நாளைய தலைமுறை...! 024

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

நாளைய தலைமுறை...! 024

நாளைய தலைமுறை...! 024

செல்வா, வரியா என் கூட? அம்மா கடைக்கு போகப்போரன் "
தேன் மொழி தன் 10 வயது  மகனை அழைத்தாள்.
குதித்து ஓடி வந்த செல்வம்"வர்றேன் அம்மா, கடைக்கு வந்தா எனக்கு என்ன வாங்கித் தருவாய்"என்று சிரித்து கொண்டே கேட்கவே,
"என்னடா, எல்லாத்துக்கும் கணக்கா,இப்பவே
லஞ்சமாடா? " தேன் சிறிது முகம் சுளித்து கேட்டாள்."சும்மா தான் கேட்டேன்"சிரித்து மழுப்பி கொண்டே,
குடு குடு என்று ஓடி போய் அம்மா வின் ஸ்கூட்டியில் தேன் மொழியை பிடித்த வண்ணம் 
உட்கார்ந்து கொண்டான்.முதலில் டைலர் கிட்ட போய் உன்னுடைய யூனிஃபார்ம் ரெடியா என்று பார்ப்போமா செல்வா?
Ok அம்மா.
போட்டு பார்.
செல்வா இந்த வருஷம் 5ம் வகுப்பு போகிறான்.
நல்லா படிக்கும் பிள்ளை. புத்திசாலி,சுருசுறுப்புக்கு கேட்கவே வேண்டாம்.விளையாட்டிலும் அப்படியே.டைலர் கடை வந்திடுத்து.போட்டு பார்த்து சரியாக இருக்க தேன் கையோடு வாங்கி கொண்டு
செல்வா கை பிடித்து ரோட்டை தாண்டி காய் கறிகள்,பழங்கள்வாங்க போனாள்.பெரியவர் பழ வண்டியை அணைத்தார் போல் அமர்ந்து கஞ்சியும் மோருமாக பருகினார். நல்ல வெய்யில்.அப்பாடா!என்ன வேணும் அம்மா?
எல்லா பழமும் இப்ப காலைல வந்தது தான். பார்த்து எடுத்துக்க அம்மா.
தேன் மொழி பல வருஷங்களாக இந்த வண்டி வியாபாரியை தேடி வரும் கஸ்டமர். பள்ளி, காலேஜ் என்று படிக்கும் போதே அவள் சின்ன சின்ன வியாபாரிகளிடம் தான் பொருட்கள் வாங்குவாள்.
அதை ஓரு கொள்கையாக்கி கொண்ட தேன் மொழி அலாதி மகிழ்ச்சி அடைந்தவள்.ஆப்பிள், கொய்யா பழம், மாம்பழம் சீசன் ஆரம்பம்.
பொறுக்கி எடுத்து எடைப் போட்ட பிறகு பெரியவர் கையில் 500.ரூபாய் தாளை எடுத்து கொடுத்தால்.மொத்தம் 460 ரூபாய் என்று சொல்லி பெரியவர் நோட்டை வாங்கி பண பெட்டிக்குள் போட்டு இரண்டு 20 ரூபாய் தாளை நீட்ட தேன் மொழி,"
பரவா இல்லை வெச்சுக்குங்க. நீங்க எந்த ஒரு பழமும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதில்லையா? வயதான உங்க உடம்ப கவனிச்சு வேண்டாமா?"
மிகவும் ஆத்மார்த்த கரிசனத்தொடு கே ட்ட உடன்,"அம்மணி உன் மனசு முழுக்க அன்பு. நீ நல்லா இருப்ப, ஆனா தொழில் செய்யும் போது நேர்மை நாணயம் வேணும்." என்று சொல்லி பாக்கி பணத்தை திணிக்க முயன்றார் பெரியவர். விடாபிடியா மறுத்து விட்டாள்.செல்வம் இவர்களிடையே நடந்த பேச்சு பரிமாரலை கே ட்டு வியந்த படி அம்மாவை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து கொண்டு
"அம்மா நீங்க ஏன் எப்பவுமே பெரிய வர் கிட்ட பழம் வாங்கரே ?என் நண்பர்கள் எல்லோரும் அவங்க அப்பா அம்மா பெரிய கடைகளுக்கு போய் தான் வாங்கரங்க.
பழ முதிர் சொலை மாதிரி.நீங்க...என்று இழுத்தான்.
செல்வா,நீ ஒன்று தெரிஞ்சுக்கோ,
பெரியவரை பெரிய கடைகள் பெரிய லாப நோக்கொடு மட்டுமே வியாபாரம் செய்ய,
இந்த மாதிரி மனி தாபிமனத்தொடு வியாபாரத்தை செய்யரவங்களை நாம முதல மதிக்க கற்று கொள்ள வேண்டும் செல்வா.
உன் தாத்தா வயது.அவர் பசியும் பட்டினியுமா வேலை பார்த்தா உன் மனசு கேட்குமா?
பெரியவங் ஆசி மழை பொழியர மாதிரி. நமக்கு எப்பவும் என்றும் அவர்கள் ஆசி வேண்டும்.
அவர்கள் செய்யும் வேலை எது என்பது முக்கியம் இல்லை. நேர்மை நாணயம் வேணும்.வயசுக்கு

மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் செல்வா.
இப்போ புரிஞ்சுதா?இது போல உள்ள வர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்.
செல்வா நீ நல்லா நடந்து கொள்ள வேண்டும். அப்ப இந்த உலகமே உன்னை வாழ்த்தி வளர்க்கும்.
சரி போய் கொஞ்சம் கொஞ்சமாக காய் கறிகள் வாங்கி கொண்டு போகலாம் என்று அடுத்து சிறு கடை போட்டு உட்கார்ந்து இருந்த பாட்டியை நோக்கிநடந்தார்கள் அம்மாவும் பிள்ளையும்.
ரொம்ப தேங்க்ஸ் அம்மா. நானும் உங்களை போலவே அன்புடன் நடந்து கொள்கிறேன் என்று சொல்லி செல்வா மலர்ந்த முகத்துடன் அம்மாவின் கையை இறுக்க பிடித்த வண்ணம் நடந்தான்.

-விஜயலட்சுமி கண்ணன்,

.சென்னை