முதல் காதல்...

முதல் காதல்...

தாயின் அன்பை போல பரிசுத்தமானது. மழலையின் புன்னகையை போல மனம் கவரக்கூடியது.
ஒவ்வொருவருக்குள்ளுக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக மலர்ந்திருக்கும். ஏதேனும் ஓர் தருணத்தில் அதை நினைவுபடுத்தி பார்க்கையில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்லும் மனதில்...

  அனைவரின் மனதிலும் மறைத்து வைக்கபட்ட அல்லது கருகி போன ஓர் காதல் உண்டு. ஆயிரம் காதல் அதன் பின் நம்மை கடந்து சென்றிருந்தாலும் அந்த முதல் காதலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?  முதல் காதல் மட்டும் நெஞ்சை விட்டு நீங்காமல் நிலைத்திருக்க என்ன காரணம்?

  ஏனென்றால் முதல் காதல் நம் தாயைப் போன்றது. தாயை பிடிக்காதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. நம் முதல் நம்பிக்கை ,அன்பு, அரவணைப்பு ,ஆறுதல், பாதுகாப்பு... என இப்படி அனைத்தையுமே நாம் நம் அன்னையிடம் இருந்துதான் முதலில் பெறுகிறோம். நம் உள்ளேயுள்ள உணர்வுகளுக்கு உயிரூட்டியவள் தாய். அதனால் தான் தாய் என்பவள் எப்போதுமே சிறப்பானவள்.

  அதுபோல தான் காதலும்..  பருவத்திற்குறிய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நமக்கு முதன் முதலில் வெளியிட கற்று தருவது முதல் காதல். தனக்குள் ஒளிந்திருக்கும் அச்சம்' மடம், நாணம், பயிர்ப்பு... போன்ற உணர்வுகளை முறையே வெளியிட உதவுவது முதல் காதலே. நம் வாழ்வின் அனைத்து விதமான நம்பிக்கை, எதிர்பார்ப்புகள், அன்பு, சந்தோஷம் ,வருத்தம் .. என அத்தனையையும் தனக்கே உரிமையாக்கிக் கொள்வதில் முதலிடம் பிடிப்பதும் இந்த முதல் காதல் தான்.

   அக்காதல் சேர்ந்தால் காதலர்கள் இணைந்து காதலை வாழ வைப்பர். தோற்றால் தனிதனியே பிரிந்து நினைவுகளில் காதலை வாழ வைப்பர் அவ்வளவு தான். ஆக காதல் என்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது... என்னதான் இயல்பான வாழ்க்கையை ஏற்று கொண்டு வாழ பழகி கொண்டாலும் மனதின் ஏதோவொரு மூலையில் காதலின் வலியும் கண்ணீரும் முதல் காதலை நினைத்து கொண்டுதானிருக்கும். அதுதான் காதலின் வெற்றி......

-சசிகலா திருமால்
கும்பகோணம்.