அண்ணா என்னும் சகாப்தம் - 021

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் சகாப்தம் - 021

அண்ணா என்னும் சகாப்தம்
 
வரலாறு அண்ணாவை செதுக்கியதா?
அல்லது அண்ணா வரலாறு படைத்தாரா?
ஐயம் இல்லை,
அண்ணா என்றும்  வரலாற்று மயில்கல்.

அரசியலில் அவர் ஓர் ராஜ தந்திரி,
அதனால் அவர் வகித்த பதவியோ தலைமை மந்திரி.
கலையுலகில் அவர் ஓர் பன்முக வித்தகர்.
கல்வி துறையில் மெத்த படித்த பாவலர்.

தாய் மொழியை கண்ணென மதிப்பவர்.
ஆட்சி மொழியில் வல்லமை பெற்றவர்.
அரசியல் சூழ்ச்சியை வெல்ல தெரிந்தவர்.
அண்டை நாட்டில் பாடம் சொல்ல தெரிந்தவர்.

அண்ணா எழுதிய புத்தகங்ளோ ஏராளம் .
அவர் மனதோ மாரியைப்போல் தாராளம்.
மேடையில் அவர் பேச்சுகளோ எதிரிக்கு பீரங்கி.
எளியோருக்கு உதவிடுவார் தன்னிலையில் இருந்து இறங்கி.

சரித்திரம் படைத்த அவர் ஒரு  சகாப்தம். 
அவர் நம்மை பிரிந்த பொழுது அனைத்தும் நிசப்தம். 
வரலாற்று காலச்சுவடுகளில் அவர் கால் தடங்கள்.
அந்த நினைவை கொண்டாட மனதில் தவங்கள்.

அண்ணாவை என்றும்  மறவாமல் துதிப்போம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் அவர்  கோட்பாட்டை மதிப்போம்.

அ. உமா சங்கரி 
சென்னை
(ஆசிரியை)