மகாத்மாவின் மாண்பு...

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மாவின் மாண்பு...

 மகாத்மாவின் மாண்பு ...

போர்பந்தர் ஈன்ற பொன்னான  புதல்வரே  //
பார் போற்ற வாழ்ந்த அகிம்சை முதல்வரே  //2
வல்லோன் ஆங்கிலேரை வளம் குன்றச் செய்தவரே  //
எல்லோர் மனங்களிலும் ஏற்றம் பெற உழைத்தவரே  //4

அகிம்சை வழியில் அம்பைத் தொடுத்தவரே  //
அன்னை பாரத்தை மீட்டு எடுத்தவரே  //6
வெள்ளையனை வேரறுக்க வேட்கை மனம் கொண்டவரே /
விபரம் இல்லா மக்களுக்கு பாலமாக நின்றவரே //8

சமமான சமுதாயம் உருவாக்க முயன்றவரே  //
சாதி வேற்றுமைகளை சரித்திட பயின்றவரே  //10
இந்தியா முழுவதும் நெடுந்தூரம் நடந்தவரே  //
இதில் வந்த துன்பத்தை மகிழ்வோடு கடந்தவரே  //12

மதுரைக்கு வருமுன்னே மாண்பு உடை அணிந்தவரே //
மக்கள் நிலையுணர்ந்து மனம்னொந்து போனவரே //14
எளிமையின் கோமகனாய் உடைமாற்றம் கொண்டவரே //
சுதேசி ஆடையென்று  மடைமாற்றம் கண்டவரே //16

நீங்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை//
பேணிகாக்க மறந்து விட்டோம் //18
வெள்ளையன் விட்டுச் சென்ற மொழியை பேசி //
அவரவர் தாய்மொழியை துறந்து விட்டோம் //20

மாண்டு போன தலைவரெல்லம் மீண்டும் உலகில் வருக //
இந்தியாவை சீர்தூக்கி மீண்டும் புதியதாய் தருக //
சத்தியத்தை காத்திட்ட காந்தியம் வாழ்க //
சந்ததிகள் போற்றிடவே 
மகாத்மாவின் மாண்பு வளர்க //24

ஜெ. சிவக்குமார், ஆசிரியர்,
திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.