அண்ணா என்னும் சகாப்தம்...! 018

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் சகாப்தம்...! 018

அண்ணா என்னும் சகாப்தம்

காஞ்சிபுரம் கண்டெடுத்த  கண்ணியமிகு காவியத் தலைவனே! 
நெசவாளர் குடும்பத்தில்                                  பிறந்த நிறை மதியே! 
எதையும் தாங்கும் இதயமாக
உதயம் ஆனவரே, 
சாமானிய மக்களின் நம்பிக்கை
நட்சத்திரமாக திகழ்ந்தவரே, 
அவனியில் அவதரித்த
அழிவற்ற அவதார நாயகனே! 
பச்சையப்பன் கல்லூரியில்
பட்டை தீட்டிய வைரமே, 
எழுத்தாற்றலில் எட்ட முடியாது
யாரும் உம் உயரம், 
பேச்சாற்றலில் மிஞ்சிட யார்க்கும்
கொஞ்சமும் துணிவில்லை, 
இரண்டாம் உலகத் தமிழ்
மாநாடு நடத்திய
தமிழ்த் தாயின் தன்னிகரில்லா
தலைமகன் நீவீர் அன்றோ! 
மொழி  மீது  ஆசைகொண்டு
தமிழாசிரியர் ஆனீர், 
நீங்கள் அதிகம் காதலித்தது
அரசியல் அரசியையல்லவா! 
இளைஞர்கள் மனம் கவர்ந்த
மாவீரன் நீர்தானே! 
சிறை சென்ற உம்மிடம்
குறைகாண ஒன்றுமில்லை, 
நாடகத்துறையில் நீர் நடந்த
சுவடு நீங்கவில்லை இன்னும், 
உங்கள் அடியொற்றி வந்த
பாசமிகு தம்பிகளின்
நேசம்  மிகும்  நெஞ்சுடன்
அண்ணாவாய் ஆனவரே! 
அரைநாள் கல்வி கற்க
அரைநாள் குலத் தொழில் செய்ய
அருமையான திட்டம் வகுத்த
புரட்சியாளர் நீர், 
மாற்றாரை மதிக்கும் குணத்தில்
குன்றென நின்றவரே! 
உம் எளிமையால் ஏழை
பங்காளனாய் பங்கெடுத்தீர், 
ஊர் போற்ற வாழ்ந்த உம்
சீர் நிறைந்த வாழ்க்கை
சரித்திரம் சகாப்தமாய்  சாதனையாய் வரலாறாய் ஆனது, 
அறிவென்ற ஆழ்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவர் நீர்தானோ! 
மக்களுக்கென வாழ்ந்த மாமனிதா! 
காற்றுள்ள வரையில் என்றும்
போற்றப் படுவீர், 
உம்புகழ் வாழ்க வளர்க. 

     -கவிஞர்.சகுந்தலா ராமலிங்கம், உடுமலைப்பேட்டை.