கடித தினம் கவிதை

உலக கடித தினம் கவிதை

கடித தினம் கவிதை

செப்டம்பர் 1
உலக கடித தினம்.  ..!!

பிரிந்தவர் சேர!
பிடித்தவராயின்
பாச வார்த்தைகள் கூற!

மனம் விட்டு பேச!
மன அழுத்த, அன்பு கலந்த வார்த்தைகளை!
கைவண்ணகோலமிட!

கணவன் மனைவி சுவரசியங்களை!
காதலன் காதலி
காதல் வலிகளை!
கண்ணீர் வரிகளையும்!
கண்ணீர் துடைத்த வரிகளையும்!

யாரும் மறக்கமுடியாது! மறக்கவும்முயாது!

மை கொண்டு! மெய்யோ! பொய்யோ!
காகிதம் தாங்கிவர!

வந்ததை! அடுத்து வரும் நாட்கள்வரைமீண்டும்மீண்டும்! படித்து
காத்திருப்பு சுகம்!
எங்கே உள்ளது!!

தோழியயையும்! தோழர்களையும்! அஞ்சல் காரராக்கி!
தோற்றுப்போன காதலைகூட!
வெறிபெறச் செய்யதது காகிதம்!

வரும் நபரிடம் இருந்து வலிகள் தாங்கி வருகிறதா!
வற்றாத அன்பு தாங்கிவருகிறதா!

காத்திருப்பதும்
காக்கவைப்பதும்
பாசத்தை அதிகரிக்கவைத்தது
காகிதம்!!

மனம் விட்டு, மணக்கபேசும்
காகித தொடர்பு சுகம்தானே!

அனுபவித்ததை
அணுஅணுவாய்
ரசிக்க வைக்கும்
பொக்கிசம்!

அன்றைய காகிததொடர்பு காக்வைத்தாலும்
உயிரைகாக்க வைத்தது!

இன்றைய கணினி தகவல் தொடர்பு
கனநொடியில் முடிவுகண்டு!
கனபொழுதில் உயிரை இழக்க வைக்கிறது!

அன்புள்ள அம்மாவுக்கு
ஆசையுடன் மகன் எழுதிக் கொள்வது!

பழமை கடித தொடர்பிலே !உன் கைவண்ண கடிதத்தை !
நீ பிரிந்தாலும்!
உன் காகிதம் என்மடியிலே!

நலம் நலமறிய ஆவல்
பாசமுள்ள மகன்
கவிதை மாணிக்கம்!..