வெற்றி நிச்சயம்...!

தன்னம்பிக்கை கவிதை

வெற்றி நிச்சயம்...!

அன்புடனும்  அடக்கத்துடன் நடந்துகொள்//

ஆர்வத்துடன் பாடத்தைக் கற்றுக்கொள்//

இறைவனை வணங்கி செயலைத் துவங்கு//

ஈட்டி போல் கூர்மையான சிந்தனை கொண்டிரு//

உரையாடல் முதியோரிடம் வைத்துக் கொள்//

ஊக்கத்துடன் விவேகமாக பயணித்திடு வாழ்வில்//

எண்ணங்கள் உயர்வாக வைத்துக் கொள்//

ஏடுகளை கற்று ஏற்றத்தை பெற்றுக்கொள்//

ஐவர் (யார் ஐவர்) முன் தலைநிமிர்ந்து நில்//

ஒன்றை பிறர் செய்வார் எதிர்பார்பை நிறுத்திக்கொள்//

ஓவியம் வரைய மனம் அமைதி அடையும் //

ஔவை கூறிய வழியில் வாழ்வை மாற்று//

எந்நாளும் வெற்றி தான் சுறுசுறுப்பாய் இருந்திடு தினமும்// 

இலக்கை அடைவது நிச்சியம் ஒரு நாள்//

திருமதி.ஜொ.சி.மோனிஷா சரவணன் கோவை.