தமிழர்களின் உறவு முறை...015

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழர்களின் உறவு முறை...015

தமிழர்களின் உறவு முறைகள்                                ‌.        தமிழர்களின் பாரம்பரியம்.மருத்துவம்.கலை.பண்பாடு உடை வீரம் நாகரிகம் இலக்கியம் கலாச்சாரம் விருந்தோம்பல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் இன்று நான் எடுத்து கொண்ட தலைப்பு தமிழர்களின் உறவு முறைகள்  ‌‍‌.               ‌‌குடும்ப உறுப்பினர்கள் என்றதும் கணவன் மனைவி மக்கள் என்கிற சிற்றெல்லை தாண்டி பலரது மனம் விரிவதேயில்லை. அது மையமே ஒழிய வட்டம் இல்லை.குடும்பம் என் பது தாய் வழி உறவு தந்தை வழி உறவு என்கிற ரத்தக் கலப்பைச் சிலசமயம் உள்ளடக்கியது. தமிழில் உறவுகளைத் துல்லியமாக வகைப்படுத்தும் சொற்கள் கிடைப்பது போல் ஆங்கிலத்தில் கிடைக்காது.நாத்தனார் பெரியப்பா சித்தப்பா கொழுந்தன் கொழுந்தி அத்தை மாமி மாமா மாமனார் என்கிற உறவக் குறியீடுகள் அபூர்வமானவை.         நாத்தனார்  ‌
       நாத்தனார் என்றால் என்ன? விவசாயத்தில் வயலில் நாற்று விடுவார்கள் ஒருபோதும் நாற்று அதே வயலில் சரியாகாது நாற்றைப் பிடுங்கி வேறு வயலில்  நடுவார்கள். அந்த நாற்று மாதிரி சிலகாலம் இந்த வீட்டில் இருந்து வேறு வீட்டில் விளையப்போகும் நாற்று+ அன்னார்( ஒத்தவர்) நாத்தனார் என்ன அழகான சொல்லாட்சி
கொழுந்தன் கொழுந்ததி
    செடியின் கடைசித் தளிர் கொழுந்து எனப்படும்.கணவனின் தம்பி தங்கைகள் கொழுந்துகள்.அது கருதியே கொழுந்தன் கொழுந்தி என்ற சொல் உருவானது.    அப்பாவின் சகோதரி அத்தை அம்மாவின் சகோதரன் மாமா அவர் மனைவி மாமி என்று அத்தைக்கும் மாமிக்கும் கூட வேறு வேறு உறவு என்ற விளக்கச் சொற்கள் தமிழில் உள்ளன    
  ஒர்ப்படி
ஒரே வீட்டில் வாழ்க்கைப் பட்ட பெண்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஓர்ப்படி என சொல்லிக் கொள்வார்கள்.பொருள் ஓர் படியில் அதாவது ஒரே படிதாரத்தில் சமமான உரிமையில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் என்பதே  அச்சொலலின் பொருள்
ஆங்கிலத்தில் கசின் (cousin) என்ற ஒற்றைச் சொல்லில் பல உறவுகள் ஒதுங்கவேண்டியுள்ளத.
தமிழ் அப்படியா?


ர.கணபதி, அய்யனார் புரம், சின்னமனூர்