உலகம் போற்றும் பெண்கள் 044

புதுமைப்பெண் விருது கட்டுரைப்போட்டி

உலகம் போற்றும் பெண்கள் 044

உலகம் போற்றும் பெண்கள்

 முன்னுரை:

         சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8- ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் ஆண் குழந்தைகள் மீதான மோகத்தால் பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப்பால் ஊற்றி ஊற்று கொன்று விடுவார்கள். பின்னர் பல சமூக சீர்திருத்தவாதிகளின் தளராத முயற்சியால் பெண் சிசுக்கொலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். *அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பதற்கு* என்றவற்றிற்கு மாறாக அனைத்து பெண்களுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.

 *பெண்களின் வலிமை:* 

         பெண்களைப் போல வலிமையானவர்கள் யாரும் இல்லை. அதுபோல அவர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.பெண்களால் தங்களையும் தங்களை சார்ந்தோரையும் வானளவிற்கு உயர்த்த முடியும். எல்லாத் துறைகளிலும் முன்னேறி இந்த உலகத்திற்கு மேன்மையை அளிப்பவர்கள் தான் *உலகம் போற்றும் பெண்கள்.* அவர்களால் தான் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து சக்தி வாய்ந்ததாக உருவெடுத்து இருக்கிறார்கள். *'உடல் உறுதி கொண்டவன் ஆண் மன உறுதி கொண்டவள் பெண்'.* 

 
      *சாதனை செய்த சிங்கப்பெண்கள்* 
        இந்தியாவில் ,உலகம் போற்றும் அளவிற்கு பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளனர். அதில் சிலரைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். 
           இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெ *ஜெயலலிதா.* விண்வெளியில் சுற்றிய முதல் இந்திய பெண்மணி *கல்பனா சாவ்லா .* சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் *சரோஜினி நாயுடு.* இந்தியாவின் முதல் பெண் பிரதமர் *இந்திரா காந்தி.* முதன்முதலாக நோபல் பரிசு பெற்றவர் *அன்னை தெரேசா.* முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்ற பெண்மணி *இந்திரா காந்தி.* இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி *குமாரி. எம். பாத்திமா பீவி.* இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் *பி.வி. சிந்து.* இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் *பிரதீபா பாட்டில்.* இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்  *முத்துலட்சுமி அம்மாள்.*
 

 *1. *ஜெ. ஜெயலலிதா* 

முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்படநடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 2016-ம் ஆண்டு டிசம்பர்-5  இறக்கும் வரையில் முதலமைச்சராகப் பணி புரிந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.

தனது *தொட்டில் குழந்தை* திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர்.

இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு (1972)

சிறப்பு முனைவர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)

தங்க மங்கை விருது - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்

தமிழகத்தின் *இரும்பு பெண்மணி* எனவும் போற்றப்பட்டார்.
              
    2.  *அன்னை தெரேசா:* 

அல்பேனியாநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக       ஏழை எளியோர்களுக்கும், நோய் வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.

1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளம் காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார். அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992இல் வெளியிடப்பட்டது.

      3. *பி வி சிந்து:* 

        *"உலகத்தை உருவாக்கிய பெண்களே!உதிரத்தை உயிராக்கிய பெண்களே!* 
    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை.    இந்தியாவின் வெற்றிகரமான விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்படும் சிந்து, ஒலிம்பிக் மற்றும் BWF சர்க்யூட் போன்ற பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.  இதில் 2019 ம் ஆண்டு உலக  சாம்பியன்ஷிப் தங்கம் உட்பட,  பேட்மிண்டன் உலக சாம்பியனான முதல் ஒரே இந்தியர் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரண்டாவது தனிப்பட்ட தடகள வீராங்கனை ஆவார்.  கடின உழைப்பினால் உலக தரவரிசைக்கு உயர்ந்துள்ளார்..

      பி.வி.சிந்து 2018, 2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஃபோர்ப்ஸின் அதிக ஊதியம் பெறும் பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

 விளையாட்டு கௌரவமான அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா , அத்துடன் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ  மற்றும் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் ஆகியவற்றைப்
 பெற்றவர் .
 *முடிவுரை:* 
     
         ' முதலீட்டை தங்கத்தில் போடாமல் பெண்ணை படிக்க வைத்தால் அதுவே நம் தலைமுறையை மாற்றும்'.இதே போல் நாமும் உலகம் போற்றும் பெண்ணாகத் திகழச் செய்வோம்......

பெ.ராஜலட்சுமி,
ராஜபாளையம்.