உலக மன்னிப்பு தினம் ஜூலை 7

உலக மன்னிப்பு தினம் கவிதை

உலக மன்னிப்பு தினம் ஜூலை 7

"உலக மன்னிப்பு தினம்" 

அன்பு என்பது உயர்வான நல்லாயுதம்! அந்த அன்பை விட  பேராயுதம்  மன்னிப்பு!

   அனைத்து உறவுகளுக்கு இடையேயும் விரோதம் வருவது எதார்த்தம்!
  அதை மன்னிப்பதே பெரும் சகாப்தம்!

   கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்வதால் வாழ்க்கை பயணம் இனிதே தொடரும் !
   கண் காணாதவர்கள் பழக்கம் ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்வதால் !நட்பு வளரும்,!

 தந்தையை, தாய் மன்னிப்பதும், பிள்ளைகள் தவறை தாய் தந்தை மன்னிப்பதும் !
புத்துயிர் கொடுக்க ஒரு வாய்ப்பு !

நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போர்களும் ,மாநில மக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும்! போர்களும் !!
   மன்னிப்புபேராயுதத்தை பயன்படுத்தினால் சமாதானம் கொடி பறக்கும்!! 
  மன்னிப்பு என்ற சந்தோச பூக்கள் மலர்ந்தால் ,அன்பு என்ற பூக்கள் மலரும்!
அகிலமே ஆனந்தம் கொள்ளும்!

   மன்னிப்பு  காயங்களுக்கு ஒரு அருமருந்து!
   கடவுளாலும் கொடுக்க முடியாது நேர்முக மன்னிப்பு என்றதிருவிருந்து!
  
அதைமனிதன் கொடுக்கிறான் என்பதே சிறப்பு !

அனைவருக்கும் உலக மன்னிப்பு தின வாழ்த்துக்கள்!

கவிச்செம்மல் 
கவிதை மாணிக்கம்