கல்வியில் சிறந்த பெண்கள் 032

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

கல்வியில் சிறந்த பெண்கள் 032

கல்வியில் சிறந்த பெண்கள்

தலைப்புகள்
1.முன்னுரை
2. பெண் கல்வியின் முக்கியத்துவம்.
3. கல்வியால் உயர்ந்த பெண்கள்.
4. பெண் கல்வியின் பயன்கள்.
5. பண்டைய தமிழகத்தில் பெண் கல்வி.
6.முடிவுரை


1.முன்னுரை
"பெண் இல்லாமல் பெருமையும் இல்லை பெண் கல்வி இல்லாமல் வளர்ச்சியும் இல்லை" என்பதை நிரூபித்துக் காட்டிய பல பெண்களின் வரலாற்றைப் பற்றி இக்கட்டுரையில் காணவிருக்கிறோம். ஒரு பெண்ணிற்கு அளிக்கும் கல்வி அது அந்த குடும்பத்திற்கு அளிக்கப்படும் கல்வி என்பதை நிரூபித்துக் காட்டிய பெண்கள் பலர்.

2. பெண் கல்வியின் முக்கியத்துவம்

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
என்பதை நிரூபித்துக் காட்டும் விதமாக பெண்கள் ஆட்சியாளராகவும் மருத்துவராகவும் வல்லுனர்களாகவும் முதல்வராகவும் இருந்து சாதித்துள்ளனர். நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டின் பெண் கல்வியை பொறுத்து அமைகிறது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்

இடைக்காலத்தில் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற நிலை ஏற்பட்டது பன்முறை ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும் புதிய சமயங்களின் தோற்றங்களினாலும் பெண் கல்வி மறுக்கப்பட்டு ஆண்கள் மட்டும் கல்வி பெரும் சூழல் தோன்றியது.

3. கல்வியால் உயர்ந்த பெண்கள்

ஜான்சி ராணி, அகல்யாபாய்,இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

பெண்கள் கல்வி பெற்றதால் இன்றைய உலகில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றன.

பி வி சிந்து, கல்பனா சாவ்லா இன்னும் பலர் சாதனைப் பெண்களாக திகழ்கின்றனர்

4. பெண் கல்வியின் பயன்கள்

"கல்வியில்லாத பெண்கள் கலர் நிலம் அந்நிலத்தில் புல் விளைத்த விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" என்ற பாரதிதாசனின் கூற்றக்கிணங்க அனைத்து பெண்களும் கல்வி பயில வேண்டும்

பெண்கள் கல்வி பெற்றதால் இன்றைய உலகில் அனைத்து துறைகளிலும் கால் தடம் பதித்துள்ளனர்.

இவ்வுலகில் பெண்கள் சுயமரியாதை விடனும் கம்பீரமாகவும் வாழ வேண்டும் எனில் பெண்களுக்கு கல்வி அறிவு அவசியம் பெண் கல்வி நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்.

5. பண்டைய தமிழகத்தில் பெண் கல்வி

"புவி ஆளும் மன்னர்கள் கவியாளும் புலவர்களை போற்றினர்" என்பது வரலாறு கூறும் உண்மை.

இப்புவி மன்னர்களுக்கு நல்லனவற்றை எடுத்துச் சொன்ன புலவர்களில் பெண்களும் அடங்குவர்.

மகாகவி பாரதியார் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர் போன்ற பல தலைவர்கள் பெண்களுக்கு கல்வி கிடைக்க பாடுபட்டனர்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றார் பாரதி"

" சமூக காலத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த பெண்கள் இடைக்காலத்தில் சமண பௌத்த சமயங்களின் கொள்கையால் இழிவான பெண்கள் என்று ஒதுக்கப்பட்டனர். மீண்டும் வைணவமும் சைவமும் தலை தூக்கி பிறகே பெண்களுக்கு முன்னேற்றம் கிடைத்தது.

6.முடிவுரை

"எந்த ஒரு சமூகமும் செய்யக்கூடிய சிறந்த முதலீடு பெண் கல்வி தான்" 

பெண் சுதந்திரமும் பெண் விடுதலையும் இன்னும் கோரப்படும் விஷயங்களாகவே இருப்பது வேதனை. பெண்களுக்கான சுதந்திரமும் விடுதலையும் அவர்களை சுற்றியுள்ளவரிடம் தான் இருக்கிறது. 

கையில் உள்ள செல்வத்தை காட்டிலும் நிலைத்த உங்களுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வில் இறுதி வரையிலும் கை கொடுக்கிறது.

S. புவனேஸ்வரி.