அலகிலா விளையாட்டு...

புதுக்கவிதை

அலகிலா விளையாட்டு...

அலகிலா விளையாட்டு

சருகுகள் போலவே 
சட்டென்று உதிர்ந்திடும்
உயிரின் நிலை என்னடா  - மனிதா
உயிரின் நிலை என்னடா?

சிட்டாங்குருவி போல் 
சிறகடிக்கும் மனதுதான்
சட்டென்று உடைவதென்னடா-மனிதா
சட்டென்று உடைவதென்னடா?

வெட்டாத மரம்தான்
வேரோடு சாய்வதுபோல்
பட்டென்று சாய்வதென்னடா-மனிதா
பட்டென்று சாய்வதென்னடா?

ஏட்டிலும்  இல்லாமல்
எழுத்திலும் எழுதாமல்
விதி எழுதி போவதென்னடா - வாழ்வை
விதி எழுதி போவதென்னடா
 மனிதா
விதி எழுதி போவதென்னடா ?

காண்போம் என்பவர்
காணமலே போய்விடும் 
அவலத்தின் முடிவென்னடா - மனிதா
அவலத்தின் முடிவென்னடா?

காற்றுடன் காற்றாக
கலந்திடும் மனிதருக்கு
சாதி மதமென்னடா - மனிதா
சாதி மதமென்னடா?

ஆகாய கோட்டைகள்
அடியோடு சாய்ந்த பின்
இருக்க இடமேதடா-மனிதா
இருக்க இடமேதடா ?.

மண்ணுக்கு உணவாக
போய்விடும்  உடலுக்கு
நிரந்தரம் துளி ஏதடா – மனிதா
நிரந்தரம் துளி ஏதடா ?

நெஞ்சமும்  கெட்டு
நினைப்பும்  ஒழிந்த பின்
நிலைக்கும். வழி ஏதடா - மனிதா
நிலைக்கும் வழி ஏதடா ?

நித்திரை கெட்டு
நிம்மதி இழந்த பின்
புன்னகை இனி ஏதடா - மனிதா
புன்னகை இனி ஏதடா ?

உற்றாரும் வாரார்
உறவாரும் வாரர்
நட்டாற்றில் விடுவாரா _மனிதா
நட்டாற்றில் விடுவாரடா

ஒரு பிடி சாம்பலான பின் 
ஆற்றோடு கரை வாயே
உடன் ஒடி வருவதேதடா - மனிதா
உடன் ஒடி வருவதேதடா?

நேற்று இருந்தார் 
இன்றில்லை என்பது
காலத்தின் ஏற்பாடடா - மனித
காலத்தின் ஏற்பாடடா

கண்மூடித் திறந்தால்
மரணமும் ஐனமும்
அலகில்லா விளையாட்டடா – மனிதா
அலகில்லா விளையாட்டடா

தங்கேஸ்