இளைஞர் கையில் இந்தியா

புதுக்கவிதை

இளைஞர் கையில் இந்தியா

இளைஞர் கைகளில் இந்தியா..

இளைய சமுதாயமே
நீயே வாழ்விலே எல்லா வளமும் பெற்றே
நடக்கவே

நாளும் பொழுதும் போராடிடு
நலங்கள் வேண்டியே

நித்யகடனாக நித்தமும் பணிகள் செய்தே பவனி வந்திடு

என்றே இளைஞரை உயர்த்தினீரே
வருங்காலம் அவர்களின் கையில் என்றே வைத்தீரே

கனவினை காணச்சொல்லி
கனவாய் மாறச்
சொன்னவரே

கலாமென்ற காலத்தில்
காலமெல்லாம் மூழ்கிட வைத்தவரே

இளமைக்
காலத்தை
எமக்கே அர்ப்பணித்திட்ட
ஏழைப்பங்காளனாக வாழ்ந்தவரே

அறிவியலிலே சிறந்த அகிலத்தை அனைவருமே உணர்ந்தே சிறந்திட வேண்டுமென்றவரே

உத்வேகமது கொண்டே
உறங்காத மனதோடு
நல்லகனவதைக் கண்டவரே

கைங்கர்யம் எதிர்பார்க்காமல்
கருமமே கண்ணினாரே
என்றே

கண்ணின் மணி போல அறிவுரைகளைச்சொல்லியே
கருத்தாய்
வளர்த்திட்டவரே

இளைஞர்களை எழுச்சி கொள்ள வைத்தவரே
வல்லமை வாய்ந்தவரே
வன்முறையில்லாத
உலகைக் காண வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவரே

எடுத்த காரியம் முடிக்கவே
ஏற்றமது கொண்டே வாழ்ந்தவரே
மக்களின் நாயகரே
மனங்களை ஆள்பவரே
எங்கள் கலாமே
இந்தியா வல்லரசாக வேண்டுமே என்ற
தணுயாத தாகமது கொண்டவரே

ஏவுகணை நாயகனே ஏற்றங்கள் புரிந்திட்டவரே
நாட்டின் உயர்வை நயமாகப்
பெற்றிடுங்கள் என்றே 
கூறியே
உள்ளங்களில் வாழ்பவரே

முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை