அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 001

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 001

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்

காஞ்சிதந்த வாஞ்சியே
மிஞ்சிய பேச்சில்
விஞ்சியவரே

அரசியலின்
நங்கூரமே
வியூகத்தில் 
சாணக்கியரே

மாற்றான்
தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு

என்றேமனக் கருத்தை
மாறாமல் மாற்றமல் சொன்னவர்

வறுமையின் கோரப்பிடியில்
சிக்கித்
தவித்ததால்

சீரான கல்வியைப்
பெற இயலாமல்
உள்ளமுள்ளோர் உதவியில்
கற்றவரே

நெசவுத்தொழிலைகுலத்தொழிலாகக்கொண்டவரே

தமிழக முதல்வராகி
தன்னிகரில்லாத்
திட்டங்களை

தன்னிறைவோடு
தந்தே அடித்தட்டு
மக்களை
அனைத்து வளமும்

பெற்றிடச்
செய்தவரே
தமிழை
தழைக்க
வைத்தவரே

இந்தியை எதிர்த்தவரே
இந்தியாவைக்
காத்தவரே

புத்தகம் வாசித்தே
புத்துணர்வைப்
பெற்றவரே
பொடிபோட்டு
பொடிவைத்து
பேசிய
பொன்னான
பேச்சாளரே


புற்றுநோயின் தாக்கத்தால்
பாதிக்கப்படிருந்த
போதும்
புத்தகம்
வாசித்தவரே

இப்படை தோற்கின்எப்படை
வெல்லும்
என்றே
எல்லையற்ற
உற்சாகம் கொடுத்தே
ஊக்கப்படுத்தியவரே

பேச்சை உயிர்மூச்சாகக்
கருதியவரே
பேச்சுப்புயலே

பேராண்மை
மிக்கவரே
பேரறிஞர்
அண்ணாவென்றேபெருமையோடே அழைக்கப்பட்டவரே
எங்களின் அண்ணாத்துரையே ஆற்றலின் சிகரமே
ஆற்றொழுக்கானவரே
ஆளுமைமிக்க அண்ணாவே

உம்பூவுடல்
மறைந்தாலும்
பொன்னுடல்
மறைந்தாலும்
புகழுடல்
மறையாதவரே
வாழிய வாழிய
அண்ணா வாழியவே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை