ஏழை வீட்டு தீபாவளி..

தீபாவளி கவிதை

ஏழை வீட்டு தீபாவளி..

ஏழை வீட்டு தீபாவளி...
அல்லும் பகலும் உழைத்தாலுமே
அரைவயிற்றுக் கஞ்சி குடிக்க முடியாத
நமக்கே
என்ன நாளும்
திருவிழாவும்

தீபாவளி வந்த்தாம்
தெருவெல்லாம் கொண்டாட்டமாம்
ஊரே கூடி ஒன்றாகச்சேர்ந்தே வடம்பிடித்த
தீபாவளிக்கு என்கிட்ட பொருளில்லையாம்
உழைத்த உழைப்புக்கு கூலியில்லை
பச்சபிள்ளை முகங்கலங்குது
தேடுப்பார்த்தாலும்கிடைக்கலை
தெருவோர
மக்களுக்கு
தரிசனமே

தீபத்தை ஏற்றவோ
தெருவெல்லாம் விளக்கும்
எனது பாதை இருட்டே


கொண்டாட வழியில்லை
வகையுமில்லை
வந்தாரை வாழவைக்க
வந்ததே

தேரும் திருநாளுமே
நித்தமும் கொண்டாட
எங்களுக்கு வழியில்லை
சத்தியம் செய்கிறேனே
மனிதப்பிறப்பே வேண்டாமே
ஏழேழு சென்மத்துக்குமே

எங்களுக்கு வானமே கூரை வைகுண்டமே குடிசை

தேவைகளே
இல்லாத
தெரியாத பிறவியைத்தந்திடு இறைவா
குடிசைகள்
குளிரட்டும்

கும்மிருட்டு ஒழியட்டும்
குலங்கள் விளங்கட்டும்
குடிசையெல்லாம்
மகிழட்டும்
இனிவரும் காலங்களிலே
தீபாவளியாகவே
நித்தமுமே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை