அறிவொளி அம்பேத்கர் 036

அறிவர் அம்பேத்கர்

அறிவொளி அம்பேத்கர் 036

அறிவொளி அம்பேத்கர்

சிந்தனை சிற்பியாய் மா மேதையாய்

 புரட்சியில் வள்ளலாய் கல்வியில் சிறப்பாளராய்

 ஏழைகளின் அரனாய் அரசியலில் வித்தகராய் அறிவிற்கு சுடராய் பிறந்த மன்னனே!

இந்திய பூமியில் உதித்த 
 என் அண்ணலே! இதயத்தில் வீற்று இருக்கும் தாமரையே!

 இறந்தும் வாழும் நல் உள்ளமே! ஏழைகளின் வாழ்வுக்கு விடிவு காட்டிய நெஞ்சமே!

 தமிழ்  நேசனே! வறுமை எனும் நோயை அடையாளம் காட்டிய  உத்தமனே!

 இந்திய பக்தனே! அறிவைத் தேடி  ஓடச் சொல்லி, தினம் தினம் புத்தி சொன்ன அன்பனே!

 சுதந்திரத்தை தொடர்ந்து சட்டத்திலே வல்லவனாய் பதவியேற்ற நாயகரே!

 அடிமைத்தனத்தை எதிர்த்து  குரல் கொடுத்த அமுதே!

தேனே! இந்திய நாட்டின் சொத்தே!

மாணிக்கமே! தாய் தந்தைக்கு பெருமை சேர்த்த அறிவே!

படிப்பே உணவு என்று இருந்த ஒளியே!

தீர்க்க முடியா கஷ்டமாக வறுமையை அடையாளம் காட்டிய காந்தலே!

பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த உதிரமே!

உமக்காக கவி பாட கிடைத்தது எனக்கு பெருமையே!
 
-ஹம்னா அக்பர்,
  இலங்கை.