வீரமங்கை வேலுநாச்சியார் 045

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

வீரமங்கை வேலுநாச்சியார் 045

வீரமங்கை வேலு நாச்சியார்
முன்னுரை
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட பெண்மணி என்ற பெருமை கொண்டவர் வீரத்திலும்  தீரத்திலும் மதிநுட்பத்திலும்  உடைய இரும்பு பெண்மணி.இத்தனை குணங்களையும் கொண்ட சிவகங்கை சீமை பெண்ணரசியான வீரமிகு வேலு நாச்சியார் அவர்களை பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காண்போம் .  

பொருள் உரை 

குடும்பம்

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள சக்கந்தி என்ற ஊர் மிகவும் பிரசித்துவமான ஊர் ஆன்மீகத்தில் தலைத்தோங்கிய ஊர் .இவர் மன்னர்  வம்சாவளியை சேர்ந்தவர்.ராமநாதபுரம் மன்னர் முத்து விஜய ரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும்  முத்தாத்தாள் நாச்சியார் அவர்களுக்கும் ஒரே பெண் மகளாக பிறந்தார். வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு (கிபி1730ம்) ஆண்டு. 

கல்வி மற்றும் கலைகள்

ஆண்  வாரிசு இல்லாத காரணத்தினால் ஒரு ஆண்மகனைப் போலவே வளர்க்க பெற்றார். ஆயக்கலைகள் 64யும் கற்று தேர்ந்தார். கலைவாணியின் அருளால் கல்வியை திறம்பட பயின்றார்.அனைத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் (ஆங்கிலம், பிரஞ்சு ,உருது மொழிகளில்) இவரை மிஞ்ச யாரும் இல்லை. ..ஆணுக்கு சமமான போர் புரியும்  பராக்கிரமசாலி ஆனவர்.குதிரை ஏற்றம் யானை ஏற்றம் ஈட்டி எறிதல் வாழ் வீச்சு அம்பு விடுதல் மற்றும் வளரி வீச்சு போன்ற அனைத்து வீர தீரகலைகளிலும் திறன் பட பயிற்சி பெற்றவர். பாரெங்கும் இவருடைய வீரத்தின் வெற்றி முழக்கம் விண்ணை மட்டும் அளவுக்கு இருந்தன. கலைமகள் திருமகள் மலைமகள் மூன்றும் சேர்ந்த தேவியின் அம்சமாக இருந்தவர் நமது வீரமங்கை வேலுநாச்சியார்.
.
திருமணம் மற்றும் ராஜாங்கம் 

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு திருமண வயதும் நெருங்கியது ஆகையால் அவருடைய பெற்றோர்கள் தம் மகளுக்கு 1746 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்து வடுக நாதருக்கு திருமணம் செய்து வைத்தனர் இதன் பிறகு பிறந்த ஊரை விட்டு புகுந்த ஊரான சிவகங்கைக்கு குடி புகுந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி என்ற வீர பெண்மணி மகளாகப் பிறந்தார். இளவரசியின் பிறப்பால் சிவகங்கை முழுவதும் விழாக்கோலம் கொண்டிருந்தது .சிவகங்கை மிகவும் சீரும் சிறப்புமாக இருந்த ஊர். வரி வசூல் இல்லாத ஊர். விளைச்சல் இருந்த பூமி. வாணிபத்தில் முன்னேற்றம் நிறைந்த ஊர். இந்த ஊர் மக்கள் வீரத்தில் மிகுந்த திறன் படைத்தவர்கள். இலக்கிய நயம் மிகுந்தவர்கள் மற்றும் ஆன்மீகத்தின் அறவழியில் செல்பவர்கள்.

ஆன்மீகம் மற்றும் வீரம்

மன்னர் முத்து வடுகநாதர் சிறந்த சிவ பக்தர். இவரைப் போல் சிவ பாராயணம் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இல்லை. இவர் ஒரு தலை சிறந்த ஆன்மீகவாதி.வளரி வீச்சில்
முத்து வடுகநாதர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.இவரை வெல்லும் தகுதி எந்த ஆண் மகனுக்கும் இல்லை .ஆனால் காளையார் கோவில் உள்ள சிவபெருமானை வழிபடும் பொழுது எந்த ஆயுதத்தையும் எப்பொழுதும் எடுத்துச் செல்வதில்லை. அன்பே சிவம் என்ற தத்துவத்தை உடையவர்.

சூழ்ச்சிகளும் சோதனைகளும்

பிரிட்டிஷ் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிகள் ஒவ்வொரு நாட்டிலும் வரி வசூல் செய்து கொண்டிருந்த நேரம் அது. ஆனால் நமது மன்னர் முத்து வடுகநாதர் வரி வசூல் தருவதில் உறுதியாக இல்லை. அதற்கு பதிலாக போர் புரிய தயாராக இருந்தார் இந்திய மண்ணில் பிறந்த நாங்கள் ஏன் கப்பம் கட்ட வேண்டும் என்று ஆங்கிலேயரை பார்த்து எள்ளி நகையாடினார்.. வளரி மூலம் போர் செய்ய வரும்படி அறைகூவல் விட்டார. உங்களுக்கு கப்பம் கட்ட வேண்டுமானால் எங்களுடன் போர் செய்து வெற்றி பெறுங்கள் என்று வீர சவால் முழக்கமும் விட்டார்.இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியில் முத்துவடுகநாதரை கொல்வதற்கு முயற்சி செய்தனர்.

ஆற்காடு நவாப் தனது பெரும்படை மூலம் சிவகங்கை ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளை தன் வசமாக்க சூழ்ச்சி புரிந்தான். இதற்கு ஆங்கிலப்படைகளையும் கைகோர்த்து சூழ்ச்சி களத்தில் இறங்கினான .

வீர மரணம்

1772 ஆம் ஆண்டு முத்து வடுகநாதர் சிவ வழிபாட்டிற்காக காளையார் கோவில் சென்றார் அப்பொழுது அவரிடம் ஆயுதங்கள் இல்லாத சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் தெரிந்து கொண்டு, பெரும் போர்படைகள் மூலம் நிராயுதபாணியான மன்னர் முத்து வடுக நாதரை
சுட்டுக்கொன்றனர். காளையார் கோவிலை தம் வசப்படுத்தினார். இந்த செய்தி கேட்டு வேலு நாச்சியார் விரித்த கூந்தலுடனும் அழுத செவ்விழிகளுடனும் ஆவேசமாக காளையார் கோவில் வந்தார். தனது கணவர் முத்து வடுகநாதரின் வீர உடல் மீது சபதம் செய்தார் பரங்கியர்களை கொன்று பழி தீர்ப்பேன் என்று.

தலை மறைவு மற்றும் புகலிடம்

வீரமங்கை நாச்சியாருக்கு சிவகங்கை படைத்தளபதிகளான சின்ன மருது பெரிய மருது அடைக்கலம் கொடுத்தனர். தேவகோட்டை அருகே உள்ள சக்ரவதி கோட்டை ,படமாத்தூர் கோட்டை ,திண்டுக்கல் கோட்டை ஆகிய இடங்களில் வீரமங்கை வேலுநாச்சியார் மறைந்து வாழ்ந்தார் கோட்டைகளில் உள்ளே வேல்,  வால் மற்றும் வளரி இந்த ஆயுதங்கள் பதுக்கப்பட்டு பாதுகாப்புக்காக இருந்தன. கோட்டைகளை சுற்றி முட்புதர்கள் அரணாக இருந்தன. ராஜ நாகங்களும் காவலுக்கு வைக்கப்பட்டன.ஆனால் இந்த கம்பீரமான கோட்டைகளின் நிலை பராமரிப்பு இல்லாமல் அழியும் நிலையில் இருப்பது வேதனையை தருகிறது. வரலாற்றுச் சின்னங்களுக்கு ஏன் இந்த நிலை?????
தலைமறைவாக இருந்த வேலுநாச்சியாருக்கு விருப்பாச்சி  மன்னர் கோபால நாயக்கர் அடைக்கலம் கொடுத்தார். வேலு நாச்சியார் ஏழு ஆண்டுகள் மிகவும் கடுமையான போர் பயிற்சி செய்து தமது சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானார்.

விசுவாசமும் தேசப்பற்றும்

வீரமங்கை வேலுநாச்சியார் தனது கணவர் முத்து வடுகநாதருக்கு வீர அஞ்சலி செலுத்துவதற்காக காளையார் கோவில் சென்றார். இதை தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். அரியக்குறிச்சி அருகே ஆடு மேய்ப்பவள் உடையாள் என்பவளை வழியில் வேலுநாச்சியார் சந்தித்தார். அவரிடம் தம்மை பின் தொடரும் ஆங்கிலேயர்களுக்கு வந்த வழி சொல்ல வேண்டாம் என்று சொன்னார். ஆடு மேய்ப்பவளும் விசுவாசமாக நமது ராணிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து விடை அனுப்பினார்.  

கிராம தெய்வமும் வழிபாடும்

வேலு நாச்சியாரை பின் தொடர்ந்த ஆங்கிலேயர்கள் ஆடு மேய்க்கும் உடையாளிடம் அவரைப் பற்றிய தகவலை கேட்டனர். உடையாள் மறுக்கவே உடையாளை துண்டு துண்டாக வெட்டி போட்டனர். அவளின் நாட்டுப்பற்றை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
விபரம் கேள்விப்பட்ட வேலு நாச்சியார் உடனே அந்த இடத்திற்கு வந்து மிகுந்த வருத்தம் கொண்டார் வேதனையில் வெம்பினார்.
வெட்டுப்பட்ட உடல்களை ஒன்று சேர்த்து தனது வைர தாலியை அணிவித்து அந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டினார்‌ இன்றும் கொல்லங்குடி ஊரின் கிராம தெய்வமாக வெட்டுடையார் காளி தெய்வமாக இருக்கிறாள்.

மொழி பற்றும் உதவிகளும்

வேலு நாச்சியார் 1772 ஆம் ஆண்டு சிவகங்கை படை தளபதிகளான சின்னமருது பெரியமருது உதவியுடன் மைசூர் மன்னர் ஹைதர் அலி உதவியை நாடினார். நாச்சியாருக்கு உருது மொழி தெரிந்ததால் மன்னர் ஹைதர் அலிக்கு மிகவும் நெகிழ்ந்து போனார். அதன் பலனாக 12 பீரங்கிகள் மற்றும் 500 துப்பாக்கிகள் தந்தும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் வீரர்களையும் அளித்து வேலு நாச்சியாரின் சபதத்தை நிறைவேற்ற உதவியாக இருந்தார்.

நவராத்திரியும் மகிஷன் வதமும்

1773 ஆம் ஆண்டு சிவகங்கை உசேன் நகர் என்று பெயர் மாற்றம் கண்டு வீரமங்கை நாச்சியார் மகாகாளி ஆனார். அதனால் கால பைரவர்களான மருது சகோதரர்கள் உதவியுடன் மூன்று தனி பிரிவுடன் கூடிய கொரில்லா போர் யுக்தியை கையாண்டார். அப்போது சிவகங்கை முழுவதும் விஜயதசமி யின் நவராத்திரி விழா கோலம் போன்றது.
இந்த தருணத்தில் மக்களோடு மக்களாக கலந்து தனது ஆயுதங்களை உடைகளில் மறைத்துக் கொண்டு ஆங்கிலேயருடன் போரிட்டார்.
போர்படை தளபதி  வீரத்தின் மலைமகள் குயிலி 
ஆனவள் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை தீ கரையாக்கி ஆங்கிலேயர்களை தெறித்து ஓட செய்தார். இந்த அக்னி பிரவேசம் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்தது. வீர தமிழச்சிக்கு இத்துணை திட என்னமா என்று,??

மீண்டும் ராஜாங்கம்

1780 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் ஐந்தாம் நாள் காளையர் கோவில் முன்பு வீரமங்கை வேலுநாச்சியார் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டார். தனது கணவரை கொண்ட இரண்டு ஆங்கிலேயர்களையும் வெட்டி வீழ்த்தினார்.  உசேன் நகர் என்ற பெயரை மாற்றி மீண்டும் சிவகங்கை என்ற பெயரை சூட்டினார். இது அவருடைய தேசப்பற்றுக் கொண்டான செயல். சிவகங்கை கோட்டையில் மீண்டும் அனுமன் கொடி பறக்க செய்து அனைத்து மக்களையும் மனம் நெகிழ செய்தார் .சிவகங்கை முழுவதும் தேவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு திருவிழா கோலம் பூண்டது.

இழப்புகள் 

விருப்பாச்சி அரண்மனையில் தங்கியிருந்த வேலுநாச்சியாருக்கு ஒரு பேரிடி காத்திருந்தது.1790 ஆம் ஆண்டு இளவரசி வெள்ளச்சியின் மறைவு வேலுநாச்சியாரை இதய நோயாளியாக மாற்றியது. தனிமை அவரை மிகவும் வருத்தியது.  1793 ஆம் ஆண்டு வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணம் மேலும் அவரை முழு நோயாளியாக மாற்றியது. இதன் பின்னர் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25 நமது வீரமங்கை வேலு நாச்சியார் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார்.2008 டிசம்பர் 31 ஆம் ஆண்டு நமது வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவாக தபார்தலை வெளியிடப்பட்டது.

முடிவுரை

இத்தனை பெயர் புகழ் வீரம் தீரம் பெற்ற நமது அன்னை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெருமை காப்போம் அன்னையின் புகழ் பாடுவோம்.

-ஆர் எல் லாவண்யா திருநங்கை
த /பெ ஏ.ராஜேந்திரன்
12, பண்டரிநாதன் கோவில் தெரு,
துறையூர் வட்டம்
62 10 10
திருச்சிராப்பள்ளி மாவட்டம்