மகாத்மா காந்தி

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி 

என் தேசத்தின் கைத்தடி 

போர்பந்தரில் பிறந்த போராட்ட நாயகரே //

நேர்மையின் சிகரமாக இருந்த நெறியாளரே //

அறவழிப் போராட்டத்தை துவக்கிய அற்புத மனிதரே //

சத்தியாக் கிரகம் வழியைப் பின்பற்றிய சத்தியவானே //

இந்திய தேசிய காங்கிரசின் இதயத்துடிப்பே //

விவசாயிகளுக்கு சம்பாரன் துவக்கிய சாணக்கியரே //

வெள்ளையனே வெளியேறு என்று சொன்ன வெள்ளை மனம் கொண்டவரே //

சுதந்திரம் பெற்றுத்தர அரும்பாடுபட்ட சுதந்திர தியாகமே //

கதர் ஆடை அணிந்த கண்ணியமானவரே //

அகிம்சை என்னும் மந்திரத்தை உலகிற்கு தந்த உத்தம மனிதரே //

வாய்மையே வெல்லும் என்று கூறிய சத்தியபிதாவே //

மனிதாபி மானத்துடன் இருப்பதே மனிதம் என்று சொன்ன மனிதருள் மாணிக்கமே //

தேசத் தந்தையாக திகழப்படும் தேசப்பிதாவே //

மகாத்மா என்று போற்றப்படும் மாமனிதரே //

மறைந்தாலும் என்றென்றும் தேசத்தந்தையாய் வாழும் தேசப்பிதாவே //

என்றென்றும் என் தேசத்தின் கைத்தடி நீவீரே... //

கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்