பெண்மையை போற்றுவோம் 033

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம் 033

மாண்புடைய மகளிர்.

முன்னுரை

ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா. என்று பாரதியின் கூற்றுக்கேற்ப ஒளியினை உலகிற்கு பரப்பி தன்னம்பிக்கை ஊட்டுபவர்கள் பெண்களே .அப்படிப்பட்ட பெண்களின் சிலரை கட்டுரையில் காண்போம்.

பொருள்.

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று முழங்கியது ஒரு காலம்.பெண்களின் கை விலங்குகளை அனைத்தும் தகர்த்தெறிய செய்தவர் பாரதியார்.  ஒரு பெண் கல்விக்கற்றாள் அந்த குடும்பமே கல்வி கற்றது போன்றதாகும். அப்படித்தான் இந்தியாவில் பெண் கல்விக்கு முதன் முதலில் வித்திட்டவர் சாவித்திரிபாய் ஃபூலே.

அக்காலத்திலே பெண்கள் மருத்துவம் பார்க்க ஆண் மருத்துவரிடம்  செல்லவில்லை.இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. உயிரிழப்புகள் இனி ஏற்படக் கூடாது என்று முதல் பெண் மருத்துவராக அவதாரம் எடுத்தவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி .

அக்காலத்தில் தொழு நோய்கள் மிகவும் அதிகமாக பரவிய காலம். அவர்களுக்காக மருத்துவம் பார்க்க யாரும் முன் வரவில்லை. அப்பொழுதுதான் அன்பிற்கும் கருணைக்கும் இலக்கணமாக திகழ்ந்த ஒருவர் வந்தார். அவரே அன்னை தெரேசா. இரக்கம் குணம் கொண்ட டாக்டராகிய இவர் தொழுநோயாளிகளை கண்காணித்து அவர்களை தன் இல்லத்தில் வைத்து மருத்துவம் பார்த்தார்.

ஏழைகளின் வழிகாட்டியாகவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னேற்ற படிகளை உயர்த்தவும் வழிகாட்டியவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர். திருமதி பிரதீபா பாட்டில் அவர்கள்.

இந்திய விளையாட்டு போட்டியாகிய குத்துச்சண்டையில் தடம் பதித்தவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய மேரி கோம் அவர்கள். வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்து இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டு வருபவர் இவர் .

சென்னையில் பிறந்து வளர்ந்து மேற்கு வங்கத்தில் மொழிப் பிரச்சனை கலாச்சார பிரச்சனை ஆகிய இருந்த போதும் தனது சாதனையை சாதிக்க வேண்டும் சவால் விட்டவர் நமது முதல் இந்திய பெண் மாலுமியான தமிழ்நாட்டின் ரேஷ்மா .ஆறரை ஆண்டுகளுக்குப் பின் பயிற்சி பெற்று தற்போது ஹூக்ளி துறைமுகத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார் .

56 வயதை கொண்ட டெசி தாமஸ் அவர்கள் நாட்டின் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். இத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்று அழைக்கப்படுபவர் ரிது கரிதால்.2007 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த இவர் மங்கள்யான் திட்டத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் இதே ஆண்டில் ஏபிஜே அப்துல் கலாம் அவரிடம் இருந்து இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதை பெற்றவர்.

இன்றைய அரசியலிலே பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்.

சினிமா துறையில் தனது சிறப்பான முத்திரையை பதித்தவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்றவரும் ஆகிய செல்வி ஜெயலலிதா அவர்களை இந்த நேரத்திலே நாம் சிறப்பான பெண்மணியாக பேசிக் கொண்டிருக்கிறோம். இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய அயராத உழைப்பு நாம் என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆண்களின் அதிகாரத்திற்கு அரசியலில் முட்டுக்கட்டைகள் பலவற்றைத் தாண்டி அரியணையில் அமர்ந்த பெண் மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர் அவர்கள் .இந்தியாவில் முதல் பெண் ரயில்வே அமைச்சராக பணியாற்றிய மம்தா அவர்கள் எளிமைக்கு மறு பெயர் பெற்றவர். கதர் புடவை   காலில் ரப்பர் செருப்பை மட்டுமேஅணிந்தவர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் அன்னை சோனியா காந்தி ராஜீவ் காந்திக்கு மனைவியாக இந்தியாவிற்கு வந்தார். தனது கணவரின் மரணத்திற்கு பின் இரும்பு பெண்ணாக இந்திய காங்கிரஸ்சை வழி நடத்திச் செல்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் என நம் நாடு ஒதுக்கி வைத்த ஒரு சமூகத்தில் பிறந்த பெண் புரட்சியாளர் மாயாவதி அவர்கள். ஜாதி வேறுபாட்டை ஒழித்தார். வழக்கமாக வரும் விமர்சனங்களை எல்லாம் தூசு போல் தட்டியறிந்தார். பெண் என்பதால் பல இடங்களில் ஏளனத்திற்கு ஆளானவர்.

முடிவுரை

அக்காலகட்டங்களிலே எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தும் பெண்கள் தங்களின் திறமையால் முன்னோடியாக திகழ்ந்து வந்தார்கள் .இக்காலத்திலும் பெண்கள் பல்வேறு துறைகளிலே தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். ஆகவே பெண்ணினத்தை மதிப்போம் பெண்ணினத்தை காப்போம் வாழ்க்கையிலே முன்னேறுவோம்.

பொ.ச.மகாலட்சுமி 
கோவை.