அறிவுச் சுடர் அம்பேத்கர் 035

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவுச் சுடர் அம்பேத்கர் 035

அறிவுச்சுடர் அம்பேத்கர்:
**************************
இந்தியாவின் தலையெழுத்தை எழுத்தானியால் எழுதிவைத்து//
சட்டத்தை வித்தாக்கிய பாபா சாகிப் அம்பேத்கர்//
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஓங்கி ஒலித்தமணி//
எல்லாவித மக்களுக்கும் ஏற்றம் பல தந்தமணி//
சாதிமத பேதங்களை சாட்டையால் அடித்தமணி//
சமதர்மம்பேசி நல்லதன்மானம் கொண்டமணி//
சுயமறியாதை தந்தையுடன் சொற்காத்து நின்ற அண்ணல்//
சொற்பொழிவாளர் தேசியத்தை தலைநிமிர செய்த அண்ணல்//
ஆண்டான் அடிமை எனும் அச்சத்தை விரட்டினர்//
யாருக்கும் அடிமையின் லை என்று சொல்லி உனர்த்தியவன்//
வள்ளுவனின் கூற்றிற்கு வான்புகழை வென்றவன்//
பிறய்பாலே அனைவரையும் சமமாக கருத்தியலின்//
பிறவியிலே அறிவாற்றல் அபறித்தனம் கொண்டவன்//
பிற்போக்கு சிந்தனையை பின்னுக்குத் தள்ளியவன்//
புத்தர் மகான் போதனைகள் சுவாசித்தால் உள்வாங்கி//
புண்ணியங்கள் பலதேடி மக்களுக்குச் செய்துவிட்டார்//
பாரெல்லாம்வலம் வந்து பாராளும் மன்றத்தினில்//
ஆயிரத்தில் ஒருவனாக அன்புக்கும் நீட்டிவிட்டார்//
சுதந்திர இந்தியாவின் அடிமட்டத் தொண்டனாக //
ஆணிவேராய் மக்களுக்கு அச்சாரம் தந்த அண்ணல்//
பாபாசாகிப் அம்பேத்கர் எனும் அடிச்சுவடு உள்ளவரை//
நானெல்லாம் அம்மக்கள் நாங்கள் உம்மைப்பணிந்திடுவோம்//
பல்லாண்டு வாழ்க அண்ணல் பாதம் தொட்டுவனங்கிடுவோம்//
பண்ணிசை யார் மீட்டி உம்மை வாயார வாழ்த்திடுவோம்//

-புலவர்.சோனா.மதியழகன்
நாகப்பட்டினம்.மாவட்டம்