பெண்மையை போற்றுவோம்...! 014

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம்...! 014

பெண்மையை போற்றுவோம்..

முன்னுரை : 
             
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்ற கவிமணி அவர்களின்   பொன் மொழியின் வரிகளில் பெண்மையை போற்றுவோம் தலைப்பில் இக்கட்டுரையை காண்போம்.


பெண்மையின்     :
பெருமைகள் 


விழிகளில் உறக்கம் தொலைத்து....
உணர்வுகளில் அன்பை சுமந்து....
கருவில்  நமக்காய் பத்தியங்கள் இருந்து....
நம் பாதங்கள் தந்த வலிகளை  அழகாய் ரசித்து....
மகப்பேறு காலத்தில் மறு ஜென்மம் எடுத்து....
உறவுகளை நமக்கு பரிசாய் கொடுக்கும்...
பரிசுத்தமான ஆன்மா ...
பெண்மை மட்டுமே....

காந்தம் போன்றது அவளது உள்ளம்....
சுமைகளை ஏற்பதில்...
எமனையும் வென்று விடுவாள் தன் துணிவில்....
எதனையும் இழந்து விடுவாள் தன் குழந்தையின் அன்பில்...
பசியென்று வந்து நின்றால் எதிரிக்கும் 
தாயாய் இருப்பாள்...

பகையென்று வந்து விட்டால் பக்குவமாய் பந்தாடி விடுவாள்...
 தியாகம் என்ற ஓர் சொல்லுக்கு ....

பெண்மை மட்டுமே உதாரணம்....
இதரணிக்கு.....


சுயநலம்  இல்லா சேவகி...

செல்வத்தை சிக்கனமாய் சேமிக்கும் செல்வமகள்...
  அறிவியலும் வியந்து பார்க்கும் அதிசயம்...

அன்னையாய்...

மகளாய்.... 

தாரமாய்....

தங்கையாய்...

செவிலியராக
 

வானிலை ஆராய்ச்சியாளராக
 

மருத்துவராக
 
ஆசிரியையாக....

வீராங்கனையாக ...

அறிவியல் ஆராய்ச்சி மேதையாக....

காவலராக
இன்னும் பல  தசாவதாரம் எடுக்கும்....

உலகின் அதிசயம் பெண்மை மட்டுமே....
 
முடிவுரை: 

 உலகின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை மனதார போற்றுவோம்.
பெண்களாய் மட்டும் பார்க்காமல் நம் நாட்டின் பெருமையாய் பார்ப்போம்.
அன்பில் அன்னை தெரசா, விளையாட்டு துறையில் P.T.உஷா, விண்வெளியில் கல்பனா சாவ்லா, அரசியல் ஜே. ஜெயலலிதா, இந்திரா காந்தி,
திரை துறையில் இசையில் p.சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம்...... நடிப்பில் மனோரமா ஆகியோர்...இன்னும் சொல்லி கொண்டே போகலாம். சமையல்  முதல்   சிகரம் வரை எல்லைகள் கடந்து சாதனைகள் புரிந்து வரும் பெண்களை இருகரம் கூப்பி இந்த உலகிற்கு அடையாளமாய் மாற்றுவோம். பெண்மையை என்றும் போற்றுவோம். 

- ஹர்சிதா, திருச்சி