பன் நாடகத்தை
 எழுதிய நாடகத்தமிழே//

திரைப்பட மொழியின்
 வாசத்தை உணர்ந்து

திரளான மக்களால்
 ரசிக்கப்பட்ட செந்தமிழே//

அனைத்திலும் நுழைந்து 
 ஆகச்   சிறந்தவனானநீ

அபிமன்யுவிற்கு வசனம்
 எழுதிய அன்னைத்தமிழே//

செயல்களில் எல்லாம்
 தனித்திறனை காட்டி

செழுமை பட்டு
 உயர்ந்த செம்மைத்தமிழே//

சமூக நீதியை
 பேனா முனையில்

சாடி நின்ற
 சரித்திர தமிழே//

கதைகளின் நாயகனென
 உன்னை நினைத்தால்

கதாநாயகிக்கு வார்த்தை
 கொடுத்த நற்றமிழே //

தமிழ்மொழி உச்சரிக்கும்
 ஒவ்வொரு நாவும்

தன் பெயரையும் உச்சரிக்குமே காலமெல்லாம்//

-கவிஞர் சக்திப்பிரியா ஜோதிராஜ் கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0130. 

முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
-------------------------------------

தம்பிகளுக்கு அண்ணா அண்ணாவுக்கு முதல்தம்பி//
அகில உலக தமிழனுக்கும் முதல்தந்தை//

தோளில் போட்டு இருந்தது மஞ்சள்துண்டு//
சாதீய தீக்கிருமி அழிக்கும் மஞ்சள்துண்டு//

தென்பாண்டி சிங்கம் கெர்ஜிக்கும் தொண்டை//
காலம் கொண்டாடும் கலைஞன் இவர்தொண்டை//

விரலில் மின்னுது அண்ணாவின் கணையாளி//
உரத்தக் குரலில் வாழ்கவேன்கிறான் மாற்றுத்திறனாளி//

என் உயிரிலும் மேலான உடன்பிறப்பென்பார்//
கடலில் தூக்கிபோட்டாலும் கட்டுமரம் என்பார்//

தமிழ் போற்றும் இவர் திருப்புகழை//
செம்மொழி விருந்தை அளித்தது திருக்குவலை//

முத்துவேலர் பெற்ற முத்தமிழ் சிறப்பு//
முகத்தில் பாவேந்தன் அழகின் சிரிப்பு//

சத்துணவில் முதல் முட்டை போட்டவர்//
அரசியலில் பழந்தின்னு கொட்டை போட்டவர்//

 சமமென்று சமத்துவபுரம் கட்டி தந்தவர்//
சமத்துவக் கேக்கை வெட்டி தந்தவர்//

கவி. கோவிந்தசாமி.
புதுக்கோட்டை
ஆலங்குடி அஞ்சல்
M. ராசியமங்களம்.
622301
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0131.

முத்தமிழ் அறிஞர் விருது 2023
என் உயிர் தலைவன்
_______________________

நீ திருக்குவளையில்  கண் மலர்ந்தாய்/
கல்லக்குடியில் பிறர் கண் திறந்தாய்/
வெண்தாடி வீரரின் கைபிடித்து நடந்தாய்/
தீந்தமிழன் அண்ணாவின் கொள்கையிலே வளர்ந்தாய்/
உடன்பிறப்பே என்ற உன் குரலொலிப்பு/
ஓராயிரம் ஊட்டச்சத்துக்கு இணை ஆகுமே/
50 ஆண்டுகள் அசையாத தலைமை/
தகவல் தொழில் நுட்பத்திற்கோ நீ/
தனித்துறை அள்ளி தந்தாய்!/

தீந்தமிழ் தேனுக்கு செந்தமிழ் அந்தஸ்து/
ஐயன் வள்ளுவனுக்கோ வானுயர சிலை/

உனை கடலிலே எறிந்தாலும் கட்டுமரமாய்/
தமிழனை கரை சேர்ப்பேன் என்றாயே/
அதனால் தான் கடற்கரை ஓரம்/
இடம் கேட்டாயோ என் கண்ணாளா/
எதிலும் தோற்காத நீ இதிலும்/
எழுந்து வருவாய் என்றல்லவா நினைத்தோம்/
ஏன் சென்றாய் எங்களை விட்டு..!!!

திருமதி.வை.சிதம்பரம்
களக்காடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0132.

கலைஞரின் தமிழ்ப் பற்று.

1.தமிழ்தாய் ஈன்றெடுத்த  இளஞ்சூரியனாரை வணங்குகிறோம்.!

2.முத்தமிழிக்கு, சங்கமளித்த  வித்தகரை, வணங்குகிறோம்.!

3.கதை,கட்டுரையென முத்தமிழின் மூவேந்தரே.!

4.இலக்கணச் சுத்தமாய்,
பழந்தமிழின் பண்பாளரே.!


5.அசைபோடும் நினைவுகளாக ஆன்மீக கதைகள்,
தொலைகாட்சியில்.!

6.விடாதுபணி விடாத சேவையென வியத்தகு சாதனையாளரே.!

7.இப்பூவுலகில்,
காயாய், கனியாய்,
விண்ணொளியானவரே.!

8.கண்ணின் கருவிழியாய், தமிழகத்தை காத்தவரே.!

9.தங்களின் தமிழருவி பாயாத நாடில்லை.!

10.கலை நுணுக்கங்களில் எழுத்தாணியாக கைவண்ணங்கள்.!

11.முத்தமிழ், செந்தமிழ், சுவையே பெரியது.!

12.திருக்குறள்,
சிலப்பதிகாரம்,
தொல்காப்பியமென, சங்கமிலக்கியமானவரே.!

13.தமிழன்னை பெட்டகமான வீரத்தமிழ் மகனை வணங்குகிறோம்.!

14.முக்கடல் சங்கமிக்குமிடத்தில் வள்ளுவன் சிலை அமைத்தவரே,!

15.வரலாறை அறியவேண்டி நெஞ்சுக்கு நீதியை படைத்தவரே.!

16.பழந்தமிழின் சேவகராம்,பைந்தமிழின் பாதுகாவலராம்.!

17.தமிழறிவை  விளைத்திட்ட,
நாடு போற்றும், நல்லவராம்.!

18.தமிழகத்தின் அமுதசுரபியாய்,
அட்சய பாத்திரமாயிருந்தவரை,
வணங்குகிறோம்.!!!

ஆத்ம வணக்கம்.ஐயா,
யோகி.க.வெங்கடேசன்,நந்திவரம் கூடுவாஞ்சேரி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0133.

கலைஞருக்கான என் காவிய வரிகன்.......

முதல்வன் என்ற முகவரியை பெற்றவனே........
பெண்ணுக்கும் மண்ணுக்கும் மதிப்பு வழங்கியவனே......
முத்தமிழை முற்காலத்திலேயே கற்ற கலைஞரே......
பல காவியங்களை படைத்த காவியத்தலைவனே.......
முக்கடலும் உன்னிடம் மண்டியிட்டு நின்றதே......
உம் தமிழ் பற்றை கண்டு......
முல்லை மலராய் புன்னகிக்கிறாய்
தலைவா......
தமிழகமும் உன் பேனா முனையில்....
தமிழை கற்று அறிகிறது தலைவா.....
நட்பு என்ற சொல்லுக்கு சான்றாகி....
நம்பிக்கை என்ற சொல்லுக்கு சிகரமாகி......
தினம் என்ற மலராய் திகழ்கிறாய்.....
திருக்குறளுக்கும் உரை எழுதிய
உரையாசிரியரே.......
அகிலமும் போற்றும் ஐயா உன்னை.......
உறவாய் உரிமை வழங்கினாய் தலைவா.......
தமிழாய் தமிழ்த்தாயிடம் அடைகளம்  பெற்றவனே.......
அறிஞரும் கவிஞரும் கலைஞரும் நீயே......
கலைகலை கற்ற கவிஞரே கலைஞரே.......

 - வ.ஜீவஸ்ரீ
 நடையனூர்,
 கரூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0134.

கவிதை தலைப்பு : கருணையின் நிதியம்  கலைஞர்

தேன்சிந்தும் நறுமலராய் திருக்குவளை மண்பூத்து,

தென்பொதிகை மலைஉதித்த தமிழைச் சிரமேற்று,

வான்கவிகள் வாழ்த்துகின்ற பொன்கவிகள் படைத்து,

கோனோச்சி தமிழ்காத்த எங்கள் கோமான்,

தட்சிணாமூர்த்தியென பெயரிட்டே அழைத்தார் தந்தை,

ஆட்சிக்கட்டிலில் மோசிகீரனாய் அமர்ந்தரசாட்சி புரிந்தாய்

வெட்டிவேரின் வாசமென தமிழகத்தைக் காத்தாய்

கட்டிக்காத்துத் தமிழ்த்தேரை இட்டமுடன் செலுத்தினாய்

வல்வில் ஓரியின் வலிமை கொண்டாய்

கல்லக்குடி வென்று நல்லகுடி செய்தாய் 

வல்லமை யுடனே இல்லறம் காத்தாய்

நல்லறமுடன் நல்லாட்சி ஓங்கிடச் செய்தாய்

ஆழ்கடலில் தள்ளினாலும் கட்டுமரமாய் காத்தாய்

வீழ்வது நாமாயினும் தமிழ்த்தாயை வாழவைத்தாய்

காழ்ப்புணர்ச்சி கயமைக்குணம் காரிருளில் மறையச்செய்தாய்

ஊழ்வினைகள் பாழ்படவே உதயசூரியன் உதிக்கச்செய்தாய்

இருமூளை செயல்பாட்டால் தரணியிலே உயர்ந்தாய்

வீரன் சாவதில்லை கோழை வாழ்வதில்லை

கரங்குவித்து வணங்குகின்றேன் நிறைவான முத்தமிழே

வரமொன்று தந்திடுவாய் பொற்பாதம் போற்றுகின்றேன்.

கவிஞர். பா. தங்கேஸ்வரி, அவிநாசி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0135. 

கவிதை போற்றும் கலைஞர்

ஞானத்தின் தந்தை உன்னை தத்தெடுத்தாரோ!

நீர் பல்துறைவித்தவராக உருவெடுக்க!

தமிழ் தாய் உன்னை பெற்றாலோ!

நேர் புது கவிதையாக அவதரிக்க!

பாரத அன்னை உன்னை அழைத்தாலோ!

நீர் புரட்சி தலைவனாக நடையெடுக்க!

மங்கையர் உன்னை கண்டு மகிழ்ந்தார்களோ!

நீர் பெண்ணடிமை கண்டு கொதித்திட!

பராசக்தி உன்னை கண்டு ஆட்கொண்டாலோ!

நீர் கவி வீரனாக வாள் பிடிக்க!

அறியாமை உன்னை முற்றுகை இட்டதோ!

நீர் அறிவுச்சுடராய் அவற்றை எரிக்க!

கலைமகள் உன்னை முடிசூட ஆசீர்வதித்தாலோ!

நீ முத்தமிழ் அரசனாக முடிசூட!

இயற்கை உன்னை கண்டு வியந்ததோ!

நீர் வடிக்கும் படைப்புத்தேனை குடித்திட!

உன்னால் உருவானது ஒரு சகாப்தம்!
செம்மை கலைஞரே வாழ்க என்றும்!

கவிஞர் முனைவர் ந.கல்யாணி
உதவி பேராசிரியர் (தமிழாய்வுத்துறை)
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) பெரம்பலூர்621212

@@@@@@@@@@@@@@@@@@@@@

0136.தன் மானத்தின் விடி வெள்ளி


 எங்கள் திராவிட இயக்கத்தின் கூர்வாள்
 திருவாரூர் கண்டு எடுத்த தவப்புதல்வன்
 செம்மொழி மாநாடு கண்ட வித்தகர்
 முத்தமிழ் அறிஞர் சொற்குவியல் வேந்தன்
 ஊழி  முதல்வன் தித்திக்கும்  செங்கரும்பு
 நீடு துயில்  நீக்க  பாடியவனே!
 பாற்கடலின் அமுதமே! பொக்கிஷமே! தங்கமே!
 தங்க ரதமே தங்க தலைவனே!
 எட்டாத வெற்றி கனிகளை பறித்தவனே!
 விமர்சனத் தேரில் முத்து எடுத்தவனே!
  தென்பாண்டி சிங்கமே! வைரமே! மாணிக்கமே!
 முத்தமிழும்  கற்ற முத்து ரதமே!
 உன்னால்  தலை  நிமிரு ம் தமிழகம்
 தன் நிகர் இல்லா தலைவனே!
  தமிழை தரணியில் செழிக்கச் செய்தவன்
பல  கலைக்கும் வல்லவன் நீயே!
 வாழ்க செங்கோல் வளர்க புகழ்!

- ஜே. கே. சுந்தரி

 திருவள்ளூர்

உதவிப் பேராசிரியர்
 டி. ஆர். பி. சி.சி.சி. இந்துக் கல்லூரி
பட்டாபிராம் சென்னை -72

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0137.

*தமிழ் போற்றும் தலைவன்* 

அஞ்சுகம் பெற்ற அருமை மைந்தனே !

தமிழின்மீது தணியாத பற்று கொண்டவனே !

நீ தடம் பதிக்காத இடமில்லை 

திருக்குவளை தமிழுக்குத் தந்த இளஞ்சூரியனே !

திக்கெட்டும் தமிழைப் பரப்பிய கலைஞரே!

தமிழுக்குச் செம்மொழி சிம்மாசனம் தந்தவரே !

படைப்பில் பன்முகத் திறமை கொண்டவரே !

பாரில் நீயின்றி தமிழ் இல்லை 

தமிழையும் உன்னையும் பிரிக்க முடியாது 

தமிழுக்கும் தமிழருக்கும்  தொண்டுகள் ஏராளம் 

திராவிட இனத்தின் முதல்  காவலனே !

ஓய்வு என்பதே உனக்குக் கிடையாது 

காப்பியம் படைத்த காவியத் தலைவனே!

எப்பொழுதும் 
உன்கையில் பேனா தவழும் 

தரணியில் என்றும் தன்னிகரற்ற தலைவரே !

முத்தமிழ் காத்த தமிழினத் தலைவரே !

இறுதி மூச்சு வரை எழுதியவரே !

உன் புகழ் தமிழ் உள்ளவரை.......

முனைவர் இ.மாரி மகேஸ்வரி 
சிவகாசி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0138. 

மறையாத சூரியன்....

தமிழ்மொழியை செம்மொழியாக்கிய தாணய தலைவன்

தமிழகத்தை ஆண்ட தன்மான தலைவன்

வாய்புகள் வள்ளுவனுக்கு சிலைவடித்த தலைவன்

நிறமற்ற விதவைக்கு கைம்பெண் என

பொட்டு வைத்த அன்புத் தலைவன்

பல தலைமுறைகள் காண தமிழை 

கணினியில் ஏற்றிய தன்னிகரற்ற தலைவன்

களம் பல கண்ட வெற்றி தலைவன்

உந்தன் பேனா முனையே போர்வாள் 

உந்தன் சொல்லோ வாள் வீச்சு 

நீங்கள் காட்டிய தமிழ்வழிப் பாதையில் 

பச்சைத் தமிழன்  என்ற கர்வத்தோடு 

நின் தமிழ் சமூகம் நடைபோடும் 

தளராது ஓய்வெடு தமிழ் கட்டுமரமே 

தோல்வியே அறியாத அபூர்வ பிறவி 

பேச்சு ஆற்றலில் அதிசய பிறவி 

சாணக்கிய மூளை அரசியல் ஞானி

கலைஞர் என்ற மறையாத சூரியன்

- மு.வாசுகி முத்தையன்
ஈரோடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0139. 

கலைஞரும் தமிழும்
*""""""""""""""""""*"""""""""""
திருவாரூரில் அரசு பள்ளி மாணவனே/
தாய்மொழியான 
தமிழ் என் உயிரே/
இந்திய எதிர்த்து கையில் தமிழ் கொடியோடு/
திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் சென்றவரே/
வாருங்கள் எல்லோரும் போருக்கு செல்வோம்/
வந்திருக்கும் இந்தி பேயை விரட்டுவோம்/
தமிழ் மீது மாறாப்பற்று உடையவரே/
முரசொலி மூலம் தமிழ் சிறப்புகள்/
இந்தி எதிர்ப்பு  மக்களை சென்றடையவே/
தொண்ணூற்று இரண்டு 
அடைகளை செய்தவரே/
தமிழ் மொழியை வளம் பெற செய்தவரே/
மொழி போராட்டமே எங்கள் பண்பாட்டை காக்கும்/
தந்தை பெரியார் ஊட்டிய தமிழே/
தமிழ் இனமான உணர்வு புகட்டியவரே/
திருக்குறளின் சிறப்புகளை தமிழ் பண்பாட்டுடன்/
பொருத்தி வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்தவரே/
தமிழ் கவிஞர்களை மரியாதை  செலுத்தியவரே/
குமாரி முனையில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியவரே/முத்தமிழ் அறிஞர் கலைஞர் இறந்தாலும்/
தமிழர்களின் மனதில் குடி கொண்டுள்ளவரே/

ப.பஞ்சாபகேசன் முதுகலை ஆசிரியர் அரசு மேல் நிலைப்பள்ளி பொன்பரப்பி 
 அரியலூர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0140. 

எப்போதும் உங்கள் கவியே வெல்லும். 

1) அன்பாய் பேசி மக்களை அரவணைப்பீர்.

2) ஆற்றலாய் பேசி
 மக்களை ஆசீர்வதிப்பீர். 

3) இன்பமாய் பேசி
  மக்களை இன்பமூட்டுவீர். 

4) ஈடில்லா தலைவராக
  புகழ் பெற்றீர். 

5) உள்ளபடி உம்மைப் போன்றதொரு தலைவரில்லை. 

6) ஊக்கம் தருவதில்
  உமக்கு நிகரில்லை. 

7) எனக்கும் உங்களுக்கும் ஒரு
தொடர்புண்டு. 

8) ஏனெனில் நாம் பிறந்தது ஒரேநாள். 

9) ஐயா, உமைநினைத்தால் 
மனதில்
கொண்டாட்டம். 

10) ஒருநாள் புரிந்ததால்
மனதில்
திண்டாட்டம். 

11) ஓராயிரம் தலைவர்கள்
பூமியில் வரலாம். 

12) தமிழுக்கு ஔடதம்  நீரின்றி 
யாருமில்லை. 

13) கடமைக்கு
அகராதியாக என்றும்
நின்றவர். 

14) கண்ணில் கண்ட
கண்ணியத் தலைவர். 

15) கட்டுப்பாட்டுக்கு
உம்மிடம் இல்லை
தட்டுப்பாடு. 

16) பொறுத்தது போதும்
மனோகரா! பொங்கியெழு! 

17) தமிழ் இருக்கும்வரை
இவ்வசனம் இருக்கும். 

18) உந்தன் பாதையில்
தமிழ்நாடு செழிக்கும். 

- ஜெ. ராகவ் தெக்ஷ்சன். 
இராமநாதபுரம். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0141.

ஈடில்லா தலைவன்

செம்மொழி நாயகரே
முத்தமிழ் அறிஞரே

திராவிட தலைவரே
ஈடில்லா கலைஞரே

வானகமும் வையகமும்
உன்னுருவம் வியக்குதையா

ஓய்வற்ற காற்றும்
உன்புகழ் பேசுதையா

தேரோடும் கடவுகளை
தெருவோடு விட்டுவிட்டு

போராடவந்த போர்வெல்லும் முரசொலி வேந்தரே

உன்னறிவை தாராளமாய்
நுண்ணறிவை ஏராளமாய்

விடியலுக்கு வித்திட்ட
வீரமிகு ஆண்மகனே

தமிழினத்தில் பிறந்தவரே
செம்மொழிக்கு வளர்ந்தவரே 

வின்னோளியாய் நின்றவரே
மின்னொளியை தந்தவரே

சமத்துவம் செய்திட
சமத்துவபுரம் செய்தவரே

வாக்குறுதி கொண்டவரே
மக்கள்மனம் வென்றவரே

ஓயாத உழைப்பாளரே
ஒப்பற்ற படைப்பாளரே

ஐமுறை முதல்வரே
ஐயமின்றி ஆள்பவரே 

கையோப்பம் தீட்டியவர்
சொத்துரிமை நீட்டியவர் 

கூர்தீட்டி கூறியவை
குருதிகளில் குமுறுதையா

முத்தமிழே தலைமகனே
ஓய்வறியா சூரியரே

சொற்பொழிவு வேந்தரே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 மா.ஜெகதீஷ்,
   திருவாரூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0142. 

மீண்டும் பிறந்து விடாதே தமிழா...!

மீண்டும் பிறந்து விடாதே தங்கத்தமிழா // 01
உம்மை மறந்து வாழும் உலகம்  உருவாகவில்லை //02
திருக்குவளை தந்த  திமுகவின்முத்தமிழறிஞரே // 03
முத்துவேலரின் நன்முத்தே அஞ்சுகத்தின் அஞ்சா நெஞ்சமே // 04
கலங்கரை விளக்கே அரசியல் கலையிலக்கியமே// 05

அடியெடுத்த அனைத்துலும் சிகரத்தை தொட்டவரே // 06
வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவரே // 07
நெஞ்சுக்கு நீதியாய்
வாழ்ந்த வள்ளலே //08
அண்ணாவின் இதயமே, கல்லக்குடி கொண்டாரே //09
 மாணவ நேசனாய் முரசொலியில் ஒலித்தஒலியே//10

உடன்பிறப்புக்கு கை கொடுக்கும் உரிமைக் குரலே // 11

 உரிமைக்கு குரல் கொடுப்போம் உத்தமரே //12
குடிசை வீடுகளை மாளிகையாக்கிய மாமன்னரே// 13

எழுத்துலகின் பீடு நடைபோடும் பிதாமகனே // 14

தமிழ் இலக்கியம் காத்த இலக்கியச் செல்வரே // 15

வள்ளுவனுக்கு வானுயர
சிலையமைத்த செந்தமிழே// 16

பேனாவால் ஏழைகளுக்கு
 வெளிச்சம் தந்தவரே // 17

செந்தமிழ் நாயகரே செந்தமிழ் காவலரே//18

முனைவர் சு. விஜயலட்சுமி

அனவர்திகான் பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0143.

கருணாநிதி என்னும் காவியத்தலைவன்...

திருவாரூர் திருக்குவளையில் தோன்றிய முத்தே!
கலைகள் எல்லாம் கற்றறிந்த காவியத்தலைவனே!
காலம் கடந்தாலும்‌ அழியாப்புகழ் உடையோனே!
பார் போற்றும் ஆட்சி நாயகனே!
ஐந்தாண்டு முதல்வராக அரியாசனம் பெற்றவரே!
இலவச திட்டங்களைத் தீட்டிய இமயே!
ஈடில்லா சிறப்பு கண்டு வியந்தோமே!
முத்தமிழில்‌ மூழ்கிய முத்தே! வித்தே!
எட்டுத்திக்கும் உன் பெருமை இசைத்திடுமே!
எழுத்தாற்றல் எனும் ஏணியின் சிகரமே!
எழுதுகோல் இறுகப் பற்றிடும் கரமே!
எண்ணும் எழுத்தும் கண்ணென கொண்டவரே!
தமிழுக்கென தனிப்பெருமை சேர்த்த தனித்தமிழே!
தடைகளைத் தாண்டி ஒளிவீசிய வைரமே!
தரணியெங்கும் ஒப்பற்ற உம்புகழ் ஒலித்திடுமே!
மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் மங்காத மகத்தனவரே!
கலைஞர் புகழ் எங்கும் நிறைந்திருக்கும்!
எதிலும் பெருமை நிலைநாட்டி நிற்கும்!!!             வாழ்க தமிழ்...வாழ்க வளமுடன்....

        ச.பிரியங்கா
        26/1 ஸ்ரீராம் நகர், 

செம்பருத்தி தெரு, சம்மட்டிபுரம், மதுரை - 625016. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0144.

முத்தமிழ் அறிஞர்
திருக்குவளை கிராமத்தில் பிறந்த திருமகனே,
கருணாநிதி உன்னுடைய வரலாறு நெஞ்சுக்கு நீதி,
மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றே,
பட்டினி இல்லா தமிழகமே அது
தமிழ் நாட்டுக்கு தந்த மணிமகுடமே,
திருக்குறளை அறிய செய்த குறலோவியமே,
திருவள்ளுவருக்கு தென்கடல் ஆடும் குமரியில்
அகிலம் வியக்கும் சிலை அமைத்தாயே,
கவிஞர்களுக்கு நீ அறிவு ஒளி,
கண்களுக்கு தந்தாய் நீ கண்ணொளி,
அன்று அடுப்பங்கரையில் கிடந்த மங்கைகளை
காவல் துறையில் பணியாற்ற செய்தவரே,
ஆணாகப் பிறந்து பெண்ணாக மலர்ந்த 
பூக்களை திருநங்கை என்றழைக்க வித்திட்டவரே,
சூரியன் தோன்றி தோன்றி மறைந்தாலும்,
உன் புகழ் வையகம் உள்ளவரையிலும்
இம்மண்ணில் என்றும் நிலைத்து நிற்கும்,
உன் சாதனைகள் தனித்து நிற்கும்....

சுந்தர் கோட்டியப்பன்,

சங்கரன்கோவில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0145. 

எங்கெங்கும் கலைஞர்!
--------------------------------------------
நூற்றாண்டு காணும்
புறநானூற்று தலைவா!...

உன் பெயரை உச்சரிக்காமல்
தமிழகத்தின் வரலாற்றை
யாரும் சொல்லி விட முடியாது!

உன் பெயரைப் பதிக்காமல்
தமிழின் சிறப்பை நூல்களால்  
எடுத்துச் சொல்ல முடியாது!

உன் பெயரின்றி 
கல்வெட்டுக் குறிப்புகள் 
காலம் காட்ட முடியாது!

உன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து போனார்கள் தடமின்றி!

நீ மட்டுமே 
நிலைத்து நிற்கின்றாய்
சாலைப் பயண மேம்பாலங்களில்...
அலுவலகப் பணி கட்டிடங்களில்...
எளியோரின் வாழ்க்கை பாதையில்...
பெண்களின் முன்னேற்றத்தில்...
திருக்குறள் தந்த
வள்ளுவனின் புகழ் மாலையில்...
காலத்தால் அழிக்க முடியாத
காவியத் திரை மொழிகளில்...
செம்மொழிப் பெயர் தாங்கிய 
சங்கத் தமிழ் பூங்காவில்...
தமிழகத்தின் 
உயர்கல்விச் சாலைகளில்...
சமூக நீதி காக்கும் 
இடஒதுக்கீட்டுப் பாதைகளில்!

கலைஞரெனும் சிலை வடிவே
நீ இன்றி 
தமிழகத்தின் சிறப்பு இல்லை!
நாளெல்லாம் 
உன் நினைவின்றி 
எங்களுக்கு வாழ்வும் இல்லை! 

- பாப்பாக்குடி இரா.செல்வமணி 
திருநெல்வேலி - 11.

@@@@@@@@@@@@@@@@@@@@

0146. திராவிடத்தின் தீவிரவாதி...


அரசனாக இருந்த போதும் ஆடம்பரமில்லை!
ஆடம்பர பங்களா உனக்கு தேவையுமில்லை!
ஏனென்றால் நீயொரு தொல்காப்பிய பூங்கா!
காணும் திசையெல்லாம் கடவுளாய் பெண்கள்!
காவலர்முதல் ஆட்சியர்வரை அமர்த்தியவர் நீங்கள்!
பெண்மைக்கு பெருமை சேர்த்தவர் தாங்கள்!
வள்ளுவன் வழிநின்று உழவனை உயர்விக்க, உழவர் சந்தை அமைத்த தந்தை நீ!
சூத்திரன் என்று உன்னை ஒதுக்கியவனிடம்,
சாணக்கியன் என்று சாதித்தவன் நீ!
சூரியனா? நீயென்று ஏளனம் பேசியவனிடம்,
சுட்டெரிக்கும் கேள்விகளால் வேள்விகள் செய்தவன்நீ!
அண்ணாவின் பின்னால் சென்று பின்னாளில்,
அண்ணாவின் அண்ணா ஆனவன் நீ!
தீண்டாமை வேண்டாம் என்றவன் நீ!
சமத்துவபுரம் அமைத்திட்ட சரித்திரம் நீ!
தீர்க்க திராவிடத்தின் தீவிரவாதி நீ!
உன் திராவிடம் பல்லாண்டு வாழியவே!


வீ.கவிதா இரத்தினக்குமார். M.A.M.Phil. சிதம்பரம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0147. 

முத்தமிழறிஞர் கலைஞர்  விருது-2024

 


பிறப்பு  என்னமோ நாகப்பட்டினம் மாவட்டத்தில்! 

திருக்குவளை என்னும் கிராமம் தான்! 

ஆனால் உம்மை அறியாதவர்  எந்நாட்டிலும் இல்லை! 

இனியும் அறியாதவரும் இருக்கப்போவதில்லை! 

உம் சிறப்பில் எதைக் கூற எதை விட!

முத்துவேலருக்கும்
அஞ்சுகம் அம்மைக்கும் தான் நீர் மகனா! 

இல்லை மண்ணில்  பிறந்த  எத்தனையோ !
 தாய்மார்கள்  உம்மை
கருவில் சுமக்கவில்லை என்றாலும்! 

பாசமுடன் தாய்மையுடன் அழைக்கும் கலைஞர் என்னும்  சிறப்பு! 
அதுவே  உமக்கே உள்ள தனிச்சிறப்பு! 

கலைஞர் என்னும்  பட்டம்  எம்.ஆர்.ராதா விடம்

நீர் பெற்ற பட்டம்  உம்
ஆட்சியில் அடங்கியது!
எதிரிகளின் எண்ணிலா அடக்க முடியாத கொட்டம்!

 அண்ணாவின் தம்பி  
அரசியலில் மட்டுமல்ல!

அனுபவத்திலும் தான்
அனைத்திலும் தான்! 

முத்தமிழும்  ஒருங்கிணைந்த  முத் தமிழன் நீர்! 

எழுத்திலும் தெளிவு
பேச்சிலும் நேர்த்தி! 

நீர் படித்த கல்விக்கூடம்!
 அதில்
நாங்கள் படிக்கவேண்டும்  
ஆயிரம் பாடம் !

 ஆழ்கடலில் தோணியாய் இருந்து என்றும் உதவும்! 

உமக்கு பிறந்த நாள் வாழ்த்து!

மக்கள்  மனங்களில் 
என்றும் வாழும்!
தங்க  தமிழனுக்கு
பிறந்த நாள்! 

வி.பிரியரட்சணா 
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை 
நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேனி.

@@@@@@@@@@@@@@@@@@@@@

0148.

தலைவன்

திருக்குவளை நாயகனே! திரையுலக கலைஞனே!

திட்டங்கள் பலவகுத்தீர் ! தீண்டாமை ஒழித்தீர்  !

படைப்பு பலபடைத்து பாரினில் உயர்ந்தீர் !

குரளோவியம் தந்தீர்! சங்கத்தமிழ் தந்தீர்! 

புதுமைகளைப் படைத்தீர்! பொறுமையுடன் உயர்ந்தீர் !

அநீதி விழும் அறம் வெல்லும் 

எனும் முழக்கம் உன் தமிழ்முழக்கம் 

பேச்சும் எழுத்தும் அறிஞர்க்கு ஆலயம்

அறிவாலயம் அமர்ந்து அறிஞர்வழி நடந்து ...

பெண்ணுக்கு சொத்துரிமை பேதமிலா அரசுரிமை 

கண்ணுக்கு நிகரான தமிழ்மொழி வளர்ப்பு 

காதுக்கினிமை  தரும் கவிதை வார்ப்பு

 திரைக்கு உன்வசனம் திட்டத்தில் அடங்காது .

அரசியல் சாணக்கியன் அந்நியருக்கு கொடுங்கோலன் 

எட்டுத்திக்கும் தொழில்கள் ஏற்றமிகு கல்வி 

பஞ்சமில்லா வாழ்வை பாமரர் ஏற்க.

தரணி ஓங்க தமிழ்நாடு சிறக்க.

தமிழ்நாட்டு தலைவா! தண்ணிகரில்லா முதல்வா !

முனைவர் இரா சுமதி 
உதவிப் பேராசிரியர்
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி
 இராமநாதபுரம் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0149.

முத்தமிழ்க் கலைஞர்
////////////////////////////

முப்பொழுதும் உழைப்பாரே முத்தமிழ் கலைஞர்/

முகவரியைப் பதிக்கின்ற மூத்த அறிஞர்/

எப்பொழுதும் எழுதுகோலால் என்னைக் கவர்ந்தர்/

எழுச்சியூட்டும் சொற்களையும் எழிலாய் படைத்தார்/

தப்பாமல் தமிழ்நாட்டில் தடங்கள் பதித்து/

தயங்காமல் பேச்சாலே தமிழைச் சுவைப்பார்/

உப்பளத்தின் தொழிலாளிகள் ஊற்று நீராய்/

உழைப்போர்க்கு சலுகைகளை ஊக்கமாய் தருவார்/


பட்டென்று மொழிவாரே பட்டியல் போட்டு/

படிக்கின்ற மாணவர்கள் பயணச் சீட்டு/

சுட்டெறிக்கும் சூரியனையும் சின்ன மாக்கி/

சூழ்ச்சிகளையும் உடைத்தெரிந்தார் சுக்கு நூறாய்/

எட்டுவைத்த இடமெல்லாம் ஏழைச் சொத்து/

எதிர்காலம் இவருடைய புகழைக் கொட்டும்/

விட்டுவைக்கல விண்ணுலகம் விருந்தாய் இவரை/

விழித்திரைகள் வேதனையால் வெந்தே கிடக்கு/

நூறாவது அகவைத்தினம் நூற்றோர் ஆலயம்/

நூற்றாண்டு மாளிகையில் நூலாய் இருக்குமே/////

முனைவர். கவிஞர். இரா. பாண்டியராஜன்,
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், 
மதுரை மாவட்டம் - 625 301.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0150.

மரபுக்கவிதை
&&&&&&&&&&&

கலைஞர் காவியம்
//////////////////////////

அஞ்சுதத்தாய் பெற்றெடுத்த அருந்தமிழ் மேதை/

அகிலமெங்கும் கண்டெடுத்த அரசியல் கீதை/

வஞ்சிக்காண் டம்புகார்க்காண் டம்வாழ்த்  துகண்டவர்/

வஞ்சனைகள் இல்லாமல் வரலா றுசொல்லும்/

கொஞ்சுதமிழில் சொல்லெடுத்து குறளோ வியம்நீ/

குறுந்தொகை வடித்தெடுத்த குவளை நீராய்/

மிஞ்சிவிடவும் முடியாமல் மேலோர் கீழோர்/

மின்சாரமாய் பாய்கிறார்கள் மரணப் போரில்/

திருவாரூர் திருக்குவளைத் தீபமாய் வந்தார்/

திராவிடத்தின் பேச்சாளே தீங்கினை வென்றார்/

மருப்பாவின் இலக்கணமாய் மயக்கம் தந்து/

மண்ணைவிட் டுமறைந்தாலும் மனதில் நின்றார்/

கருவிலுள்ளப் பிள்ளைகளும் கலைஞரைச் சொல்லும்/

காலத்தில் அழியாத காவியம் வெல்லும்/

துருவங்களின் சிக்கலையும் தூக்கில் இட்டார்/

துக்கமுடைய மனங்களுக்கு தூணாய் நின்றார்/

பருவகாலம் ஊக்கத்தைப் பனுவல் ஆக்கி/

பட்டாடைப் பதவிகளுக்கு பாடம் சொன்னார்/

செல்வி. கவிதாயினி. பா. ஜெயபிருந்தா,
முதுகலைக் கணினி அறிவியல் துறை, 
பாவை பொறியியல் கல்லூரி,
நாமக்கல் மாவட்டம் - 637 409.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0151. 

*முத்தமிழ் அறிஞர் கலைஞர்*

முத்தமிழ் கவிதையை முப்பொழுதும் பாடி
வித்தையும் புரிந்தார் விண்மதி நுட்பத்தால்
புத்துணர்வு தமிழால் புதுமைகள் படைத்து
தித்திக்கும் கதைகளை திரையுலகில் படைத்தார்

நுண்ணறிவால் தீட்டினார் நூல்கள் பலவும்
திண்ணமுடன் எழுதினார் திரைப்பட வசனமும்
எண்ண அலைகளை எளிமையாய் திரையிட்டு
கண்ணெதிரே புகுத்தினார் கலைநய உணர்வோடு

எழுதுகோல் வரைந்த இன்ப ஓவியம்
பழுதும் ஆகாத பராசக்தி காவியம்
எழுத்தறிவு புகுத்த எடுத்த காகிதம்
விழுதாகி போனது வியர்வையின் மைத்துளியால்

அரசியல் களத்தில் அறிஞர் அண்ணாவுடன்
புரட்சியும் செய்தார் பொற்கால விடியலுக்கு
சிரமங்கள் கடந்து சிகரம் அடைந்து
அரவணைப்பும் செய்தார் அன்னைத் தமிழினத்தை

முக்காலம் அளந்தார் முத்தமிழ் சுவையோடு
அக்னி சிறகாய் அகிலம் அறிந்து
பக்குவ நடையில் பாரதம் கண்டு
எக்காலம் வளர்த்தார் எழிலாய் தமிழ்நாட்டை

ஈ.தவணிதன்,
பல்லடம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0152.

கலைஞர் எனும் காவியம்

திருக்குவளை  தந்த திருவாரூர் தேரே!

செந்தமிழுக்கு செம்மொழி  பெற்றுத் தந்தவனே!

உடன்பிறப்பே என்று உணர்ச்சி ஊட்டியவனே!

கட்டுமரமாய் மிதப்பேனென நெகிழ்ச்சி ஊட்டியவனே!

தாயின் கருவறையில்  தமிழை பயின்றவனே!

பராசக்தியில்  பகுத்தறிவு பாடத்தை ஊட்டியவனே!

பெரியாரின் பாசறையில்  வித்தைகள் பயின்றவனே!

அண்ணா இதயத்தின் வீற்றிருக்கும் இதயக்கனியே!

நீ  எட்டாத சிகரம் ஏதுமில்லை!

உன்னால் சீர்படுத்தப்படாத துறை ஏதுமில்லை!

வள்ளுவனுக்கு சிலை அமைத்த வள்ளலே!

வானம் புகழ சாதனை செய்தவனே!

உன் சிரசை மகுடம்  அலங்கரிக்கும்;

அப்போது  அரசுஊழியர்  அகம் குளிரும்!

தேர்தலில்  வெற்றி பின்னால் கைகட்டியதே!

உன் கால்பட்டு தமிழ்நாடு பூஞ்சோலையானது!

உன்  கைப்பட்டு  தமிழ் விளையாடியது!

மீண்டும் உன்  முகம்  காணவேண்டும்!

கடற்கரையிலிருந்து  எழுந்து வா தானைத்தலைவா!

 தமிழச்சி மா.சித்ரா
தருமபுரி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0153. 

தமிழுக்குக் காவல் வாள்...

முச்சங்க பனையோலை மொழிக்கொப்ப கதைவேந்தர்//
முத்தான சொல்மாலை மாட்சிக்குக் கலைமாந்தர்!//
அச்சாகும் பிழையின்றி அவர்வார்க்கும் எழுத்தாரம்!//
ஆதாரம் நூலான
அருமைசார் வரப்பேறாம்!//
மிச்சம்தான் இங்கேது?
மங்காமல் தந்தாராம்!//
மணியான படைப்பாலே மதிகொள்ளை கொண்டாராம்!//

மெச்சாத ஆளில்லை
மேதாவி கைவண்ணம்!//
மொய்க்காதோ தேனீக்கள் முன்கண்ட தேன்கிண்ணம்?//
உச்சாணி மேற்சென்று உட்காரும் உயரெண்ணம்!//
உண்மையை உளமாற உரையாக்கும் முறைதிண்ணம்!//
மச்சங்கள் வைத்தாரோ 
மூளைக்குள் வருமுன்னம்!//
மட்டற்ற படைப்பிலே
மின்னும்பார் பொற்சன்னம்!//

அரசாட்சி திரைக்காட்சி
அனைத்தையும் எழுதும்கோல்!//
அசைந்தாடும் கலைஞரின் ஆறாம்கை விரலைப்போல்//
தரமான திறன்மிக்க தகைசேர்த்த குறளின்பால்//
தகுதிக்கு இணையான தமிழுக்குக் காவல்வாள்!//
உரமிட்ட வயல்போல 
உலராத பயிரின்கால்!//
உதிரத்தில் கவியூற்றாய் உயர்ந்தாரே வானின்மேல்!//

                                                                             கவிமாமணி டாக்டர் சோமதேவன் சோமசன்மா, ஜொகூர், மலேசியா 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0154.

என்றும் மறையாத சூரியன் 
*********************************
திருக்குவளையில் உதித்த உதய சூரியனே/
அறிஞர் அண்ணாவின் அஞ்சா நெஞ்சனே/
செம்மொழி தமிழ்த் தாயின் தலைமகனே/
சமூகநீதி காத்து சமத்துவத்தை நிலைநாட்டியவனே/
சமத்துவபுரம் அமைத்த சரித்திர நாயகனே/
தோல்வியே அறியாத தன்னிகரற்ற தலைவனே/
ஐந்துமுறை அரியணையமர்ந்த சாதனை நாயகனே/
முரசொலியில் உன் மடல் படிக்க/
தவமிருந்த வாசகர்கள் வட்டம் ஏராளம்/
மக்களுக்கு செய்த உதவிகள் தாராளம்/
உழவனின் துயர்துடைக்க உழவர் சந்தை/
சாதியற்ற சமத்துவம் போற்றும் சமத்துவபுரம்/
நோயற்ற வாழ்வுக்கு வருமுன் காப்போம்/
எண்ணற்ற திட்டங்கள் தந்து காத்தவனே/
தமிழ் போல் மங்காப்புகழ் கொண்டவனே/
உன் புகழுக்கு அழிவே இல்லை/
தமிழ் வாழும்வரை நீயும் வாழ்வாய்/
தமிழாய் தமிழர் மனதில் என்றென்றும்.../

மை. சத்திய பாரதி, தூத்துக்குடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

155. 

தலைப்பு :கொள்கைக்கு வாழ்ந்த கொற்றவர்

(1).நாகை குவளையில் மலர்ந்திட்ட மழலையிவர்!

(2).முத்துவேலும் அஞ்சுகமும் பெற்றெடுத்த பிள்ளையிவர்!

(3).பிள்ளைப் பருவத்தில் விளையாட்டில் ஆர்வம்!

(4).விடலைப் பருவத்தில் அரசியலின் தாகம்!

(5).பெரியார் விசிறிய விதைகளில் ஒன்று!

(6).ஆலமரமாய் வளர்ந்து ஆண்டது நாட்டை!

(7).தந்தை பெரியாரின் லட்சியமாம் பெண்ணுரிமை!

(8).அதிலே ஒன்றுதான் பெண்களுக்கும் சொத்துரிமை!

(9).அளித்தாரே பெண்களுக்கும் பெரியாரின் லட்சியத்தை!

(10).அதற்காக இயற்றினாரே சட்டமன்றத்தில் புதுசரத்தை!

(11).அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!

(12).அனைத்து சாதியினரும் காதல்மணம் செய்யலாம்!

(13).கல்விக்காக பயணம் பஸ்பாஸ் திட்டம்!

(14).விவசாயம் செய்வோருக்கு உழவர்சந்தை தனித்திட்டம்!

(15).வண்டமிழ் தமிழுக்கு உரமிட்ட தமிழ்மகன்!

(16).செம்மொழி தமிழுக்கு மாநாடு நடத்தியவர்!

(17).செந்தமிழ் தாய்மொழிக்கு காவலனாய் திகழ்ந்தவர்!

(18)கொள்கைக்கு வாழ்ந்த கொற்றவரே கலைஞர்!

 - மாரி. கண்ணதாசன்
த. பெ .சி. மாரிமுத்து
845,புதிய குடியிருப்புப் பகுதி
மலைக்கோட்டாலம்,
அஞ்சல் 
கள்ளக்குறிச்சி வட்டம் &மாவட்டம்
அஞ்சல் :606203

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0156. 

முத்தமிழறிஞர் விருது-2023

கற்பனையின் களமதிலே
         கங்கையெனப் பாய்ந்தவரே!
விற்பன்ன  ராய்நிறுத்தி
        வீதியுலா அழைத்தவரே!
பற்பலவாய் கவித்திறனில் 
        படைக்கலனாய் ஆக்கிட்டார்!
தெற்றெனவே விளம்புகின்ற
         தென்னாட்டுத்  தமிழ்வேந்தர்!(4)

கொற்றவனாய் முன்னின்று
         குலத்தமிழைக் காத்திட்டார்!
மற்றும்பல்  லிலக்கியமும்
         மகிழ்வுடனே படைத்திட்டார்!
பற்றுடனே பைந்தமிழைப்
         பண்புடனே சேர்த்திட்டார்!
நெற்றிக்கண் திறந்திடினும்
         நேர்மைவழி நின்றிடுவார்!(8)

இற்றையநாள் இவர்போலும்
           எவருளரோ புவிமீது?
கற்றார்கண் கவித்திறனில்
           களம்வென்ற அறிஞரவர்!
முற்றியதாம் தெங்கெனவே
          முழுப்புலமை கொண்டவராம்!
பொற்றாம ரையாகப் 
          புகழ்மலர்ந்து நிறைத்திட்டார்!!!.....(12)

தானாய்க்  கிளைத்தெழுந்த      
       தன்மானத்தின் இமயமிவர்!
தேனாய்த்   தமிழ்செதுக்கியத்
       தெளிவின்  சமயமிவர்.
பேனாவோ முளைத்தெழுந்த 
        பெரும்புகழாம்  ஆறாம்விரல்.
கூனாது   குறுகாது 
        கொள்கை  கூறும்ஒளிப்பரல்.(16)

வானைத்தொடும்  வள்ளுவரும்      
       வாழ்த்திடுவார்  வல்லமையை!
ஆனையென   அஞ்சாது        
         ஆற்றிடுவார் அரும்பணியை!
தானையென  அமைத்திட்டார் 
        தரமான    கழகமதை.
சேனையதும் காத்திடுதே
       செந்தமிழர் நாட்டினையே!(20)

வாழிய கலைஞர் புகழ்!
வாழிய! வாழியவே!

-முனைவர்.கிருட்டிணதிலகா
போரூர்.
சென்னை.

*************************************************

0157.
     சகாப்தத்தின் ஒரு தேடல்

திருக்குவளையில்  பிறந்த  மண்ணின் மைந்தன்

எண்ணத்தாலும் எழுத்தாலும்  இதயத்தில் குடியிருப்பவர்

வசனத்தால் பல திரைக்காவியம் படைத்தவர் 

கட்டுரைகள் பல எழுதி சிந்திக்கவைதத்வர் 

கவிதை எழுவதில் காவியத்தலைவன் இவரே 

முரசொலியில்  மக்களுக்கு செய்திகளை அறியச்செய்தவர் 

கைரிக்ஷாவினை ஒழித்த மனித நேயர் 

குடிசை மக்களுக்கு மாளிகை கட்டியவர்

முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் நிறுவியவர். 

பெண்களுக்கு சமவுரிமை சட்டத்தை  நிறைவேற்றியவர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69%இடஒதுக்கீடு  தந்தவர்

மகளிர் சுயஉதவி குழுவினை  தொடங்கியவர் 

சத்துணவுமுட்டை  தந்து மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்தவர்

திருமண உதவித்தொகை திட்டம் தந்தவர்


மெட்ராஸை தமிழில் சென்னையாக மாற்றியவர்

மாணவர்களுக்கு பேருந்து சலுகை வழங்கியவர் 

மாற்றுத்திறனாளி , திருநங்கை  படைப்புகளை படைத்தவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே தாயனவர் .

கவிஞர் சைலஜாகணேசன், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0158. 

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத்தமிழான முப்பெருந்தமிழுக்கு

செம்மொழியென்ற சிம்மாசனம் கொடுத்த வித்தகரே!

தனக்கென ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே!

உலகின் தொன்மையான மொழி எண்ணற்ற 

மொழிக்கு தாயாக இருக்கும் மொழியாம் 

தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் 
கிடைக்கச்செய்தவரே!

சீர்மிகு கோவையில் செம்மொழி மாநாட்டை

நடத்தி தமிழினத்தைத் தலைநிமிரச் செய்தவரே!

"செம்மொழியான தமிழ் மொழியாம் "என

தமிழின் செம்மையை கவியாய் வடித்து  

தமிழுக்கு "எழில்" சேர்த்த தமிழின் காவலரே!

சிங்காரச் சென்னையில் தமிழ் மொழிக்கு

மணிமகுடமாய் வள்ளுவர் கோட்டம் அமைத்து ,

வான்புகழ் கொண்ட திருக்குறளைச் செதுக்கிய முத்தமிழ்  நாயகரே!

கலைஞர் தன் கவிதை யாப்பிலக்கணம்

இன்றிப் போனாலும் போகட்டும் 

என் தமிழினத்திற்குக் காப்பின்றிப் 
போகக்கூடாது 

எனத் தன் மூச்சுள்ளளவும், பேச்சுள்ளளவும்  
 
தமிழ்த் தொண்டாற்றிய அவரின்று மறைந்திருந்தாலும் 

தம் சாதனையால் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்.


வாழ்க தமிழ்! வாழ்க கலைஞர் புகழ் !

மகாலட்சுமி குறிஞ்சி வேந்தன்
எம்.ஏ,பி.எட்
தமிழாசிரியை,
அவிலா பதின்ம மேல்நிலைப்பள்ளி,
வெங்கிட்டாபுரம், கோயம்புத்தூர்,
  641025.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0159.

 

160. கலைஞர் ஒரு சகாப்தம்.
---------------------------------
1.அஞ்சுகத்தின்- தலைமகனே -தொண்டர்களின்- குடும்ப விளக்கே .
2.பிறப்பு முதல்- இறப்பு வரை ஓயாமல்- உழைத்தவனே .
3.உனக்கு -மற்றொரு- பெயர் -கோபாலபுரம் .
4.குடும்பத்தை விட- கழகத்திற்கு- முதலிடம்- கொடுத்தவரே .
5.தொண்டர்களின்- குடும்பத்தை - அரவணைத்து- சென்றவரே .
6.தமிழ் மொழியை- செம்மொழியாக- பாடுபட்ட -தமிழினமே.
7.உன் -ஆட்சியில்- நலத்திட்டங்கள்- ஏராளம்.
8.சாதி- மதம்- மொழிக்கு- அப்பாற்பட்டவரே.
9.ஏழைகளுக்கு- தொலைக்காட்சி- பெட்டியை- வழங்கியவரே.
10.சாமானிய பெண்களுக்கு- சம உரிமை -தந்தவரே .
11.மகளிர்- நல வாரியம்- அமைத்த மாணிக்கமே.
12.ஏழையின்- சிரிப்பில்- இறைவனை- கண்டவரே.
13.மொழி- இனத்திற்கு- அப்பாற்பட்ட- பாசத் தலைவரே.
14.உன் வாழ்வில்- எத்தனை- சோதனைகள்- வழக்குகள்.
15.அத்தனையும்- வெற்றி கண்ட- அரசியல்- சாணக்கியரே .
16.திருவள்ளுவர் சிலை- அமைத்த -தமிழரே.
17.உறவுக்கு கை- உரிமைக்கு குரல்- என்று - முழங்கியவரே .
18.வருங்கால- சமுதாயம்- வாழ்த்தட்டும்- உன்னை .
   * என்றும்- நீ- என்- தலைவன். 

ஒ.கி. சிவா .
மதுரை.
--------------------------------------+

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0161. 

முத்தமிழ் அறிஞர் விருது .               

கன்னல் தமிழின் தலைசிறந்த தலைவன்!!!

குறளோவியம் தந்த தவப் புதல்வன்!!!         
 திருவாரூர் கண்டெடுத்த  தமிழ்ப் புதையல்!!!       
புரட்சியைத் திரைப்படங்களில் புகுத்திய நாயகன்!!!  
 நெருப்பு வசனங்களால் தீயோரை மிரட்டியவன்!!!  
  இயலிசை நாடகத்தில் கரை கண்டவன்!!!     
 தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியவன்!!!
 தமிழனை தலை நிமிரச் செய்தவன்!!!
செம்மொழி தமிழ்மொழியென பெருமைப்பட வைத்தான்!!!  
                    வாழ்நாளெல்லாம் தமிழனுக்காகவே போராடி வென்றான்!!!   
வாழும் வரை போராளியாகவே இருந்தார்!!!  
                         தமிழினத்தின் செறிவே இவரின் சிந்தனை!!!   
 தமிழனுக்குப் பெருமை கலைஞர் தான்!!!!    
 கலைஞரை விட்டுவிட்டு தமிழக வரலாறில்லை!!!  
 தமிழனின் மானம் காத்த மாவீரன்!!!  
 வள்ளுவக் கோட்டம் தந்த வல்லவன்!!!! 
  கண்ணகிக்கு சிலையெடுத்து பெண்ணுக்கு மதிப்பளித்தான்!!! 
 இணையில்லா தமிழகத்தின் தலைவர் கலைஞர்!!!!                               

- முனைவர் பீ.ரகமத் பீபி , திருவையாறு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0162.

* என்றும் கலைஞர் ... என்றென்றும் கலைஞர்...*

முத்துவேலர்
அஞ்சுகத்தின் 
மடியினில்
தவழ்ந்தாய் ..

திருக்குவளை
திருநகரில்
அவதாரமாய்
திகழ்ந்தாய் ..

சூன்
மூன்றில் 
முத்தாய்த் 
தோன்றினாய்..

எழுத்திலும்
இசையிலும்
உயர்நிலை
நல்வித்தானாய்..

தமிழை 
தமிழாகத்
தமிழருக்கு 
விதைத்தாய் !

இலக்கிய 
ஆர்வத்தில் 
தமிழைப் 
படைத்தாய் !

திருவாரூரில்
மன்றம் 
உன்னாலே
உதயம் ..

வட்டார 
வளர்ச்சியில்
மூழ்கியது
இதயம் ..

பேச்சும்
எழுத்தும் 
கண்களாகக்
கொண்டாய்

அரசியலை
நாடியே
விடியலைத்
தொண்டாய் 

பத்திரிக்கை
வழியே
மனங்களை
வென்றாய் ...

பத்திரிகைச்
செய்தியாய்
நாளடைவில்
மலர்ந்தாய்..

குடிசைப் 
பகுதியும் 
எழுத்துகளில் 
வலியானதே .!

கையெழுத்துப் 
பிரதியும்
முரசொலியாய்
வழியானதே .!

முரசொலி 
நிகழ்வுகள் 
காலத்தில் 
தூண்டிலானது ..

தடையினைத்
தகர்த்து 
தரணியில் 
தரமானது ..

ஈரேழு
அகவையில்
அரசியலில்
நாட்டம் .

கல்லக்குடி
நிகழ்வே 
திருப்பத்தின்
மனவோட்டம் .

டால்மியாவை 
அழிக்க
நண்பர்களை 
இழந்தாயோ .!

மறியலைத்
தொடர்ந்ததால்
சிறைக்குச் 
சென்றாயோ .!

இந்தி 
திணிப்பை 
இமையிலே 
எதிர்த்தாய் ..

மொழியின்
போராட்டத்தில் 
இளமையைக் 
கொடுத்தாய் ..

நின்
பார்வையில்
இந்தி
எடுப்புணவு !

ஆங்கிலம்
சொல்லித் 
தந்த 
சமைப்புணவு !

தமிழே 
விருப்புடன்
ஊட்டப்படும்
தாயுணவு !

மொழிக்
கொள்கையில் 
வீரியமானது 
நின் துணிவு .!

தோல்வியைத்
தழுவாத் 
தலைவரும்
நீயே !

பகுத்தறிவைத் 
தழுவிடும்
சூரியனும் 
நீயே !

நெருக்கடி 
காலத்திலும் 
அணையா 
விளக்கானாய் .!

நெருக்கடி
தந்தவருக்கும்
அணைக்கும்
நெருப்பானாய் .!

ஐம்பது
ஆண்டு
கழகப் 
பணியில் ..

ஐந்து 
முறை
முதல்வர்
பணி .

அறுபது 
ஆண்டு 
அரசியல்
வரலாற்றில் ..

ஓய்வில்லாச் 
சூரியனாய்
மக்கள்
பணி .

மறைந்தும்
என்றும் 
தமிழாக
வாழ்கிறாய்...

மனங்களின்
என்றென்றும்
திட்டங்களால்
ஒளிர்கிறாய் ...

முனைவர் இரா. இராமகுமார்
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

0163. 

*தலைப்பு: தமிழ் ஆண்ட கலைஞரை நான் மறவேன்.*

மூன்று தமிழ் ஆண்ட கலைஞர்//

மூன்று தமிழை ஆண்ட கலைஞர்//

இயல் இசை நாடகம் என்று//

இயன்ற எல்லாம் பயின்ற கலைஞர்//

தமிழால் நீ பெயர் பெற்றாயோ!//

உன்னால் தமிழ் பெயர் பெற்றாளோ!//

எப்படி இருப்பினும் புகழ் தமிழோடு//

தமிழ் காத்த உமக்கும் தானே!//

முக்கனி சுவை முழுதும் கலந்து//

முதுமலை நறுந் தேன் கலந்து//

முச்சங்கம் முழுதும் இடையறாது தவழ்ந்து//

மூவேந்தர் மன்றத்தில் மூத்த மகளாய்//

முருகனின் கண்ணின் இரு மணியாய்//

இருந்த தமிழ் உன்னாலே மேலும்//

இளமை பெற்று எங்கும் எதிலும்//

தமிழே உயர்ந்து விளங்குதையா - உம்//
 
குரல்  ஓங்கி ஒலித்ததையா இப்புவியில்//

எப்போதும் தமிழோடு உமையும் நான்மறவேனே…//

-முனைவர் கவிஞர் அ. ஞானவேல், தருமபுரி மாவட்டம் .

@@@@@@@@@@@#@@/@@@@@@@@@@@

0164.

     திருக்குவளை மலரே.....

கன்னித் தமிழுக்குக் காவலான கதிரவனே!

 சங்கத்தமிழுக்குச் செம்மொழி கண்ட வெஞ்சுடரே!

ஆதித்தமிழை
ஞாலமேடையில் அரங்கேற்றிய ஆதவனே!

முத்தமிழை முத்தமிட்டு நேசித்த மித்திரனே!

தீந்தமிழைத் திக்கெட்டும் பரப்பிய திவாகரனே!

 வெற்றித் தமிழால் உலகை வென்ற வெய்யோனே!

 சுந்தரத் தமிழில்
கவிவடித்த சுடரோனே!

நற்றமிழ் நாடகம் நடத்திய நபோமணியே!

 அருந்தமிழ்க் கதைகள் சொன்ன ஆதவனே!

 செந்தமிழில் முரசொலி வெளியிட்ட மித்திரனே!

குன்றாத் தமிழில் குறளோவியம்தந்த கதிரவனே!

தீந்தமிழ்ப் புலவருக்குச் சிலை செய்த திவாகரனே!

வண்டமிழுக்காக வடமொழி எதிர்த்த விண்மணியே!

 தேன் தமிழ்த் திரைப்படநாயகனே தயனனே!

 சித்திரைத்தமிழ் தொல்காப்பியப் பூங்காவின் சித்திரபானுவே!

 பைந்தமிழில் பகுத்தறிவு வளர்த்த பகலோனே!

 இனிமைத் தமிழ்த்தாய் பெற்ற கலைஞரே!

காலத்தை வென்றதய்யா தமிழும்! உம்புகழும்!!

 

முனைவர் இரா.கீதா, உதவிப் பேராசிரியர்,

இராமசாமி தமிழ்க் கல்லூரி,
அழகப்பா பல்கலைக்கழகம்,
 காரைக்குடி-03.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0165.

செந்தமிழ்  கலைஞர் ...!


அஞ்சுகத் தாயவள் நமக்கு
அவனியில்  அளித்த

திருக்குவளை தந்திட்ட
திருமகனாம் கலைஞரே

தமிழன்னை  தாலாட்டி
தமிழ்மொழியை  ஈந்தாரோ

செந்தமிழே உயிரென
செவிதனில்   புகட்டியவரே

செந்தமிழைச்  செம்மொழியாய்
சிறப்புற ஆக்கியவரே

கழகத்தின்  உதயமே
கடமையில்  சிகரமே

வள்ளுவனார்  கோட்டத்தை
வடிவெடுத்தார் சென்னையிலே

மதராசுப் பட்டினத்தை
சென்னை என்றாக்கியவரே

பெரியாரின் பாசறையில்
பெருமைபடக் கற்றவரே

அண்ணாவின் வழிநடந்தே
அகிலத்தில் வாழ்ந்தவரே

தென்குமரி  தன்னிலே
திறமிகு  வள்ளுவனாற்கு

வான்புகழ் சிலைவடித்த
சீர்மிகு வள்ளலே

சமத்துவபுரம்  தந்த
சமத்துவ நாயகனே

விதவையென்ற சொல்லினை
கைம்பெண்ணென்றே பொட்டிட்டவரே

பாமரன்  உள்ளத்திலும்
சாமரம்  வீசியவரே

முரசொலி தந்திட்ட
கழகத்தின் உதயமே

வாழிய  நின்புகழ்
வையகம்  உள்ளவரை

எம்செந்தமிழ் வரைந்திட்ட
தூரிகை  கலைஞரே

- ஆன்மிக லட்சுமி ( சி. மீனாட்சி )

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

166.

 செந்தமிழ்  கலைஞர்

தமிழ்த் தாயின் ஏக புதல்வரே/
முத்தமிழ் வித்தகர் என்று   புகழப்படுபவரே/
முடிசூடா மன்னர் எந்தன் கலைஞர்/
நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையாளர்/
உமது தூரிகையால் உலகை ஆண்டுவிட்டீர்/
இன்றும்  அனைவர் மனதிலும் பதிந்துவிட்டீர்/
கடலில் எரிந்தாலும் கட்டையாக மிதப்பவர்/
தான் மறைந்தாலும் எழுத்தால் மறையாதவர்/

தனித்தறமையால்  நாட்டை ஆண்ட சரித்திரநாயகர்/
உம்பேச்சிலே எங்கள் மனதைப் பறிகொடுத்தோம்/
இனியென்றும்  இது போல் அமையாது/
 தூயத் தமிழை கேட்க காத்திருக்கிறோம்/
கடற்கரையில் இருந்து எழ வேண்டும்/
 எங்களை மீட்க வர வேண்டுகிறோம்/
உம்போல் ஆட்சிபுரிந்த தலைவர் உண்டோ/
உமக்கு ஈடு உலகினில் ஏதுமில்லை/
இன்றும் பலவற்றை நினைக்கத் தோன்றுகிறது/
நீங்காத நினைவுகளுடன் நகர்கிறது நாட்கள்/

முனைவர்.ஜெ. ராஜகுமாரி.  

உதவிப் பேராசிரியர். தமிழ்த்துறை.

கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.  

நான்குநேரி. திருநெல்வேலி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

167.

திருக்குவளை சூரியனே..!

 குமரியில் உதிக்கும் உதய சூரியனே!

கவியாக்கம் செய்த கலைஞனும் நீயே!

தேய்பிறையிலும் தேயாமல் தோண்றும் வெண்ணிலவே!

அஞ்சா நெஞ்சனே! கலைகளின் மகனே!

கன்னித் தமிழின் கலைச் சிங்கமே!

கவிஞனுக்கு கலையின்மீது காதல் வந்ததே!

முப்பால்தந்த வள்ளுவனுக்குச் சிலை வடித்தவரே!

செம்மொழி அங்கீகாரம் தந்த தமிழனே!

ஈடு இணையில்லா தமிழக முதல்வனே!

ஐம்பூதமாய் தமிழகம் ஆண்ட தலைவனே!

அஞ்சுகத் தாயின் ஆசை ஆதவனே!

தமிழ்ச் செங்கோலே! முத்துவேலின் தளபதியே!

தரணியிலே எட்டுத்துக்கும் ஐயா உம்புகழே!

சாதணைகள் படைத்தச் சத்திய சரித்திரமே!

திருக்குவளை சூரியனே! பரசக்தி நாயகனே!

கவி படைக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனே!

சிப்பிக்குள் முத்தே! கவிதையின் கவின்முகிலே!

நீர் மறைந்தாலும் நாங்கள் மறக்கவில்லையை!

 
- ச. திரிஜா பாலா
கும்பரையூர், கொடைக்கானல்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0168.

அபூர்வ பிறவியே !

உடன்பிறப்பே  நீயெழுதியபோது என்மெய் சிலிர்த்தது !!

உடன்பிறப்பாக
உணர்ந்தநாள் அல்லவா அது !!

தமிழின்  அமுதே
மொழியின்  உயிரே !!

எங்களின் உடன்பிறப்பு
உலகம் சொல்லுமே !!

கடல் நடுவே உதயசூரியன் தான் !!

உதயமாகும் போதெல்லாம்
உன்னை நினைத்தே !!

கண்ணீர்,இக்கடல் நீருரெல்லாம் நீலமே !!

கொள்கையினால், முழக்கமிட்டு பகைவனென்று வார்த்தையாலே !!

நாடிநரம்புகளால் தன்மானமதிகரிக்க, தமிழ்மான உணர்வே !!

குடிசையில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றியமைத்தே !!

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தே !!

தோல்வியே அறியாத, அபூர்வ பிறவியே !!

பேச்சு ஆற்றலில் அதிசய பிறவியே !!

மு.கருணாநிதி என்ற  மறையாத சூரியனே !!

எப்போதும் உங்கள் புகழ் ஓங்குமே !!

உங்களுக்கு 100-வது , என்னிய பிறந்தநாளே !!

வாழ்த்துகளைத் தெரிவித்தோடு , என்றும் நலமுடனே !!

இருங்களென்று இறைவனிடம் சொல்லி வேண்டுகிறேனே !!


-பொ. கி. சந்தண குமார்,
   தூத்துக்குடி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0169.

"தமிழினத்தின் முகவரி கலைஞர்"

பைந்தமிழே முத்தமிழே திருகுவளையின் தீந்தமிழே!
நற்றமிழே செந்தமிழே திருவாரூரின் செம்மொழியே!
அருந்தமிழே அறிவாலயமே காஞ்சியின் திராவிடமே!
அரும்மருந்தே குறளோவியமே ஈரோட்டின் பகுத்தறிவே!

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த தமிழினத்தின் சுடரொளியே!
அஞ்சாமல் கருத்துக்களை எடுத்துரைத்த கவிச்சூரியனே!
பகுத்தறிவு பாசறையில் கொள்கைகளை விதைத்தவரே!
பாராட்டுகளை பெற்றவரே!தமிழகத்தை உயர்த்தியவரே!

ஏழை எளிய மக்களின் வாழ்வுயர போராடியவரே!
எல்லோரையும் உயர்த்திய சமுத்துவ நாயகரே!
அரசியல் எதிரிகளை மன்னிப்பதில் தாயானவரே!
அனைவரையும் அரவணைத்த தமிழினத்தின் மகத்துவமே!

உன்எழுதுகோல் உரையாடியது!பாமரர்கள் தலைநிமிர்ந்தனர்!
வசனங்கள் தெறித்தன!வந்தேரிகள் ஓட்டம்பிடித்தனர்!
அறிவாலயமே அமுதத்தமிழே!கவிநிலவே பராசக்தியே!
அண்ணாவோடு இணைந்தாய்!போராளியாகவே வென்றாய்!

ஈனர்களை விரட்டினாய்!மூடர்களை திருத்தினாய்!
இனமான உறவானாய்!கழகத்தின் உயிர்ப்பானாய்!
தமிழகத்தின் வரலாறானாய்!கவிஞர்களின் இதயமானாய்!
திராவிடத்தின் பேச்சானாய்!உடன்பிறப்புகளின் உயிர்மூச்சானாய்!

                கவிஞர் இனியன் பாலா.
                உதவிப்பேராசிரியர்,
              டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
               மதுரவாயல்,சென்னை-600 095.

 

**********************************************************************************************************

0170.

கலைஞர்

திருக்குவளை என்னும் கருக்குவளையில் அவதரித்தார்//
போராட்டங்களையே வாழ்க்கையாக அவதரித்தார்//
தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்த தலைமகன்//
தலைமகன்களே வியந்து போற்றும் கலைமகன்//
செம்மொழிக்கு உரம் சேர்த்த சொல்வீச்சு//
உச்சரித்த போதெல்லாம் தேனூறும்தமிழ்ப் பேச்சு//
இயல் இசை நாடகம் என்று//
முத்தமிழும் வளர்த்து நின்ற வித்தகர்//
யுகம் கடந்தும் வாழ்கின்ற தமிழினத்தின் சொத்தவர்//
படைப்புகள் எல்லாம் பகுத்தறிவு பேசின//
ஆதிக்க சாதிகளை வெளிப்படையாய் ஏசின//எழுத்துக்களையே ஆயுதமாக்கிப் புரட்சி செய்தவர்//
அவரின் அக்னி சொல்லுக்கு ஆகாயம் தீப்பிடித்தது//
கலைஞர்  தனி மனிதர் அல்ல//
தமிழின ஆளுமைகளின் ஒட்டுமொத்த அடையாளம்//
நூலறிவு நுண்ணறிவு என இரண்டிலும்//
திறம்பட  பயணித்த சாணக்கியர் அவர்//
தமிழகம் உச்சரிக்கும் ஐந்ததெழுத்து மந்திரம்//
ஒவ்வொரு எழுத்திற்கும் ஒருமுறை  என்று//
"கருணாநிதி" என்ற ஐந்தெழுத்திற்கு ஐந்து முறை//
முதலமைச்சராய் ஆன முத்தமிழ் வித்தகர்//
இமயமலை என்று எழுதலாம் எழுத்தா இமயமலை?//
இமயமலை என்பது வெறும் எழுத்து அல்ல//
கம்பீரம் ,மிரட்சி நிலைத்தன்மை, உறுதி//
அதுபோல் தான் "கலைஞர் "என்பதும் வெறும் சொல்லல்ல//
படைப்புலகபிரம்மா,ஏழைகளின் காவலன்//

யுகம் கடந்த வரலாறு ,கலியுகப் பிதாமகன்//
சிந்தனைச் சிற்பி ,கருவிலே திருவுடையான்//

என்னென்று சொல்லுவேன், என்னென்று சொல்லுவேன்//
தமிழினத்தின் அடையாளத்தை தன்மான சிங்கத்தை//
உம் கொள்கை வழி நடப்பது//
ஒன்றே எம் பிறவிப் பயனாகும்//

நல்லாசிரியர் தி.கீதா
தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி காருகுடி -முசிரி

*********************************************************************************************************

0171.

திருக்குவளை அரசர்

திருக்குவளையில் பிறந்த எங்கள் அரசனாய்
வளர்ந்தான் கவிஞனாய் கலைஞனாய் அறிஞனாய்...
பள்ளி பருவத்தில் முரசொலி புரட்சி
பதிமூன்று வருடம் தொடர் ஆச்சி
இலக்கியம் நாவல் நாடகமே மூச்சி
தமிழெங்கும் வளர்வதே இவரின் காட்சி
மாற்றுமொழி ஆட்சியில் ஏற்பட்டது தயக்கம்
திரட்டினார் பெரும் மாணவர் இயக்கம்
பகுத்தறிவு போராளி நார்த்திக அறிவாளி!...
கீழ்மக்களின் கூட்டாளி அரசியல் தொழிலாளி
கலை படைப்பாளி என்றும் போற்றும்
நாடக நடிகன் அரசியல் தலைவனானான்
சரித்திர இலக்கிய கவிஞன் ஆனான்;
பாரதம் போற்றும் தமிழ் புலவனே
வாரி வழங்கும் கருண நீதியே!...
காலம் கலைஞனை முடக்க நினைத்ததே
அறிஞனின் பணி வியக்க வைத்ததே
கரையில் உறங்குபவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ரா. கிரண்

2ஆம் ஆண்டு - இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,

மஹேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு

**************************************************************************************

0172

திருக்குவளையில் தோன்றி ஏழை இசையானாய்

தமிழனாய்...தமிழினத் தலைவனாய்...தட்சணாமூர்த்தியாய்...

தரணியெங்கும் திராவிட கழகத்தின் காவலனாய்

ஆளுமை திறனால் ஐந்துமுறை அரசாண்டாய்

தூக்குமேடையால் திரையுலகுக்கு கலைஞர் ஆனாய்

வளரிளத்தில் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பனாய்

அனைத்து மாணவர்களின் கழகச் செம்மலனாய்

மாணவ நேசனால் மன்றம் திரட்டினாய்

முத்தமிழ் அறிஞராய் முரசொலி கொட்டினாய்

குளித்தலையில் வென்று வரலாற்றுக்கு வழிவகுத்தாய்

நாற்பதாண்டுகள் திராவிடத்தின் தியாகச் சுடரானாய்

சிலோனியர்க்காக  சட்டமன்றப் பதவித் துறந்தாய்

கலைக்காகக் காலத்தைக் கொடுத்த காவியனானாய்

நெஞ்சுக்கு நீதியால் நீங்க இடம்பிடித்தாய்

உலகக் கலைப் படைப்பாளியாய் திகழ்ந்தாய்

செம்மொழியை இசையாய் செவி சேர்த்தாய்

மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மாமனிதனானாய்

கவிழாதக் கட்டுமரமாய் காலங்கள் கடந்தாய்.....


ஜெ.ஜனனி.,
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு,
மஹேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-நாமக்கல் மாவட்டம்.

*******************************************************************************************************

0173.

திராவிடத்தை பேணி காத்த கலைஞரே
தமிழை உலகெங்கும் பரப்பிய முத்தமிழ் நாயகனே
தமிழகத்தின் சரித்திர நாயகனே
நாடக கதை எழுதுவதில் வல்லவரே
செம்மொழி நாயகனே
விவசாய மக்களின் துயரத்தை துடைத்தவரே
ஏழை மாணவனக இருந்தாலும் சரி
பணக்காரர் வீட்டு மாணவனாக இருந்தாலும் சரி
சரி இருவருக்குமே
கல்வி சமமாக இருக்க வேண்டும் என்று
சமச்சீர் கல்வி கொண்டு வந்து சமூக நீதியை நிலைநாட்டியவரே
பொற்கால ஆட்சியின் தலைவனே
பன்முக திறமை கொண்ட தமிழனே
தமிழை வளர்த்த நாயகனே
வரலாறு எழுதி வரலாறு படைத்தவரே
பேச்சால் மக்கள் உள்ளத்தை வென்றவனே
சென்னையில் மாபெரும் நூலகம் அமைத்தவரே
அரசியல் சாணக்கியனே
ஆசிரியர்களின் காவல் தெய்வமே
பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய பாதுகாவலனே
சட்டத்தோடு மக்களுக்கு திட்டம் கொடுத்த வள்ளவரே
வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கிய முத்தமிழ் செல்வனே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 
இரா கார்த்திக் தமிழ் ஆர்வலர் 
கரூர் மாவட்டம்  

**********************************************

0174.

ஏங்கும் எழுதுகோல்!

தமிழால் அரசியலுக்கு விதை  தூவியவர் !

அரசியலால் தமிழுக்கு உரம் போட்டவர்!

இயல் இசை நாடகமாய் வாழ்ந்தவர்!

மூவுலகம் போற்ற முத்தமிழை வளர்த்தவர் ! 

தமிழுக்காய்த் தரணியிலே சுவாசம் செய்தவர் !

கதிரவனின் கைகளில் வாசம் செய்தவர்!

மண்ணில் மறைந்து மனங்களில் உறைபவர்!

தமிழ் அன்னையின் தவப் புதல்வன்!

 கண்ணகிக்கு உரை தந்த தமிழ்க் காவலன்!

பராசக்தி படைத்த பாரத சக்தி!

இயலாத வயதிலும் இயலாததைச் செய்தவர்!

 கதிரவனுக்கே மணி சொல்லி எழுப்பிய கலைஞர் 

அறிவு ஆலயத்தின்  ஒளி விளக்கு!

உலகிருக்கும் வரை வாழ உரமிட்டவர்!

எழுதுகோல் இல்லாத விடியலைக் காணாதவர் !

 சூரியனுக்கு முன் எழும் உதயசூரியன் !

 திரைக்கு உரை தந்த மாணிக்கம்! 

இவர் உரைகளில்  உறைந்தது  உலகம்!

              இரா. கவிதா. 
         சத்தியமங்கலம்.

           ஈரோடு மாவட்டம்.

***********************************************

0175.

எங்கள் வரமே .....

தவமின்றி கிடைத்த வரம் நீ!
செந்தமிழும் உன்மீது காதல் கொள்ளும்!
சங்க தமிழும் உன்னை வாழ்த்தும்!
தலைக்கனம் இல்லா தலைவனே!
உன் இனிமையான கவிதைகளை கேட்டால்
உள்ளத்தில் தேன் வந்து பயுமே!
இரு அடியில் உலகை அளந்தவனுக்கு
 கடலிலும், கற்புக்கரசி போற்றி கரையில்
சிலை வைத்து தமிழ் புகழ் 
எல்லா திசைகளிலும் ஒளிக்க செய்தவனே!
தமிழ்மொழியை உலகெங்கும் ஒளிக்க செய்தவரே!
சிறுகதை அரசனே முத்தமிழ் அறிஞரே!
ஏழை மக்களின் பசி ஆற்றியவனே! நோயில்லா வாழ்க்கையே குறைவில்லா செல்வம்!
இந்த சொல்லுக்கு அனைத்து மக்களுக்கும்
நோயற்ற வாழ்வை பரிசலித்த மன்னரே!
உன் புகழ் இந்த யுகம்
 உள்ளவரை ஒளித்து கொண்டே இருக்கும் !

             த.நந்தினி
                ஈரோடு.

**************************************************

0176.

கலைஞர்
தனக்குண்டான ஆர்வத்தால் தவழ்ந்து கொண்டிருந்த
தமிழ்மொழியினை தனித்துவம் மிக்க செந்தமிழாக்கினாய்!
ஈழத்தமிழர்தம்   வாழ்வில் இன்பம் பொங்கச்செய்தாய்!
கூடாரத்தில் குமுரிய மக்களை குடியுயர்த்தினாய்!
உதவாது என ஒதுக்கிய காய்கனிகளை
உழவர் சந்தையில் மிளிரச் செய்தாய்!
கல்வி எனும் மலையேற கரமின்றித் தவித்த
கன்றுகளுக்கு கல்வி உதவித்தொகை என்ற கரம்  கொடுத்தாய்!
கல்லும் மண்ணும் கலந்து பிளந்து 
கிடந்த நிலங்களுக்கு  விவசாய உதவிதொகை 
எனும் நீரூற்றி செழிக்கச் செய்தாய்!
இக்கட்டான சூழலில் இருந்த இயலாத
மணிகளுக்கு மருத்துவக் காப்பீடு  தந்து 
இழுத்துச் செல்லவந்த எமனைத் துரத்தினாய்!
தனக்கான அழைப்பு வரும் வரைத்
தமிழுக்காக உழைத்த உன்னத உள்ளம் நீ!
உனைப்போல் ஓர் உத்தமரை இனி 
இவ்வுலகில் எங்கு காணக் கூடும்?
இறங்கி வா! இனியவனே
 எங்கள் வாழ்வை நெறிசெய்ய….


மா.அருள்நதி  மாசிமாயன் ,  தமிழ் ஆசிரியை,  ஜெய்கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ  பள்ளி ,ஆண்டிபட்டி,தேனி மாவட்டம்.

**************************************************

0177.

காஞ்சித் தலைவன் அண்ணா வழியே! 

வழியாய் கதை வசனகர்த்தா ஆனாயே !
ஆனதால் உளியாய் வசனங்கள் தெரிந்தனவே! தெறித்ததால் சிலையாய் 
தெளிவு பெற்றாயே! பெற்றதனால் நீயும் செம்மொழி பூங்காவே! பூங்காவாய் உனது எழுத்துகள் தூரிகையே!
தூரிகை மையுடன் வரைந்தாய் இலக்கியமே! இலக்கிய இலக்கண சொல்நய விளக்கமே! விளக்கமாய் சொல்லும் 
சிலம்பு  பூம்புகாரிலே! பூம்புகாரில் இன்றும் வாழும் சிற்பங்களே! சிற்பங்களாய் மிக உயர்ந்த சிலையே! சிலையும் குறளடியாய் 133 அடி உயரமே! 
உயரமாய் உயர்ந்து நின்று உணர்த்துமே! உணர்த்தும் நம் வாழ்வியல் குறளே! குறளும் தொல்காப்பியமும் விளக்க உரையே! உரையில் நீயொரு அரசியல் சாணக்கியரே!

பேராசிரியர் முனைவர் வே. கஸ்தூரி 
சென்னை 45.

****************************************"*******

0178.

“கலைஞர் என்னும் காவியம்!”

ஏழையர் துயர்கண்டு 
எதிர்வந்து துடைத்தாய்!

கோழையர் கூன்நிமிர்த்தி கொள்கைதனை வளர்த்தாய்!

வாழையடி வாழையாய் 
வண்டமிழை வளர்த்தாய்

தாழைமடலெனத் தமிழ் 
மணக்க உரைத்தாய்!

புயல்விரை வேகமாய் 
புதுமைத் திட்டங்கள்!

வயலாடும் உழவர்க்கு 
வளமைச் சலுகைகள்!

அயலாரையும் அரவணைக்கும் 
அன்புச் சொல்லாடன்!

இயலிசை நாடக 
முத்துறையிலும் வில்லாளன்!

தித்திக்கத் தித்திக்க 
தீந்தமிழைப் பொழிந்திடுவாய்!

வித்திட்டாய் பகுத்தறிவை 
வீணர்கள் வீழ்ந்திடவே!

கழகம் வளர்த்தாய் 
தமிழுலகம் செதுக்க,

நிழலானாய் வறியோர்க்கு 
நேசம் காட்ட!

தழலாய்ச் சீறினாய் 
தாய்மொழி காக்க!

சுழலும் பூமியும் 
உனைப்போல் உழைக்காதய்யா!

விலையிலா பொக்கிஷமாய் குறளோவியம் படைத்து

அலைகடல் குமரியில் 
அய்யனுக்கு சிலைவடித்தாய்!

முதுமையிலும் தளரா 
முத்தமிழின் முகத்துவாரமே!

பொறுமையுடன் காத்திருப்போம் உயிர்த்தெழு வாயென்று!

கவிஞர்.முகில் தினகரன்
எண்:3, சாந்தி நகர்,
ஆவாரம்பாளையம் சாலை,
கணபதி அஞ்சல்,
கோயமுத்தூர் – 641 006.

*************************************************

0179.

வாழிய கலைஞர்

முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்த முகமே! /
அரசியலில் அரை நூற்றாண்டு அதிசயமே! /
தலை கொடுத்து தமிழ் காத்தவரே!/
அலையெனப் பெருகும் திட்டங்கள் தந்தவரே!/
உழவைக் காத்திட உன்னதத் திட்டங்கள்/
மகளிர் நலம்பேண மாண்புரு சட்டங்கள்/
பள்ளிகளில் பற்பல புதுமைகள் விதைத்தவரே! /
கணினியை அலுவலில் நுழைத்த அறிஞரே!/
காலம் உள்ளவரை பேர்கொண்ட கண்ணியமே!/
கடமை தவறாத கட்டுப்பாட்டில் வாழ்ந்தவரே!/
சுருண்டுகிடந்த திராவிடத்தை
சொல்லம்புகளால் எழுப்பியவரே!/
மாநில உரிமைக்காய் மாநாடுகளிலும் போராடியவரே! /
வறுமைக் கோட்டின் வலி களைய/ வாய்ப்புகள் வழியே திட்டங்கள் வகுத்தவரே! /
வார்த்தைகளின் கவனத்தில் எதிரிகளையும் ஈர்த்தவரே!/
வடக்கையும் திரும்பிப் பார்க்கவைத்த பகலவனே!/
கூட்டாட்சித் தத்துவத்தில் உரிமைகளைப் பெற்றவரே! /
அழியாத புகழொடு அகிலத்தில் வாழியவே!. 

   இளையவன் சிவா 
    மடத்துக்குளம்

   **************************************************

0180.

சங்கத் தமிழ்..!

கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர்//
சங்க தமிழும் உன்னை வாழ்த்திச் செல்லும்// 
தமிழும் உன்மேல் காதல் கொள்ளும்//
எண்ணற்ற நூல்களை கற்று அறிந்தார்//
கவிதைகள் படைக்கும் சிற்பியாக திகழ்ந்தார்//
அஞ்சுக அம்மையின் அழகான அன்பு மகன்//
சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் நாட்டில் தேன்றினார்//
கவிதைகள்,கதைகள் சிறப்பு பெற காரணமாக இருந்த தலைவனே//
உனது புகழ் நாடெங்கும் பரவட்டும்//
உனது திறமையினால் பல புத்தகம் தோன்றியது//
விருதுகள் உன் கைகளில் வந்து சேர விரும்பும்//
திரை உலகின் உன் கதைகள் சிறப்புபெற்றது//
பேச்சு திறமையில் வல்லவராக திகழ்ந்தார்//
மக்களின் துன்பம் போக்க தலைவராக இருந்தார்//
மக்களின் பிரதிநிதியாக சில காலம் போயின//
வீரன் ஒருபோதும் அழிவதில்லை//
உன் புகழ் ஒருபோதும் அழிவதே இல்லை// 
 உன் புகழை
 போற்றுவதற்க்கு எல்லையே இல்லை!!..


 ஜெ. வித்யா
பி.எ தமிழ்
ஆறுமுகநேரி

**************************************************

0181.

கருணாநிதியின் பெருமைகள் அளப்பரியது

 
திருக்குவளையில் உதித்த திராவிடச் சூரியனே!

தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்டவரே!

இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கியவரே!

திரைத்துறையில் திரைப்பட வசனகர்த்தாவாக மிளிர்ந்தவரே!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவரே!

எம்.ஆர்.ராதாவால் கலைஞர் பட்டம் பெற்றவரே!

குடியரசு இதழில் துணையாசிரியராய் பணியாற்றியவரே!

சட்டமன்ற தேர்தலில் தோல்வியைக் காணாதவரே!

தமிழக முதல்வராய் பதவி வகித்தவரே!

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரே

உழவர் சந்தைத் திட்டத்தைச் செயல்படுத்தியவரே!

திருமண உதவித் திட்டம் துவக்கியவரே!

காவலர் பணிக்குப் பெண்களை அமர்த்தியவரே!

திருவள்ளுவருக்காக  நினைவுச் சின்னத்தைத் தந்தவரே!

செம்மொழித் தமிழ் அறக்கட்டளை நிறுவியவரே!

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவரே!

உம் பெருமைகள் அளப்பரியது  உலகம்

உள்ளளவும் உம் பெருமைகளும் மங்காது.

க.ஹெலன்
காயல்பட்டணம்.

**************************************************

0182.

முத்தமிழறிஞர்

திருக்குவளையில் பிறந்து
திருவாரூரிலே வளர்ந்தவரே!

இலக்கோடு தமிழைப்படித்த
இலக்குவனாரின் மாணவரே!

அஞ்சுகம்மை ஈன்றெடுத்த 
அருந்தமிழ் அறிஞரே!

முத்துவேலவரின் அருமைந்தன்
முத்தமிழ் அறிஞரே!//

வளரிளம் பருவத்திலேயே
மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரே!//

எழுத்தும் பேச்சும்
எடுத்துரைத்த மாணவநேசரே!// 

முத்தமிழை வித்தாக்கி 
முரசொலித் தமிழாக்கியவரே!//

ஈரேழகவையில் கல்லக்குடியாக்கிய அரசியல் களப்போராளியே!//

அந்நியமொழித் திணிப்பை 
அடியோடு வேரறுத்தவரே!//

ஐம்பதாண்டு கழகத்தின் 
நிலையான தலைவரே//

போட்டியிட்ட தேர்தலில்
பெரும்புகழுடன் வெற்றிகண்டவரே//

தமிழ்மேடை தோறும்வீசிய மெல்லிய பூங்காற்றே//

தமிழ்ப் பேசும்(க்)கலை வளர்த்த முத்துக்குவியலே//

பரப்பிரம்மத்தையும் ஒரேமுத்தமாக ஏற்படுத்திய புனிதஇராச்சியமே//

தி.மு.கழகத்தின் தெவிட்டாத தேனலைகளின் தமிழ்ப்பழக்கூடையே//

அண்ணாக்கவியரங்கில் பனங்குலையாகப் பூத்தப் பாலைவனரோஜாவே//

வாழ்வெனும் பாதையில் தன்நெஞ்சுக்கு நீதியானவரே//

தொகுத்தவற்றில் எல்லாம் மணிமகுடமான குறளோவியமே!

ஆலமரத்துப் புறாக்களாக ஆதரித்த அமிர்தமதியே!

சந்தனக் கிண்ணமான காதல்கடிதத்தையும் நெருப்பாக்கியவரே!

திரும்பிப்பார்த்தால் கவிதைப்பேழையும் கவிதைச்சாவியும் நீங்களே!

அழியாத தமிழே!  நூறுகடந்தாலும் ஆழ்ந்த நினைப்பிருக்கும்....

கலைத்தமிழே கனிவுடன் கவிதை வணக்கங்கள்!

முத்திரைக்கவிஞர்
திரு ச.செந்தில்நாதன்
உதவிப்பேராசிரியர்
ஈரோடு

***************************************************

0183.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி..


மு முத்துக்களின் பிரகாசத்தை முத்தமிழுக்கு தந்தவரே
த் தித்திக்கும் தமிழ் சுவை கொண்ட அவ்வையாரின் அழகு புதல்வரே
த தணியாத வெம்மை கொண்ட தமிழ் தாக பற்றுடையவரே
மி மித்திரனாகவும் சூரியனாகவும் இருந்து தமிழுக்கு ஒளியை தந்தவரே
ழ் ழ்ழக்கு கவிச்சுவையும் சொல்லுக்கு சொற்சுவையும் பெற்றவரே
அ அன்பானவரே அறிவு தமிழ் தந்தை ஆனவரே
றி நன்நெறியில் உள்ள செய்நெறி தவறாதவரே
ஞ ஞாலத்தின் உலகிற்கு உயிர் உரித்தானவரே
ர் கவி அரசர்க்கு அரசர் என்ற பட்டம் பெற்றவரே
க கவிதை நயம் கொண்டவரே
லை லயத்தில் உள்ள கலை நயம் பெற்றவரே
ஞ ஞானச் செருக்குடைய தன்மான நிலை பெற்றவரே
ர் ர் என்ற கவியில் சுர் என்று சுதி சேர்ப்பவரே
க கடமையிலும் தமிழ் தாய் கண்ணியத்தை காத்தவரே
ரு உருத்திர மேரு கல்வெட்டுக்கும் கவி பால் ஊட்டியவரே
ணா நாதத்தின் கீதத்தில் கலைமகளின் ஸ்வர ஆசி கொண்டவரே
நி நித்தம் தோறும் கவியரசர் கம்பனின் கவிக்கு நிமித்தமானவரே
தி தித்திக்கும் கவிதைக்கு தேன் சுலைகள் கொண்ட சுலைமானரே

ஆர். எல். லாவண்யா

துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

*******************""*******************************

0184.

கலைஞரின் தமிழும் அரசியலும்.


முத்துவேல்  அஞ்சுகம்மா ஈன்ற முதல்வரே//1
திருக்குவளை  யறியானும் உலகறிய வைத்தோனே//2

ஏடேடாய் கற்றோனும் விஞ்சும்   எட்டறியோனே//3
செங்கதிராய் செழுமையான செம்மொழி   தந்தோனே//4

அரசியலில் அஞ்சா நெஞ்சு யுடையோனே//5
எதிரியும் எதிர்பேச பேச்சாற்றள் உடையோனே//6

சாதி இல்லா சமத்துவபுரம் படைத்தோனே //7
காரிருளை அகற்றி மின்னொளி தந்தோனே//8

நலிந்தோரின் நலன் போற்றும் கோனே //9
நங்கைக்கும் சொத்தில் சமபங்கு  அளித்தோனே//10

நானிலத்தை மாற்ற நற்பெயர்    வைத்தோனே/11
அவனியிலே அழியா புகழைப்     பெற்றோனே//12

அழைக்கிறாள்  தமிழன்னை ஆட்சி செய்யல்ல//13
அழிவில்லா அகவையை உனக்கு தர//14

எவரும் இல்லை தமிழைக் காக்க//15
ஐயனைப் போன்று சிலைகள் அமைக்க//16

அழகிய அன்னைமொழி அடுக்கடுக்காய் 
 பேச//17
 எம் ஏக்கங்களைத் தீர்த்திட எழுந்துவா...//18


மா.ரோஸ்லின், 
நேதாஜி நகர்,
அரக்கோணம்.

***********************************""***********

0185.

கலைஞரின் எழுதுக்கோல்

திருக்குவளையில் பிறந்த திராவிட பொக்கிஷமே..!//
உன் எழுத்துக்களே உன் அடையாளமாக..!//
மாறிப் போனது இந்த பிரபஞ்சத்தில்..!//
உன்னை அறியாத சிசு இல்லை..!//
உன் பேனா ஆயிரம் வசனங்களையும்..!//
தாண்டி நின்றது மக்கள் மனதில்..!//
முரசொலியில் உன் எழுத்துக்களே பொக்கிஷமாய்..!//
நிலைத்து எங்கள் செந்தமிழ் நாயகனே..!//
திராவிட சூரியனே உன் எழுத்தே..!//
புரட்சியின் அடையாளமாக மாறி எல்லோரு..!//
இதயத்திலும் நீ வசித்தாய் தமிழக..!//
முதல்வராய் நீ செய்த பணிகள்..!//
ஏராளம் உன் பேனாவிலிருந்து சிதறும்..!//
ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்கு பொக்கிஷமாய்..!//
மக்கள் மனதில் வைத்து பாராட்டின..!//
உன் பேனா எழுதி கொண்டே..!//
இருந்தது ஓய்வறியா சூரியன் போல..!//
உழைத்து கொண்டிருந்தார் முத்தமிழ் அறிஞர்..!//

கவிஞர். ஜெ. உ . தரணி  ஜெகதீசன்
திருப்பூர்.

*********************************************

0186.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

முத்தமிழ்  நாயகரே.
வித்தகராம் செந்தமிழில்.
முத்தனைய காவியங்கள்
சித்திரமாய்ச்  செய்தவராம்!

உள்ளமெல்லாம் வண்டமிழே!
வள்ளுவருக்கு வானுயர் சிலை!
தெள்ளமுதாய் வள்ளுவர் கோட்டம்!
அள்ளித் தருமே பெரும் புகழ்!

 சமத்துவம் கண்ட சரித்திர நாயகர்
சுமந்த கவலைகள் போக்கியவர்.
எமக்கு என்றும் நிகரற்ற தலைவர்!
அமர்த்தினார்  தமிழைச் செம்மொழியாக!

அண்ணாவின் உடன்பிறவா தம்பியாய்
எந்நாளும் மறவாத ஆதவன் எழுச்சியாய்
கண்ணான வசனங்கள் தந்த கனல்பொறியை
எண்ணாமல் இருக்க முடியுமா? தமிழரால்?
வாழ்க கலைஞர் புகழ்!

 ரூபன் ஸ்ரீ கார்த்திக்.
போரூர்.
சென்னை..

**************************************************

0187.

உன் பேச்சு என் உயிர் மூச்சு...

தமிழுக்கு தமிழனின் 
தலை வணக்கம் 

நான் உங்கள் கட்சியில்லை 
தொண்டனில்லை 

சொந்தமில்லை 
பந்தமில்லை 
ரத்தமில்லை 
உங்களோடு 

போற்றியதுமில்லை 
தூற்றியதுமில்லை

உனக்காகவா 
உனக்காக தமிழா 
தமிழை 

தழுவியதால் 
தலைவன் ஆனாய் 
நீர் 

யாம் வாழ்கிறோம் 
உம் பேச்சு
 எம் 

மூச்சு 
உம் ஆட்சி
 ஏழைகள் 

சாட்சி 
உம்மோடு வாழ்வது 
உண்மையில்

 வரம் 
உனக்காக வாழ்வது 
பிறப்பின்

 வரம் 
அன்பின் வடிவம் 
ஆற்றலின்

 வடிவம் 
இனிமையின் உருவம்
ஈகையின் 

மறு வடிவம் 
உழைப்பின்
 சிகரம் 

ஊக்கத்தின் பிறப்பிடம் 
எளிமையின்
 தோற்றம் 

ஏழையின் நண்பரே 
ஐயம்
 உனக்கில்லை 

ஒற்றுமை கற்பித்தாய் 
ஓங்கி உயரவைத்தாய் 
 
தமிழுக்காக.....
உடன்பிறப்பே என்ற சொல்லுக்கு 

 - ஆம் 
உமக்காக..... என் தேடல்

கவித்தேடல்  எம். மொய்தீன் மத்திய சென்னை.

***********************************************

0188.

கலைஞர் புகழ் பாடும் வையகம்.                     

உலகளவு எழுத்துகள் படித்த தலைமகன்! 

எழுத்தளவு இலக்கியங்கள் படைத்த பிதாமகன்! 
மலைளவு சோதனைகள் வந்த போதிலும்
கடுகளவு சாதனைகள் ஆக்கிய போதகர்! 

திருக்குவளை பெற்றுத் தந்த திருமகன்! 
திருக்குறளை எளிய தமிழில் தந்தவர்! 
அஞ்சுகம் வயிற்றில் அவதரித்த பெருமகன்! 
நெஞ்சுக்கு நீதி சொல்லித் தந்தவர்! 


இலக்கியம் எளியோரும் புரியவும் வைத்தவர்! 
 இனிக்கவும் உரையெழுதி வழிவகை செய்தவர்! 
பெரியார் பாசறையில் பெரிதும் ஈர்த்தவர்! 
பேரறிஞர் பாதையில் அரசியல் செய்தவர்! 

         வெ.முத்துமாரி
     க/பெ. ஈஸ்வரமூர்த்தி
எப்போதும் வென்றான்.
ஓட்டப்பிடாரம் தாலுகா
தூத்துக்குடி மாவட்டம். 

******************************************

0189..

மகுடமில்லா கலைஞன்


எனை ஆளும் தமிழுக்கு வணக்கம்...

எம்மனதை ஆளும் தலைவனுக்கு வணக்கம்...

நீர் எழுதும் கவியைக் கேட்க,

அலைகின்றக் காற்றுக் கூட அமைதியாகும்;

மனிதனாய் பிறந்தக் கவி எந்திரனே...

மனதை கொள்ளைக் கொண்ட தந்திரனே...

தமிழ் வானில் நீங்காதச் சந்திரனே...

வைரம் போல் ஒளிர்ந்திடும் சுந்தரனே...

கற்பனை வானில் மிதந்திடும் கவிப்பேரரசே...

உம் கவியே கேட்டு விட்டால்,

பட்டறிவாள் கத்திக்கூட பட்ட மரமாகிவிடும்;

சீரழிக்கும் நெஞ்சம்கூட திசையறியாது ஓடிவடும்;

ஆரடி மனிதனுக்கே ஆதாரம் அட்டையையா!

அழகான கவியென்றாலே 'கலைஞரை' நினைக்குதையா!

உம்கவியைக் கேட்கையிலே நெஞ்சமெல்லாம் உருகுதையா!

நித்தம் உம்பெயர் வைரம்போல் மினுக்குதையா!

மகுடமற்ற கவிஞனுக்கு என்னிடமிருந்து ஒருகவிதை,

தன்னம்பிக்கை உயர்ந்திடவே தத்துவமான உம்கவிதை...


- க.ராஜேஷ்,
ஒரத்தூர்,
சிதம்பரம்.

*********************************************

0190.

மாற்றத்தால் மாறாமல்
நாள்தோறும் உலகின் சுற்றிட
உதித்தவன் நீ உதயசூரியன்....!
சூரியன் உதித்திடஉத்வேகத்துடன்
உலகமும் உதிக்கும்......!

மக்கள் இதயத்தில் குடிகொள்ளும்
இதய சூரியனே.......!
நீ உதித்திட பல கவிகளும்- கூட
உன்னிடம் தோற்கும்.....!
உலகிற்கு வெளிச்சம் உதயசூரியனே........!
மக்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் நீ உதித்திடவே......!
எங்கள் இதயசூரியனே!

சங்கமித்த சூரியன் சந்தமாய் வானில் ஒளி வீசிட.....!
மறையாத சூரியனை- நீ
என்றும் மக்களை காத்திட.....!
மறையாமல் வந்திடவே வந்திடவே!

அரசியலின் ஆசான்..!
கலைத்துறையில் பேராசான்.....!
மேடைப் பேச்சுக்கு உன்னை
யார் மிஞ்சுவார்?
மக்கள் நலன் கருதி திட்டங்கள்- நீ
தீட்டிடவே பயனடையும் மக்கள் மனம் என்றென்றும் உன்னை....!
மனதார வாழ்த்திடுமே...!

பெரியாரின் சிந்தனை
அண்ணா பேசினார்.......!
ஆனால் அதையெல்லாம்
செயல்படுத்தி காட்டினாயே....!
அன்பின் இதயக்கனியே...........!

சங்கத் தமிழும் உன்னை வாழ்த்திடும்!
கன்னித் தமிழும் உன் மீது காதல் கொள்ளும்!
ஐம்பது ஆண்டுகள் அரசியலில்
உன் வாழ்வு அர்ப்பணமே......!
                                      என்றால்?
தமிழ் இலக்கியத்திற்கு- உன் சாதனை அளப்பரியவேயே.....!

சூரியன் கண் விழிக்க
இனிதாய் விடிந்திடுமே...!
புதிய விடியல்.........!

அஸ்வதி பூஜா G
W/O மனோஜ் ,11-123 ஜெய்நகர்,

பேச்சிப்பாறை,(post)
கன்னியாகுமரி, - 629161,

 

*************************************************************************

0191.

முத்தமிழறிஞர் கலைஞர்...!
 

பாமரன் போற்றும்  பண்பாளர் __ தமிழ்ப்/
படித்ததினால்   நாளும்  உயர்ந்து நின்றார்....! /
பகுத்தறிவு   சிந்தனை வளரந்ததினால்__எதையும்/
பகுத்துப்பார்த்து   பயன் செய்தார்....!
அறிவின்   துணையால்  ஆய்வு செய்தார் /
 அண்ணாவின்  தம்பியாய்   வலம் வந்தார்/
உறக்கம்  மறந்து   பணிசெய்தார்...! /
இரக்கமுடன்   நாளும்  நல்    நடைபயின்றார்...!
தனக்கோர்   பாதை  தான் வகுத்தார்/
மணக்கும்   செயல்களை  தினம்   செய்தார்...! /
உனக்கு  எனக்கெனப்  பாராமல்   __ உதவி  /
மனங்கள்  போற்றிட. நல்  வழி கண்டார்...!
அநீதிகண்டு  வெகுண்டெழுந்தார்     அதற்கெதிராய்  தானெழுந்தார்...! /
மனுவின்   முரண்பட்ட. கொள்கைக்கு  முரணானார்...! /
அனுதினப்  பேச்சில்   பகுத்தறிவு  __ எதையும்  /
அணுகிப்   பார்க்கும்   நல்  உறவு...! /
நேசம்  மிகுந்த. நம் நாட்டினிலே... /
 முத்தமிழ்  போற்றிய.  பெருங் கலைஞர் ...!

      __கதிர்பாரதி

***********************************************************************************

0192.

        (பேனாவின் காதலன்)
முத்தமிழ் அறிஞர் முத்தமிழுக்கு சொந்தக்காரனே,
காந்தக் குரலால் காப்பியத்திற்கு உயிர் கொடுத்தவனே,
வள்ளுவம் வாழ்வித்து
 திருவள்ளுவருக்கு 13 30 அடி சிலை வைத்தவனே,
திருவாரூர் திருக்குவளை தந்த திரு கலைஞனே,
செம்மொழி கண்ட செந்தமிழன் 
முதல்வனே, முத்தமிழன், கலைஞனாய்
பராசக்தி கண்ட நாயகனே,
ஏழை மக்களுக்கு எழுச்சி தந்தவனே,
அண்ணாவின் அன்பு தம்பியாய் அறவழியில் நடப்பித்தவனே,
பெண்களுக்கு வாழ்வளித்து சொத்துரிமை பெற்று தந்தவனே,
காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஏழைகளுக்கு கை கொடுத்தவனே, முதியோர், கைம்பெண், முதிர்கண்ணி வலி உணர்ந்தவனே,
உதவித்தொகை கொடுத்து வாழ்வித்தவனே,
திருநங்கை என்று பெயர் வைத்து திரும்பவும் வாழ்வித்தவனே,
சமத்துவபுரம் வீடு கொடுத்து சரித்திரம் படைத்தவனே ,    ஜாதிப் பேயை விரட்டி சமமாய் அனைவரையும் வாழ கற்றுத் தந்தவனே,
அன்புத் தலைவனே ஆற்றலின் நாயகனே,
பேச்சாற்றலின் பிறப்பிடமே பேனாவின் காதலனே,
நகைச்சுவை நாயகனே நாங்கள் விரும்பும் தலைவனே,
தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி தந்தவனே ,              ஜாதி மத பேதமின்றி  சமநோக்கு கொண்டவனே,
சாத்திரங்கள் உடைத்திருந்து சமுதாயத்தை முன்னேறியவனே,
ஏழை  ஆசிரியர் களுக்கு பணி தந்து ஏற்றம் காண வாழ்வித்தவனே,
என்றும் உன்னை மறவேன்உன் கால் தொட்டு கும்பிடுகிறேன்,என் உயிருள்ள நாள்             
வரை உம்மை மறவேன், கலைஞர் புகழ் என்றும் வாழ்க.
 

மை. மதலை மேரி தங்கதுரை இல்லம்
118p&t காலனி நரசிம்மநாயக்கன்பாளையம் கோயம்புத்தூர்- 31

***************************************

0193.

கலைஞர் ஓர் சகாப்தம்...

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ இரவென்னும் ஓய்வுண்டு ஆனால்

ஆனால் உன் அனல் பறக்கும் வசனங்களுக்கோ ஓய்வில்லை

நயமாக பேசுவதில் நாயகன் நீ

அண்ணா கண்டெடுத்த நாயகனும் நீயே

மூச்சூக்கும் இடைவேளை உண்டு ஆனால்

உந்தன் எழுத்து கவிகளுக்கோ இடைவேளை இல்லை

எழுத்தென்னும் விதையை விதைத்து விட்டீர்கள்

எத்தனை கவிஞர்கள் முளைப்பார்களோ உந்தன் கவிபேச்சைக் கண்டு

முத்தமிழ் கண்டெடுத்த அரியதொரு சூரியனே

இனி கண்டிடுமோ இவ்வையகம் உனைபோல் ஒரு தலைமகனை

ஆயிரம் ஆயிராமாய் பணிச்சுமை இருப்பினும்

எழுதுகோலைப் பிடித்த காவியத் தலைவனே 

மேடை பேச்சு உனக்கு புதியதில்லை இன்று

ஏட்டில் பேசவைத்து சென்றாயே ஏட்டிலக்கணமே

இமையத்தை தொட்ட இமையமே பல பல

காவியங்களை படைத்த காவியத் தலைவனே

இந்த நான்கு வரிக் கவிகளே 

கலைஞருக்கு நான் எழுதும் அச்சாரம் .....

கவிஞர் Kk.கார்த்திகேயன்.
திருவண்ணாமலை வெம்பாக்கம் ஒன்றியம் 
தென்கழனி..

************************************************

0194.

அழகு அழகு திருவாரூர் தேர் அழகு/
திருக்குவளை மண் அழகு..

முத்துவேலர் அஞ்சுகத்தாய் பெற்றெடுத்தார் பேரழகு/
முதல்வராக ஆட்சியிலே ஏறியது தனியழகு/

மேடையிலே பேசுகின்ற இடிமுழக்கம் மிகஅழகு/
சமுதாயச் சிந்தனையை திரைப்படத்தில் எழுதியது கலையழகு/

திக்கற்றோர் வாழ்வுக்குத் திட்டங்கள் தீட்டியதோ நடையழகு/

கடமைக் கண்ணியம் கட்டுப் பாட்டினை/
உடைமை கொண்ட உதயசூரியனி்ன் ஔியழகு/

தளபதியை நமக்களித்து தரணிபுகழ் போற்றச் செய்த கலைஞர் மகான் உலகழகு....

       கவிஞர்

மா.சுந்தரசாமி.
அமைப்பு சாரா தொ.மு.ச.
89வது வட்டம்
கோவை.

***********************************************

0195.

கலைஞரெனும் வித்தகர்.


தமிழகத்திற்கு தவமாக கிடைத்த வரமே ! 1
முத்தமிழின் தேனை முத்தாக தந்தவரே ! 2
தமிழின் அமிழ்தத்தை யாவருக்கும் அளித்தவரே ! 3
உலக வரலாற்றிலே இடம்பிடித்த உத்தமரே ! 4 வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலையமைத்தவரே ! 5
காப்பியங்களை இயற்றிய காப்பிய தலைவரே ! 6
தமிழ்மொழியின் தரத்தினை உலகெங்கும் பரவச்செய்தவரே ! 7
தமிழை செம்மொழியாக மாற்றிய வித்தகரே ! 8
தமிழகத்தின்  ஐந்துமுறை முதலமைச்சராகி முகிழ்த்தவரே ! 9
தமிழ்நாட்டின் தரத்தை உலகறிய செய்தவரே ! 10
சமத்துவத்தை பரவச் செய்து
 சமத்துவபுரமைத்தவரே ! 11 கலைகளுக்கெல்லாம் நாயகனாக விளங்கிய கலைஞரே ! 12 
கவிதைகளை வடித்த சிந்தனை சிற்பியாரே ! 13 
அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்த அஞ்சாநெஞ்சமுடையவரே ! 14
சூரியனைப் போல் ஓளிக்கொடுத்து தமிழ் வளர்த்தவரே ! 15 
காலத்தால் அழியாதே உன்னுடைய பெருமை !  16 
பொன்னெடுகளில் பதித்துக் வைக்கப்பட வேண்டியவரே ! 17 
கம்பன் வள்ளுவனைப் போல் 
நீயுமொரு ! 18 
மாபெரும் சகாப்தம் இத்தமிழ் 
மண்ணிற்கு ! 19:
வாழிய வாழிய பல்லாண்டு பலகோடி நூறாண்டு ! 20 
மக்கள் மனதில் பதிந்த மாபெரும்கலைஞனே ! 21


வசந்தாஶ்ரீதர் , 
முதுகலைபட்டதாரி ஆசிரியை
தாம்பரம் 
சென்னை.

**************************************************

0196.

கலைஞர் - ஓர் சகாப்தம்

சங்கத்தமிழைத் தீந்தமிழாய்த் தந்த தலைவனே...1

இளம் வயதில் இளமைப்பலி  எழுத்தோவியம் 
படைத்தவரே....2

 குறளோவியத்தைப் படைத்தாய் தமிழன்னையின் தலைமகனே....3

சமத்துவபுரம் தந்த சமத்துவ பெரியாரே...
உழவர் சந்தை தந்த உத்தமரே...4

சமச்சீர் கல்வி தந்த கள்விசெம்மலே...5
 
உங்களின் திட்டங்களால் பாரதநாடு பரவசமடைந்த்தது....6

தமிழ் மொழியை செம்மொழியாக்கிய செம்மலே...7

நாம் எனக் கூறிய சொல்வேந்தரே... 8

மூன்றே சொற்களில் வாழ்வியல் கற்பிதவரே...9

டயோஜினஸ் தேடிய சிறந்த மனிதரே.....10

கடலடியினழமும்  மலையுச்சியின் உயரமும் உன்புகழ்பாடும்...11

ஒவ்வொருதமிழனுக்கும்  உரிமை கொண்டாடுத்தவரே...12

இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்து நீங்கள்...13

அறிவார்ந்த உழைப்பும் வலிமையான மூளை கொண்டவரே...14

 பகுத்தறிவுக்குப் போற்றும் தமிழினம் தந்தவரே...15

பழைமையை நீக்கி புதியதோர் உலகைப் படைத்தவரே... 16

தமிழர் வாழ்வில் உத்வேகப்படுத்துவதில் உன்னதமானவரே.... 17

பிறரை வழி நடத்துவதற்காகவே வாழ்ந்தவரே....18

- V. ராதிகா B.Tech IT
CTS, Bangalore.

*******************************************

197.

தமிழின் தலையங்கம்!
***************************
கலைஞனென்றால் பெயர் குறிப்பு வேண்டும்!

கலைஞர் என்றாலே
கருணாநிதி ஆகும்!

பேனா கழட்டி  நா சுழட்டிய
தரமான தமிழன்!

சங்கத்தமிழின் உணர்ச்சி 
மிக்க மறவன்!

செம்மொழி தமிழின் 
தலையாய தலையங்கம்!

குறளுக்கு  குரல் கொடுத்த தமிழ்சிங்கம்!

திருவள்ளுவனை தேரில் அமர்த்திய பிதாமகன்!

கண்ணகி சிலையை 
கட்டிகாத்த கோமகன்!

ஆயக்கலைகளுடன் பிறந்த  
ஆளுமை பிறவி!

வற்றாது ஊற்றெடுக்கும் 
ஞாபக அருவி!

சிறைபட்டு  வதைப்பட்ட    திடமான சூரன்!      

திராவிடம் பராமரித்த 
இனமான வீரன்!

அரசியல் சூத்திரம் அறிந்த 
ராஜதந்திரி!

அகிலம் போற்றிய 
முதல் மந்திரி!

படைப்பு வித்தகர்களை வளர்த்திட்ட கற்பகத்தரு!

ஆயிரம் ஆயிரம் அரசியலாளர்களுக்கு ஞானகுரு!

சமூகநீதி  காத்திட்ட மக்கள் பித்தன்!

காலத்தால் அழியாத
சாதனை சித்தன்!

   
 - கவிஞர்.எஸ்.வெங்கடேசன்,
               ஆசிரியர்: "சூரியச்சுடர்"
   (மாதம் இருமுறை தமிழ் இதழ்)
                         மற்றும் 
   திரைப்பட இணை இயக்குனர்,

அலுவலகம்:4/52B,காட்பாடி மெயின் ரோடு,(AXIS  ATM UPSTAIRS),பேருந்து நிலையம் அருகில், கீ.வ.குப்பம் (வட்டம் & அஞ்சல்),வேலூர் மாவட்டம். அஞ்சல் எண்: 632201.
*************************************************

198.

கலைஞரின் எழுதுகோல்
***.  ****.  ***


ஆலய ஆணவத்தை
அடக்கிய எழுதுகோல்...!
சாதிய முரனை
சாடிய சாதனை...!

நீதியின் நித்திரையை
நெம்பிய நெம்புகோல்...!
ஆண்டான் அடிமையை
அலறவிட்ட ஆளுமை...!

எழுத்தின் சிறப்பை
கவிதையில் பேசிய...
தமிழின் இனிமையை
எழுத்தில் பாடியே...!

அரசியல் வீதியில்
அறம்பல கூறி...
திரையில் புரட்சி
தீண்டிய பெருந்தீ...!


எதிரியை கூடவே
எளிமையில் அணைத்து..!
எதார்த்த நிலையை
ஆளுமையில் காட்டிய..!

முத்தமிழ் அறிவை
மூலமாக விதைத்த...!
சிந்தனை அருவியை
சீர்திருத்த செய்த...!

பேணா முனையே
பெருமை விதையே...!
பெருந்தகை திலகமே
பேரூடை  மகுடமே..!

சங்கத் தமிழே தங்க
சுரப்பி பொழிவே..!
வாழ்வியல் வசந்தமும்
வறுமை கீதமாக..!

களத்தில் நின்ற
காலக்கொடையே...!
கடமை கண்ணியம்
கருத்தை கவனமாய்...!

உறவுகள் உரிமைகள்
எழுதிய கோலே..
தேசியம் தேடிய
உழைப்பின் மதிப்பே...!

முரசொலி எழுத்தின்
முகவரி நீயே...!
முத்தாரம் சூடிய
குங்குமம் நீயே...!

பொன்னரும் சங்கரும்
சரித்திரம் சொல்லி...!
பூவும் பொழுதும்
புதுமைகள் காட்டி...!

கதிரென விடிந்து
காலையாய் மலர்ந்து..!
இந்திய அரசியல்
இல்லத்தில் நடத்தி...!


இமயமாய் உயர்ந்த
இலக்கிய வாழ்வே...!
இதயமாய் மணக்கும்
இலக்கண சிறப்பே...!


குனிந்தவன் நிமிர
குனிந்தே எழுதி...!
விழுந்தவன் எழுந்திட
ஊன்றுகோல் ஆனாய்...!!

பழமை நோக்கம்
பகிரும் குப்பையை..!
புதியன பொங்கும்
புரட்சி எழுத்தில் வாழ்க..!!!


வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்

******************************************************************************************************************

0199.

திருக்குவளையில் உதித்த தென்னகச் சூரியனே

தமிழுக்காக நாளும் உழைத்த தலைமகனே

கலைஞர் என்ற சொல்லிற்கான அடையாளமே

வசனத்தை வசமாக்கி வசந்தமழை பொழிந்தாய்

பராசக்தி என்றும்உன் வசனத்தால் வாழ்கிறாள்

குறளுக்கு நீ எழுதிய காவியம் குறளோவியம்

நாத்திகன் நீ கொண்டு வந்தாய்

இந்து சமய அறநிலையத் துறை

நரவண்டி சைக்கிள் ரிக்க்ஷாவானது உன்னால்

தூற்றுவோரும் போற்றுவோரும் பங்காளிகள் 
உன்வரலாற்றில்

அண்ணாவின் பெயராலே எத்தனையோ திட்டங்கள்

பெரியாரின் நினைவாலே எத்தனையோ சமத்துவபுரம்


மாநில சுயாட்சி உன் உயிர்மூச்சு

கற்கண்டாய் இனிக்கும் உன்  தமிழ்ப்பேச்சு

 நாவில் நக்கீரன்  சிந்தையில் சாணக்கியன்

உடன்பிறப்புகளே உன் உண்மை உறவினர்கள்

கலையின் ரசிகன் ஆற்றலில் கலைஞன்

பாராளுமன்றமாய் சட்டமன்றமாய் வாழ்ந்த கோபாலபுரத்தாய்


பெரியாரின் சிந்தையைப்  உள்ளத்தில் ஏற்றி 

இளைய அண்ணாவாய்
வாழ்ந்தாய் போற்றி...


ம.பிரசன்னா
மம்சாபுரம். 

 

*************************************************

200.

முத்தமிழ் அறிஞர் விருது 2023 
********************************

முத்தமிழ் வித்தகர் கலைஞர்

இலக்கண இலக்கியங்களை கற்று தேர்ந்தவரே !
முத்தமிழ் சுவையை உணர்ந்து கொண்டவரே !
கடலிலும் கட்டு மரமாய் மிதப்பவரே !
கலைநயம் அறிந்த  அறிஞரே !
வெண் கொடை ஆட்சி புரிந்தவரே !
சங்கம் வைத்த தமிழை உயிராய்
 ஊண் உடலாய்‌ பார்த்த பண்பாளரே !
கலையையும் கலைஞர்களையும் காத்து நின்றவரே !

அரசியல் ஞானம் நிறைந்த ஆளுமையே !

மக்களின் மனதில் நிலைத்த பெருமையே !
வசனம் படைத்த அனுபவப் படைப்பாளியே !

கதை எழுதிய கருத்து பெட்டகமே !
காலம் தாண்டிய  உயரிய காவியமே !
தமிழரின் பெருமை ஏந்திய வானமே !
சொல்லு வளத்தோடு பேசிய சுவடே !
  "கலைஞரின் எழுதுகோல் "

இலக்கண இலக்கியங்களை கற்று தேர்ந்தவரே !
முத்தமிழ் சுவையை உணர்ந்து கொண்டவரே !
கடலிலும் கட்டு மரமாய் மிதப்பவரே !
கலைநயம் அறிந்த  அறிஞரே !
வென்கொடை ஆட்சி புரிந்தவரே !
சங்கம் வைத்த தமிழை உயிராய்
 ஊண் உடலாய்‌ பார்த்த பண்பாளரே !

அரசியல் ஞானம் நிறைந்த ஆளுமையே !

மக்களின் மனதில் நிலைத்த பெருமையே !
வசனம் படைத்த அனுபவப் படைப்பாளியே !
முத்தமிழ் வித்தகராய் திகழ்ந்த மேதையே

கதை எழுதிய கருத்து பெட்டகமே !
காலம் தாண்டிய  உயரிய காவியமே !
தமிழரின் பெருமை ஏந்திய வானமே !
சொல்லு வளத்தோடு பேசிய சுவடே !


கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

************************************************

201.

முத்தமிழறிஞர் முத்தமிழறிஞர் கலைஞர்....
                   
முத்துவேலர் அஞ்சுகத்தின் மகனாய்த் தோன்றி
  மழலையாய்த் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் மாந்தி
புத்தகப்பை ஏந்துகின்ற மாணவ ருக்குள்
  திருக்குவளை வீதிகளில் மிடுக்காய் வந்து
புத்தாக்கச் சிந்தனைகள் மனதைத் தூண்ட
  பூபாள விடியலுக்கு வரவு கூறும்
உதயஞாயி றெனவந்த சுடர்மு கத்தோய்
  உன்பிறப்பால் தமிழினமே தலைநி மிர்ந்தது.

பெரியாரின் சீடனாகக் கொள்கை ஏற்று
  பகுத்தறிவுப் பட்டறையில் பயிற்சி கண்டு,
பெருங்காஞ்சித் தலைவனவன் அன்பில் தோய்ந்து
  பேரறிஞர் அண்ணாவின் போர்வாளாகி
பெருகிவரும் ஆரியத்தின் மாயை யாலே
  பெருங்கேடு சமூகத்தில் களையாய் மண்டி 
பெருந்தமிழ்ப் பேரினத்தின் செழித்த வாழ்வைச்
  சீரழிக்கும் அவலம்கண்டு ஆர்த்தெ ழுந்தாய் !

திராவிடத்தின் கோட்பாட்டுக் கொள்கை கற்று 
  திராவிடத்தின் தமிழ்ப்பகையை வெட்டிச் சாய்க்க
தராதலத்தில் எழுத்தொன்றே ஆயுத மென்று
  தன்மான மைதோய்த்து எழுதி னாய்நீ !
பராவுதமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் நோக்கில்
  ”பராசக்தி” , ”மனோகரா”  திரைக்க தையால்
விராவுதமிழ் எழுச்சிமிக்க வசனம் பேசி
  வீறுகொண்ட சமுதாயம் காண விழைந்தாய் !

வள்ளுவத்தை முழுதாய்ந்து கற்ற தாலே
  வளமார்ந்த சென்னையிலே கோட்டம் கண்டாய்,
தெள்ளுதமிழ்த் தென்குமரிக் கடற்ப ரப்பில்
  குறளாசான் வள்ளுவர்க்குச் சிலைஅ மைத்தாய்.
வள்ளுவத்தை வாழ்க்கைநெறி ஆகக் கொண்டு
  குறளோவியம் படைத்ததுடன் உரையும் கண்டாய்..
வள்ளுவர்க்கு தைப்பொங்கல் நன்னா ளன்று
விழாக்கண்டு வாழுகின்ற வள்ளுவ ரானாய் !

எழுத்தாலும் ,பேச்சாலும் ,செயல்க ளாலும்
  எழுச்சிமிக்க தமிழகத்தை உருவாக் கத்தான்
பழுத்ததொரு அனுபவத்தின் முதிர்ச்சி யாலே
  பலப்பலவாம் நலத்திட்டம் மக்க ளுக்கே
முழுதாகப் போய்ச்சேர வேண்டு மென்று
  முனைப்புடனே செயலாற்றும் கடமை வீர்ர் !
பழுதற்ற நல்லாட்சி நிர்வா கத்தால் 
  பயனடைந்தார் இந்நாட்டு மக்க ளெல்லாம் !

ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வ ராகி
  அரியபல சாதனைகள் நிகழ வைத்தாய் !
செந்தமிழைச் செம்மொழியாம் தகுதிப் பாட்டை
  சான்றுகளால் முன்வைத்து வெற்றி கண்டாய் !
நந்தமிழர் நலமொன்றே குறிக்கோ ளாக
  நாடெங்கும் நல்லபல திட்டம் தந்தாய் !
கந்தலாடை ,வயிற்றுப்பசி கதியே இல்லா
  கடைக்கோடி மாந்தனையும் வாழ வைத்தாய் !

தொழில்துறையில் பல்வேறு திட்டம் தீட்டி
  தொழிலாளர் முன்னேற்றம் காணச் செய்தாய் !
எழில்மிக்க சிங்காரச் சென்னை யாக்க
  எண்ணற்ற பூங்காக்கள் , மேம்பா லங்கள் ,
வழிவழியாய் உன்சிறப்பை உலகம் பேச
  வகுத்திட்ட திட்டங்கள் பலவே யாகும் .
மொழிகாத்தாய் ! விழிகாத்தாய் ! தமிழர் நெஞ்சில்
  பால்வார்த்துப் பண்பாட்டை முழுதும் காத்தாய் !

முனைவர் அ.இராசேந்திரன்
முதன்மைக் கல்வி அலுவலர் (பணிநிறைவு),
61/7, வடக்குத் தெரு, செய்யூர் அஞ்சல் – 603302.

*******************************************

  202.                 

முத்தமிழ் அறிஞர்

திருக்குவளை பரிசளித்த முத்துவேல் கவிஞரே!
அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நாயகனே!
மூடநம்பிக்கைகளை விமர்சித்த நாத்திக பெரியாரே!
அறிஞர் அண்ணாவின் உள்ளம் கொண்டவரே!
செந்தமிழ் பேச்சால் தேனைத் தெளிப்பவனே!
முரசறைந்து நியாயங்களை முரசொலிவழி தந்தவரே!
விதவைச் சொல்லை கைம்பெண் ஆக்கியவரே !
திராவிடக் கழகத்தின் திராவிடச் சூரியனே!
கலையுலகம் போற்றும் பராசக்தி பண்டிதனே!
சமூகநீதி பேசிய தென்னகத்து சிங்கமே!
பொற்கால ஆட்சிப்படைத்த சரித்திர வேந்தனே!
தமிழின் தலைவனே! செம்மொழி செல்வனே!
 மாற்றான் தமையன்களை உடன்பிறப்பே என்றழைத்தவரே !
 மக்களுக்காக உழைத்த உழைப்பின் சிகரமே!
முத்தமிழுக்கும் பிடித்த மூத்த மைந்தனே!
எழுதுகோலும் காதல் கொள்ளும் எழுத்தாளரே!
தமிழ்நாட்டின் தியாகச் சுடரே! கலைஞரே!
 பூமித்தாயின் மடியில் புவிப்போற்ற உறங்குவாயாக..!

ந.மோகனா,
      காயல்பட்டினம்,
       தூத்துக்குடி
.

 

************************************************

203  .                      

கலைஞர் 

 நீங்கள் பேனாவில் மை ஊற்றியதை விட 

உங்கள் சிந்தனையில் ஊற்றியதே அதிகம்

 மைதீர்ந்த நிகழ்வு உண்டு 

கை ஓய்ந்த  காலம் உண்டா 

கூர் போர்வாள் மட்டுமல்ல 

வாரி வழங்கிய உங்கள் பேனா முனையும்

 உழைப்புக்கு உழைக்கச் சொல்லி தந்தவர் 

ஓய்வு காலத்தில் ஊதியம் தந்தவர்

 தேனியாகத்தான் வாழ்ந்து காட்டியவர்

 அவர் பாணியில் துளியும் அயராதவர்

 மக்களை பார்ப்பதில் தாயாகும் வாழ்ந்தார்

 காப்பதில் காவலனாகவும் காத்து வாழ்ந்தார்

 உண்ணாமலும் உறங்காமலும்  மொழியே பேணியவர்

 அண்ணாவின் பாசறையில் பாதம் பதித்தவர் 

ஐந்து முறை முதல்வரானவர்

 50 ஆண்டுகள் கட்சித் தலைவராய்

 பதவிக்காலத்தை பறைசாற்றி கொண்டே போகலாம்

 நெஞ்சில் நிறைந்தவர் நினைவில் வாழ்பவர்

 டி .எம் .ஆர். இளங்கோவன் குன்னத்தூர் திருப்பூர் மாவட்டம்.

 

********************************************

204.

கலைக் கதிரவன் கலைஞரே!

ஒற்றைச் சூரியனாய் ஒளிகொண்ட மதியே//

இரட்டைக்கதிராய் தமிழுடன் இரண்டறக் கலந்த நதியே//

முத்தமிழ் முத்தடுத்த கலைஞர் கருணாநிதியே//

நாற்றிசை முழங்கும் செம்மொழிகீதத்தின் சங்கதியே//

ஐம்முறைஆண்ட செங்கோல் செருமும் உன்கதியே//

ஆறாம் அறிவை அறுசுவையாக்கும் வசனத்தீயே//

ஏழுஸ்வரங்களில் லயம் கொண்ட விதியே//


எட்டாம் கோளும் முட்டும்  முரசொலியே/

  நவரச நாவலோ நவமணி ஒளியே//

பன்மடங்கு பண்படுத்தும்  சமூக நீதியே//

எண்ணிலா எழுத்துகளால் ஓய்விலா உழைப்பாளியே//

பார்வை மறையும் வரை ஏடுபடைத்த படைப்பாளியே//

 உன் எழுதுகோல் எழுத வருந்தியல்லை//

 நின் செங்கோல் நழுவ இருந்ததில்லை//

கரங்களால் கைரிக்ஷா ஒழிப்பு கையெழுத்தானது//

கருணாயால் குடிசைமாற்று வாரியம் தலையெடுத்தது//

இது ஒன்றோ இந்தியாவின் முன்னோடிதிட்டத்தின்   முதல்அடி//


 முன்மொழிவால் மூத்தமொழி தமிழ் செம்மொழியானது//

. ஜீ.கலைச்செல்வி.தாரமங்கலம்.சேலம் மாவட்டம்.

*********************************************

205.

கலங்கரைதான் கலைஞர்
      

கடும்புயல் அலைஎதிரே கலம்தனை ஓட்டினீர்
கலங்கரைதான் கலைஞரெனக் கண்களுக்குக் காட்டினீர்

ஆகாயமென விரிந்தவும் ஆளுமை சொல்ல 
ஆகுமோ வரிகள் அறுமூன்று எல்லை
ஆயினும் ஆகுமே அதற்கும் உள்ளே
அளந்தானே வாமனன் அதனைப் போலே

செம்மொழித் தலைவனே செங்கதிர்த் தனையனே 
உம்மொழி கேட்டோம் உரிமைகள் மீட்டோம் 
தமிழ்மொழி தழைத்தோங்கத் தாயென நின்றாய் 
தமிழினம் தலைநிமிரத் தன்வாழ்வைத் தந்தாய்

ஏழைகள் அடுப்பும் எரிவாயு ஆனதே
எவரின் பிறப்பும் ஏற்றத்தாழ்வு போனதே
அனைவரும் இங்கே அர்ச்சகர் ஆயினர்
அந்தப் பராசக்தி அம்பாளாய்ப் பேசினீர்

வள்ளுவன் உமக்கு வளர்ப்புத் தாயே 
வைத்தாய் சிலையதற்கு வானுயரம் நீயே 
தி.மு கழகம் என்னும் தியாகக் கோட்டை
திறமுடன் வீற்றதில் தினங்காத்தீர் நாட்டை 

                  கவிஞர்
            கவிக்காந்தன்
       தென்காசி முருகன்
                       

************************************************

206.                    

கண்ணாடி  அணிந்த
கன்னித் தமிழ்
********************

முத்துவேலர்  அஞ்சுகம்
ஈன்றப்  பிள்ளை //

திருக்குவளை
மண்ணிலே
தவழ்ந்த
முல்லை //

முரசொலிப்போல்
இவருடையக்
குரல்
இருக்கும் //

இவரின்
பேச்சிலே
தமிழ்
மணக்கும் //

நடிகர்
திலகத்தின்
இனிய
நண்பர் //

நெஞ்சிலே
உறுதிக்
கொண்ட
மாமனிதர் //

பேரறிஞர்
அண்ணாவின்
அருமைத்
தம்பி //

பேனாவால்
திரையுலகை
ஆட்சி
செய்தவர்//

குமரியிலே
வள்ளுவனுக்கு
சிலையை
அமைத்தார்//

கழகத்தை
மூச்சாய்
இவரும்
நினைத்தார்//

செந்தமிழை
செம்மொழியாய்
உயரச்   செய்தார்//

தமிழ்நாட்டை
திறம்பட
ஆண்ட
முதல்வர் //

முத்தமிழ்
அறிஞராம்
டாக்டர்
கலைஞராம்//

கண்ணாடி
அணிந்த
கன்னித்  தமிழாம் //

மஞ்சள்துண்டு
எப்பொழுதும்
கழுத்தில்
இருக்கும்//

பகுத்தறிவு
கருத்துகள்
நாவில்
பிறக்கும்//

அரசியலிலே
சாணக்கியராய்
விளங்கி  னாரே//

அலைக்கடல்
ஓரம்இன்று
உறங்கு  கின்றார்

ப. குமரகுரு

(முத்தமிழறிஞர்
விருதுக்கவிதை )

*******************************************

0207

அன்பின் பிறப்பிடம்
அரசியலில் 
சாணக்கியன்/1
ஆற்றல் மிக்க
ஆதவன் நீயன்றோ/2
பன்முக மன்னன்
பல்கலை வித்தகன்/3
பத்திரிக்கை
ஆசிரியராய்
பாரில்
புகழ்பெற்றார்/4
உழைப்பால்
உயர்ந்த உத்தமன் 
நீயே/5
உடன்பிறப்புக்காய்
வாழ்ந்தவனும்
நீயே அன்றோ/6
நாடக ஆசிரியராய்
நர்த்தனம் புரிந்தாய்/7
நல்திட்டம்
பலதந்து
நாட்டுக்கு 
வளம் சேர்த்தாய்/8
கதைப்பல 
எழுதி
கருத்தை
கவர்ந்தாய்/9
கழக தலைவனாய்
கலக்கினாய் பாரை/10
காப்பீட்டு திட்டம்தந்து
கடவுளுக்கு
நிகரானாய்/11
திரைக்கதை
வசனமெழுதி
திக்கெட்டும்
புகழ்பெற்றாய்/12
கொடைபல
நல்கியே
கொற்றவன்
ஆனாய்/13
செம்மொழி மாநாட்டால்
தமிழைப்
போற்றினாய்/14
தலைவர்களை
உருவாக்கிய
தன்னிகரிலா
தலைவன்நீ/15
வள்ளுவர். கோட்டம்
வகையாய்
கட்டினாய்/16
 தமிழ்அன்னையின். தவபுதல்வன்
நீயே அன்றோ
காலத்தை
வென்றே
சரித்திரம் 
படைத்தாய்/18

அரங்கநாயகிகண்ணன்
6/3aவெங்கட்ராமன்தெரு
தருமபுரி.636701
தருமபுரி மாவட்டம்.

**********************************************

0208.

மானிலம் கண்ட மதிப்பு

தித்திக்கும் தென்தமிழாள் திராவிடச் சூரியனை

முத்தமிழ் அறிஞராய் முத்தெடுத்தே அகமகிழ்ந்தாள்

கலைஞரோ தமிழ்காக்க களம்புகுந்தார் இளைஞராய்

போராடி வெற்றிநடை போடுவோம் எனவுரைத்துப்

போராளி யாகிப் புறப்பட்ட புறப்பாட்டே

கல்லக் குடிகாக்க தலைதரமுன் வந்ததனால்

கல்லக் குடிகொண்ட கருணா நிதியானார்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில்பாட்டை

சீராரும் தமிழ்வாழ்த்தாய் சிறப்பித்தார் துதிக்கின்றோம்

கைவண்டி இழுப்பவர்க்கு மிதிவண்டி கொடுத்திட்டார்

கண்ணொளியை தந்ததனால் கண்ணப்ப ராகிவிட்டார்

சொல்லிலும் விதவைக்கு பொட்டில்லை என்றவர்க்கு

சொல்வாய்கைம் பெண்ணென்று  பொட்டிரெண்டு வருமென்றார்

சொல்லையும் செயலாக்க சட்டத்தில் வழிவகுத்தார்

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பமென

ஏழைப்பெண் மணமுடிக்க இயற்றினார் திட்டங்கள்

ஏழையின் உயிர்காக்க உயர்சிகிச்சை தாம்தந்து

காப்பாற்றக் கலைஞரே காப்பீட்டு திட்டமிட்டார்

காற்றினும் கடிதுவந்து காலத்தில் உதவுதற்கு

நூற்றியெட்டுச் சேவைகளும் நுட்பமாய் கொடுத்திட்டார்

தாய்சேயின் நலம்பேண தடுப்பூசி திட்டமுடன்

தாய்சேய்க்கு வலுவூட்ட மகப்பேறு நிதியுதவி

தாய்மைக்கு வளைகாப்பு தமிழருக்கோ அவர்காப்பு

தரையிலே விதைத்ததமிழ் சங்கத்(துத்) தமிழாக

உரையிலே உரைத்ததமிழ் உயர்ந்தகுறள் ஓவியமாய்

திரையிலே தெறித்ததமிழ் திரும்பிப்பார்! மனோகரா

பராசக்தி வசனத்தில் பகுத்தறிவின் விசனத்தீ

மடலிலே முரசொலிக்கும் உடன்பிறப்பே எனவுரைக்கும்

கடலிலே உளியோசை காட்டிடுமே வள்ளுவனை

படைப்பிலே பாண்டியனைப் பார்உரோமா புரியினிலே

தொடரிலே மதத்தினில் புரட்சிசெய்த மகான்அருள்வார்

அவையிலே தொடுத்ததமிழ் அடுக்கு(ம்)மொழி அடுக்கிடுமே

சுவையிலே பழுத்ததமிழ் சொல்லும்தொல் காப்பியமாம்

எதையும்தான் தாங்குகின்ற இதயத்தை பெற்றவரோ

இதயத்தைக் காத்திட இளஞ்சிறார் உயிர்காக்க

இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டமிட்டார்

சுதந்திர தினத்தினில் குடியரசு நன்னாளில்

முதல்வரே கொடியேற்ற முதலுரிமை பெற்று(உ)வந்தார்

நானிலம் போற்றுகின்ற நம்கலைஞர் தொண்டன்றோ

மானிலம் கண்ட மதிப்பு.                       

சு.அய்யப்பன்

109, திருவள்ளுவர் நகர்

கோவில்பட்டி-628501

********************************************

0209.

கலைஞர்

தமிழ்த் தாய் ஈன்றெடுத்த முத்தே,
எளிமையின் உரைவிடமே ஏற்றத்தின் பிறப்பிடமே,
அரசியலின் அணிகலனாய் திகழும் திராவிடமே,
படிப்பு உன்னை சிறுவயதில் கைவிட்டது;
வாழ்வை நீ, பெருஞ்சாதனையில் கைபிடித்தாய்...
உன் கொடி தமிழை நோக்கியும்..
உன் பிடி மனிதத்தை நோக்கியும்..
உன் மனம் மக்களை நோக்கியும்..
சிறகடித்து பறந்தே சென்றது ஐயா!!
துணிவுக்கு துக்கம் இல்லை தான்
துணிந்தவனுக்கு தூக்கம் இல்லை தான் ..
வாழ்வின் தென்றலே, ஒளியின் அருஞ்சுடரே,
பெண் உரிமையை உன் உரிமையாய்
நம் உரிமையாய் மாற்றிய திலகமே!
படித்தவனுக்கு எல்லாம் பிடித்த வேலையும்,
உன் பேனா கொண்டிருப்பது மையா??
இல்லை இவ்வுலகம் போற்றும் மெய்யா??
அடிமைக்கு ஏது உரிமை, இந்த
 உலகிற்கு ஏதய்யா அடிமை என்றாயே...
முடியுமா இல்லை முடியும் தான்..
ஆமாம் எந்தன்உன்னால் தான்

பி அனுகீர்த்தனா 
கோவை.

*******************************************

0210.

இளஞ்சூரியன்

திருக்குவளையில் அவதரித்த அரசியல் ஆளுமையாளரே//

அசாத்திய துணிச்சலும் உழைப்பும் மிக்கவரே//

மனிதனை மனிதனே மாடு போல//

இழுக்கும் 
கை ரிக்க்ஷாவை ஒழித்தவரே//

உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்த
கல்விப்புரட்சியாளரே//

உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகளின்//

விளைப்பொருளுக்கு உரிய விலையை பெற்றுதந்தவரே//

சுயஉதவிக் குழுக்கள் மூலம் மகளிரின்//

வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்திய ஒளிச்சுடரே//

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு//

சிலை அமைத்து காலம்வென்ற சாதனையாளரே//

தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பி கலைஞரே//

செம்மொழி தகுதிநிலை தந்த செம்மொழியாளரே//

சமச்சீர் கல்வியால் உயர்வுபெற்ற சமச்சீராளரே//

வியக்கத்தக்க அடையாளச் சின்னங்களை எழுப்பியவரே//

இணையத்திலும் கணினியிலும் தமிழ் உன்னால்லால்லவா//

இளஞ்சூரியனே மீண்டும் அவதரித்து வா....!!!

திருமதி. க. பிரியா,
உதவிப் பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.

*********************************************

0211

கலைஞர்

உன்னை ஈன்றெடுக்கும் போதே உமது

தாய்தந்தையர் அறிந்து கொண்டனர் நீ

இந்நாட்டை ஆளப்பிறந்தவர் என்பதை அறிந்தனர்.

நீ முத்தாகப்பிறந்து முத்தமிழை வளர்த்தாய்!

திராவிட கழகத்தின் முதன்மை ஆனவரே!

இளைஞர்களின் திறனை வளர்த்த இனிமையானவரே!

கவிதையின் முன்னோடியான கவிதை நாயகனே!

பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதையை திறம்படைத்தவரே!

இந்தியை ஒழித்து தமிழை முதன்மையாக்கிய 

தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த தமிழனே!

கடலில் விழுந்தாலும் கட்டுமரமாக மிதப்பேன் 

என்று மீனவர்களின் வாழ்க்கைக்கு ஆதரித்தவரே!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரே!

14 வயதிலேயே சமூக இயக்கங்களில் அர்ப்பணித்தவரே!

மாணவநேசன்,முரசொலி தொடர்ந்து கலைஞரால்

உலகெல்லாம் வந்துகொண்டிருக்கிறது என்ற பெருமைக்குரியவர்!

தொலைக்காட்சியில் வந்த வள்ளலே கண்மூடினாயே‍‍!

மண்ணில் மறைந்தாலும் காற்றில் களைந்தாலும்

மக்கள் மனதில் நீவீர் என்றும் கவிஞனே!

 

-பா. யாழினி..இளங்கலை தமிழ்..மூன்றாம் ஆண்டு.. தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) - கடலூர்.

************************************************

0212

இனமானக்காவலர் கலைஞர்

அன்பு,நாண்,ஒப்புரவு
கண்ணோட்டம்
வாய்மையாய்
அமைந்த தமிழ் நாட்டுத் தலைவனே!

ஆராய்ந்து சொற்களை
அவையறிந்தே
சொல்லும்
தேர்ந்த
கலை ஞானத்
தூதனே!

இயல்,இசை, நாடகம்
முத்தமிழ்
காத்திட்ட
இணையில்லா
இலக்கியச்
சோலையே!

ஈதல்,இசைபட
வாழ்தல் 
உயிர் ஊதியம் எனக்
கொண்ட உயரிய மாந்தனே!

உருவு கொண்டு
எள்ளாமை
வேண்டும் எனச் சொன்ன
வள்ளுவர் வழிமுறை
நின்றவா!

ஊழையும்
உப்பக்கம்
காணலாம்
முயற்சி செய்
உரைத்திட்ட
மானமிகு
நாயகா!

எண்ணியதை
எண்ணியாங்கு
எய்திடும்
வல்லமை
உள்ளத்தில்
ஊற்றெனக்
கொண்டவா!

ஏதிலார் குற்றம் போல்
தன் குற்றம்
காண்கின்ற
தீதிலா தலைவன்
நீ அல்லவா?

ஐயப்படாது
பிறர் அகத்தது
உணர்கின்ற
உன் நுட்பத்தை
என் சொல்லி
போற்றுவேன்!

ஒல்லும்
வகையினால்
அறவினை
ஒம்பிடும்
உன் வழக்கத்தை
நானும்
பின்பற்றுவேன்.

ஓர்ந்து கண்ணோடாது
இறைபுரிந்து
யார் மாட்டும்
தேர்ந்து செயல்
செய்வாய் நீ
தாய்மையாய்.

ஔவிய நெஞ்சமும்
அறிவிலார்
தஞ்சமும்
அடையாது
வாழ்ந்தாய் நீ
நேர்மையாய்.

ஆக்கம்:பாவலர்
கணேஷ்குமார்.ஆ
ஏம்பலம், புதுச்சேரி 

 

*************************************************

0213.

முத்தமிழ் வித்தகர் கலைஞர் கவிதை...


மக்களின் மனதை வென்ற  
தனித்தமிழனே//
 பாமரர்களால் பலமுறை முதல்வராக வெற்றிக்கொண்டவரே //
தமிழை உலகெங்கும் எடுத்துரைத்த உத்தமரே//
தமிழேப் புகழ்பாடும் தமிழ்த்தாயின் தவப்புதல்வனே//
தான் நேசித்த மக்களின் நாயகனே//
இளைஞர்களின் எழுச்சிக்கு 
எடுத்துக்காட்டாய் நின்றவரே//
ஆசிரியரின் காவலனே காவலரின் ஆசானே//
ஏழைகளின் வலியையும் மறைத்த வழிப்போக்கனே// 
மங்கைகளின் மனங்களில்  இடம்பெற்ற மணவாளனே//
காவியங்களின் கதாநாயகனே வசனங்களின் வல்லாலனே//இருள்துடைத்தே  ஒளிபடைக்க  வந்த வன்நீ//
இனம் ,நாடு,  மொழிகாக்கத்  தன்னைத்தந்தே//
  இன்னுமொரு  தலைமுறையும்  தந்த வன்நீ// மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை  என//
அழகாய் பெயரிட்ட எங்கள் தாயுமானவனே//
 வையக தர்மத்தில் அழகிய சுடர்விளக்கே//
 கோடி சூரியனும்  தேடிடும் கலைஞரே//
 இங்கு விரைவில் பிறந்து வருக//

ஈ.வாசுதேவன் நாமக்கல் மாவட்டம்.

**********************************************

0214.

காலத்தை வென்ற கலைஞர்

காலத்தைவென்ற
...கலைஞர்..நெஞ்சில்
காவியமான கலைஞர்..
ஞாலத்தில்இவர்க்கு
....ஏது..இணை.தமிழ்
கூறும் நல்லுலகில்
..என்றும்இவர்துணை

சொன்னதைச்
...செய்யும் கலைஞர்
சோர்வின்றி
உழைக்கும் கலைஞர்
இன்னார்க்கு
..இன்னதென்றறிந்து
ஏற்புடைத்தாக்கும்
.........கலைஞர்.


ஐந்து முறை தமிழக
..முதல்வராய்
அரியணை ஏறிய
...கலைஞர்
ஐயந்திரிபுர
மக்களாட்சி செய்த
....கலைஞர்
வெற்றி என்றும்
...தேர்தலில்
பற்றிக்கொண்ட
...கலைஞர்
வீறுநடை போட்டு
செந்தமிழை.
உயர்தனிச்
செம்மொழியாக்கிய
....கலைஞர்...
ஏழைஎளியர்பால்
...இரக்கமுறுகலைஞர்
இலவசத் திட்டங்கள்
.மூலம்..அவர்வாழ்வு
ஏற்றமுறச்செய்த
.....கலைஞர்..
அத்தியாவசிய
..பொரூட்கள்நித்தம்
.கிடைக்கச்செய்த
....கலைஞர்
இல்லைஎன்றசொல்
...ஆட்சியில்
இல்லாமல் செய்த
...கலைஞர்..
அஞ்சுகத்தாய்பெற்ற
..அன்பான கலைஞர்
அஞ்சாமை.ஈகை.
அறிவு ஊக்கமுடன்
..வாழ்ந்தகலைஞர்
அஞ்சலென்று
..வந்தவர்க்கு
அடைக்கலம் தந்த
....கலைஞர்
அங்கிங்கெனாதபடி
..எங்கும்.என்றும்
எப்போதும்
...உதயசூரியனாய்
..பிரகாசிக்கும்
...கலைஞர்
காலத்தில் கிடைத்த
...கலைஞர்..வாழும்
காலமெல்லாம் நாம்
..வணங்கும் கலைஞர்


.கவிஞர் மீரா என்கிற
மீனாட்சிசுந்தரம்
18..250.. CRP..LAY.OUT
B.D.O..காலனி
மங்கலம் பாதை
..பல்லடம்641664 
திருப்பூர் மாவட்டம்

 

******************************************"**

0215.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சா சிங்கமே
நெஞ்சுரம் கொண்ட மனிதருள் மாணிக்கமே
கொஞ்சிப் பேசும் உன் தமிழுமே
தஞ்சம் கொள்ளும் தமிழன்னையும் உன்னிடமே 
அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்தவனே
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியவனே

கைம்பெண்கள் நெற்றியிலும் இரு திலகமிட்டவனே
திருநங்கைகளுக்கும் பெயர் சூட்டிய நாயகனே
தேமாவும் புளிமாவும் உன்நாவில் இனித்திடுமே 
எதுகையும் மோனையும் துள்ளியே குதித்திடுமே
முப்பால்  தந்தவனை முக்கடலில் நிறுத்தினாய்
முத்தமிழை நீயும் அரியணையில் ஏற்றினாய்

பரா சக்தியையே  படைத்திட்ட  பிரம்மனே
பகுத்தறிவு பகலவன் வழிநடந்த பண்பாளனே
நூற்றெழுப்பத்தெட்டு  நூற்பாக்களை எழுதிய பாவலனே
மனதால்  என்றும் மூப்படையா இளைஞனே 
காலத்தால் அழியா காவிய நாயகனே 
ஞாலத்தால் போற்றப்படும் முத்தமிழ் அறிஞனே!!

க.சர்புன்நிஷா
திருத்தணி.

*************************************************

0216.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

 

திருக்குவளையில் பிறப்பெடுத்த தவப்புதல்வர்!

அஞ்சுகம் முத்துவேலரின் அன்பு மைந்தர் 

அஞ்சா நெஞ்சத்தைக் கொண்டவர்

ஞாலத்தின் உதயசூரியனாய் விளங்கியவர்!

தமிழினக் காவலர், தன்மானத் தலைவர்!

தலைவருக்கு தலைவரானவர்

தலைமைக்கு பெயர் பெற்றவர்!

அன்னைத் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த மொழிக்காவலர்!

இலக்கியமும், இலக்கணமும், அறிவியலும் கற்றறிந்த மூதறிஞர் !

நாவன்மையால் நற்புகழையும் பெற்றவர்! 

எழுத்துலகில் தனித்துவம் படைத்தவர்  

தமிழ் ஆளுமைகளுக்கு மகுடம் சூடிய முத்தமிழ் வித்தகர்!

வசனத்தால் திரைத்துறையை வசப்படுத்தியவர்

வரலாற்றுக்கே வரலாறு படைத்த பெருந்தலைவர்!

குறள் மீது கொண்ட பற்றால் 

குமரி முனையில் வள்ளுவருக்கு சிலையமைத்தவர் !

சென்னையில் வள்ளுவர் கோட்டம்

பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக் கூடம்

என பல நினைவுச் சின்னங்களை வடிவமைத்தவர்! 

சமத்துவபுரம் அமைத்த சமூகப்பற்றாளர்

இராப்பகலாய் தமிழ்வாழ, தமிழர் வாழ

ஓய்வின்றி உழைத்த தகையாளர்!

அவரே!முத்தமிழ் அறிஞர் கலைஞர்!.

 

முனைவர் கே.பி.கனிமொழி

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்-6

*************************************************

0217.

தலைப்பு:முத்தான முத்தமிழறிஞர்
-----------------------------------------------

திருக்குவளையில் மலர்ந்த தமிழகத்தின் வாடாமலரே!

அஞ்சுகம் பெற்றெடுத்த அஞ்சா நெஞ்சனே!

சொல்லாடலைத்  தன்வசம் கொண்ட ஆளுமையே!

தமிழன்னையும் உன் தமிழுக்குச் செவிச்சாய்த்தாளே!

பன்முகத்தன்மை கொண்டத் தனிப்பெரும் தலைவனே!

மூச்சுக்காற்றையும் முத்தமிழாகச் சுவாசித்த தமிழனே!

திக்கெட்டும் திருக்குறள் ஒலிக்க காரணமானவரே!

முக்கடலில் வள்ளுவர் சிலையும் உன்னாலேயே!

மூடநம்பிக்கையை வேரறுக்க வந்த வேங்கையனே!

பகுத்தறிவால் பார் போற்றும் தலைவனானாயே!

சொன்னதைச் செய்து முடிக்கும் வல்லமையுடையவரே!

பட்டினியில்லாத்  தமிழகம் உன்னாலே சாத்தியமானதே!

தமிழுக்கு செம்மொழி பெருமையும் உன்னாலே!

விவசாய மக்களைக் காத்த மாமனிதனே!

சமச்சீர் கல்வியால் சமமானதே கல்வியுமே!

உன் எழுத்தைக்கண்டு வியப்பிலே பலருமே!

சர்ச்சைகளுக்கெல்லாம் சாட்டையடி கொடுத்த மாமனிதனே!

த.பொன் ரேகா
இடைநிலை ஆசிரியர்
ஶ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி
சேரன்மகாதேவி
திருநெல்வேலி மாவட்டம்

********************************************

0218.

முத்தமிழ் அறிஞர் விருது
கவிதைகள் ஆயிரம்
         தலைப்பு
ஒப்பற்ற கலை ஞாலமே
      
குவளைக் குழவிக்கு குலமே தமிழினமே

முத்தமிழ் மொத்த நெஞ்சமும் தஞ்சமே

தமிழாய் பிறந்தாயோ தமிழுக்குள் சிறந்தாயோ

மூல உரையும் மூளை நரம்பும் புதுப்பித்து பொதுமறை

வள்ளுவனை வழிகாட்டி 133 அடி உயர்ந்தாயே

பராசக்தி சுவைக்கு பதம் தொடுத்து

காட்சி படைத்து சாட்சி தொடுத்தவரே

வீரன் சாவதே இல்லை என்றாய்

கோழை வாழ்வதே இல்லை என்றாய்

இரு வேறு இலக்கணமும் என்னுள் எழ வைத்தாய்

பொது வாழ்க்கையின் பொக்கிஷமாய் திகழ்ந்தவரே

அண்ணா பெரியார் வரிசையில் பெயரானவரே

திராவிடச் சொல்லில் ஞாயிறு தொடக்கம்

அரசியல் வாழ்வில் முத்தமிழ் முடக்கம்

மை நிரப்பும் பேனா உம்மால் மகிமையடைந்ததால்

மகிமை நிறைந்த பேனா இந்நாள் சிலையானதோ

கலையும் ஞாலமும் ஒன்றிணைந்த கலைஞனே. ..  ... 
    
                   Dr. அ. ஜமீலா. 
             தலைமையாசிரியர்
      PUMS, மதுக்கூர்-வடக்கு
                 பட்டுக்கோட்டை..

*************************************************

0219.

வைகாசி நாயகனே! வையகத்தை ஆள்பவனே!//
திருக்குவளை மைந்தனே! திறமைகளின் தலைவனே!//
முத்துவேலின் புதல்வனே!முத்தமிழ் அறஞனே!//
முதல்வராக நீயிருந்தாய்! முத்தமிழை நீவளர்த்தாய்!//
உதயமாகும் சூரியனை இலச்சினையாய் கொண்டவனே!//
கன்னித் தமிழுக்கும் அழியாப்புகழ் தந்தாய்!//
கல்லக்குடி போராட்டத்தில் கலந்து சிறைசென்றாய்!//
இந்தி திணிப்புக்கொள்கையினை எதிர்த்துப் போர்புரிந்தாய்!//
படித்த இளைர்களுக்கு தொழில் தந்தாய்!//
பருவ பெண்ணிற்கும் நிதி தந்தாய்!//
பகுத்தறிவு பகலவனின் துணை கொண்டாய்!//
அறிஞர் அண்ணாவின் வழி நின்றாய்!//குமரியில் வள்ளுவன் சிலை வைத்தாய்!//சிலம்பின் நாயகிக்கும் அதை செய்தாய்!//ராஜகுமாரியைப் படைத்தவனே! ராஜ்ஜியங்கள் அமைத்தவனே!//
புதிய இலக்கியங்கள் பல படைத்தாய்!//புரட்சி நோக்கில் அதை வளர்த்தாய்!//

வசனநடையின் நாயகனே! வாழ்க

என் றும் உனது புகழ்.

மு. பாரதி, மங்களவாடி, காயல்பட்டினம்.

******************************************

0220.

*முத்தமிழ் அறிஞர் கலைஞர்* 

தமிழையே முத்தமிழையே
உனது ஆயுதாமாய்கொண்டாய்

சிலப்பதிகாரத்திற்கு
அணிகலன் சேர்த்து
பூம்பூகார்யெனும்
காவியமாக்கினாய்

தமிழன்னை
உன்நாவில்
நடனம் புரிவாளோ

நீங்கள்பேச
தமிழ்ச்சொற்கள்
தாளத்தோடு
நடைபயிலுமே

தமிழ்வஞ்சிக்காது
வாழவைக்கும்யென்று
கைம்பெண்ணுக்கு
இரண்டுபொட்டுவைத்தாய்

மனசாட்சி உறங்கும்
சமயத்தில்தான் மனக்குரங்கு
ஊர்சுற்றகிளம்புகிறது

தென்றலைத் தீண்டியதில்லை
தீயைத்தாண்டி
இருக்கிறேன்

தமிழ்திரைப்பட
கதைவசங்கள்
காலத்தால்
அழியாதகாவியம்

மாணவனாராய்
இருக்கும்போதே
தமிழ்மன்றம்
தொடங்கினாய்

வாழ்கையெனும்
ஓடம் வழங்குகின்றபாடம்
என்ற பாடல்
வாழ்க்கைத்தத்துவம்

சிறுகதை நாவல்கள்
கதைவசனம் பாடல்கள்

இலக்கியங்கள்
பொருளுரை
மேடைபேச்சுயென
கலைகள்

பலகற்று உணர்ந்த
அஞ்சுகத்தின் அருத்தவமே

கலைஞர் 
என்ற ஒற்றைவார்த்தை
உமக்கே பொருத்தமே

வீழ்வதுநாமாக
இருப்பினும்
வாழ்வது  தமிழாகட்டும்யென்றே

செம்மொழியான தமிழுக்குஅணிவகுப்பு
மரியாதை தந்தாய்

தமிழே உயிர்மூச்சாய்
உடன்பிறப்பே உனதுபேச்சாய்

உலகத்தையே புத்தகமாகபடித்த
முத்தமிழ்தலைவரே
வாழிய வாழ்கவே

கோவைக்கவி  புவனா
கோவை.

**********************************************

0221.