காஞ்சித் தலைவன் கலைகளின் நாயகன் அண்ணா...! 017

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

காஞ்சித் தலைவன் கலைகளின் நாயகன் அண்ணா...! 017

அண்ணா  அண்ணார்ந்துதான் பார்க்கவேண்டும் உன்னை.                              

ஆகாசத்தில் எங்கள் ஆசானாய் நீ.       

ஆசீர்வதிக்கப்பட்டாய் நீ      காஞ்சித்தாயின் கைகளில் தவழ.   

தமிழகம் மட்டுமல்லாது தமிழையும் ஆண்ட தன்னிகரில்லாத் தலைலவனே...

உன் தம்பிகளின் நெஞ்சசுக்கு  நீ  ஒரு வரம்  உரம் .
உன் கங்கள் கற்பக மரம்.

காஞ்சித்தலைவனே 
கலைகளின் நாயகனே
கற்றலின் காதலனே.

அந்நிய மொழியையும் ஆராயும் உன் வரிகள்

அனைத்தும்
வாஞ்சையாய் வருடிவிடும் வாலிப உள்ளங்களை

வெள்ளமாய் சீறிப்பாயும் உன் புரட்சி மொழிகள் அவர்தம் எண்ணங்களில்.

பூந்தோட்ட போர்க்களத்தில்
தன்னிறைவு பெறவேண்டும் தரணியில் உளோரெல்லாம் என்றென்னும் உன்னை
புற்றுநோய் தன்னத்தே கொண்டது ஏன்?..

வாசிப்பை நேசிக்கும் உள்ளமெல்லாம் வாடுகீறதே உன்னையெண்ணி...

உருவத்தில் வாமனன் கொண்ட கொள்கையில் விஸ்பரூபன் நீ.....

வருவாயா மறுபடி எம்மிடம்? 
வந்தாரை வாழ்விக்கும் தமிழகம் போல்.

பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை. நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு. நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.

.