யாதுமாகிய பெண்...006

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

யாதுமாகிய பெண்...006

யாதுமாகிய பெண்
முகவுரை
கல் மீது உளி விழுவது போன்றது ஆண்மையின் அன்பு
விதை மீது மழைத்துளி விழுவது போன்றது பெண்மையின் அன்பு.பெண்மை என்றாலே மென்மைதான்.
திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரி .ஒருசிலருக்கு விடுமுறை, ஒரு சிலருக்கு பண்டிகை ,ஒரு சிலருக்கு பலகாரம் ,ஒரு சிலருக்கு புது பட ரிலீஸ் ஒரு சிலருக்கு தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒரு சிலருக்கு வியாபாரம், ஒருசிலருக்கு புத்தாடை பலருக்கு விடுமுறை ஓய்வு.ஆனால் யோசித்துப் பாருங்கள் எந்த ஒரு திரு நாள் கொண்டாட்டத்திலாவதுபெண்ணுக்கு ஓய்வும் கொண்டாட்டமும் மகிழ்வும் கிடைத்திருக்கிறதா என்று? நிச்சயமாக இல்லை. எனில் உலக மகளிர் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான ஓய்வு தரக்கூடிய ஒரே கொண்டாட்டம் மகளிர் தின கொண்டாட்டமேபெண்களுக்காக பெண்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு தினம் மகளிர் தினம்.
பெண்ணின் வேடங்கள்
          தாயாய், மனைவியாய், இல்லத்தரசியாக, சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய், மகளாய் என்று காலத்திற்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை எத்தனை நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்கள் பெண்கள் தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட தாய் நாடு என்றும் நதிகள் மலைகள் என்ற முக்கியமான அனைத்திற்கும் பெண்களின் பெயர்கள் தான் வைக்கப்படுகிறது .இன்றைய உலகில் பெண்கள் கணினி முதல் கார்பரேட் கம்பெனிகள் வரை அனைத்து துறைகளிலும் சீரிய பணியாற்றி சிங்கப்பெண்கள் ஆக மின்னும் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிரமம் தாங்கி சிகரம்  தொடுகிறார்கள்.அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு கடும் போட்டியை தந்து கொண்டிருக்கிறார்கள் . பெரும்பாலான கன்னிப்பெண்கள் கணினி பெண்களாக மாறி புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.உண்மை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன் வதந்தி நூறு முறை சுற்றி வந்து விடுகிறது.உலக மகளிர் தின வரலாற்றுக்கும்உண்மையில் இதுதான் நடந்திருக்கிறது.மகளிர் தினம் மார்ச் 8ல் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன ?யார் முடிவு செய்தது இந்த நாளை?உலக மகளிர் தினம் 1911 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் பல தேதிகளில் கொண்டாடப்பட்டு வந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாடு ஆயிரத்து 1921 - ல்மாஸ்கோ நகரில் நடந்தது.ரஷ்யாவில் 1917 மார்ச் எட்டில் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவு கூரும் வகையில்தான் அனைத்து நாடுகளும் ஒரே நாளில் மார்ச்-8 ல் மகளிர் தினம் கொண்டாடப்படும் முறை நடைமுறைக்கு வந்தது.பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல சமூகநீதி. பல்வேறு வன்முறைகளுக்கு உட்படுத்தப்படும் நவீன உலகில் முகநூல் ,டுவிட்டர் வாயிலாக பெண்கள் மீதும் பெண் உடல் மீதும் வீசப்படும் வன்மம் அதிகம் என்கிறார் டிடெக்டிவ் யாஸ்மின்.உடல் உறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்க சிங்கப்பெண் அடுப்பங்கரையில் சமைத்த அறுசுவை உணவுடன் பாசத்தையும் சேர்த்து பரிமாறும் அவள், அன்பு உழைப்பாளி பாசத் தொழிலாளி.கால ஓட்டத்தில் பொருளாதாரம் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் ஆண் வர்க்கத்திற்கு காத்திருக்கும் பெண்ணினம் பெருமைக்குரியது.பெண்ணின்றி பெருமையும் இல்லை. கண்இன்றி காட்சியும் இல்லை. ஆண்களுக்கு நிகராக  சாதித்து வருகின்றனர் பெண்கள்.பெண் என பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்.ஆகவே இனியாவது வளைகாப்பு நிகழ்ச்சிகளில்வளையல் இட்டு வாழ்த்தும்போது வாயில் இனிப்பை ஊட்டிவிட்டு ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை பெற்று தா என்று  ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றியதைப் போன்ற வார்த்தைகளை கொட்டி இனிப்பைகூட கசப்பாக மாற்றி விடாதீர்கள்.வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற நிலைமாறி வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் நிலை மாறி இன்றைய கன்னிப்பெண்கள் கணினி பெண்களாக  விண்டோஸ் வழியே விண்ணை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்ற குறளுக்கு ஏற்ப சத்யவான் - சாவித்திரி, நளன் - தமயந்தி முதல் ரோஜா திரைப்படத்தில் கடத்திச் செல்லப்பட்ட கணவனை மீட்டுக்கொண்டுவர போராடும் நாயகியைத் தாண்டி  வெளிநாட்டில் இறந்த தன் கணவனில் உடலை தாய்நாடு கொண்டு வர போராடும் கணவர் பெயர் இரணசிங்கம் என்ற படத்தில் கதாநாயகி பாத்திரம் வரை பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமாகவே இருக்கிறது..நம் வீடுகளிலும் புரட்சியை விதைத்த கல்பனா சாவ்லாவோ அல்லது மாற்றத்தை விதைத்த மலாலாவோ பிறக்கலாம்.தேவைகளுக்காகவும் தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் கொண்டாடப்பட்டாலும் பெண்ணை  மிகவும் கீழான நிலையிலேயே வைத்திருக்கும் சமூகம் சற்றே மாறட்டும்.எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தாரும் தாய்ப் பாசத்தை மட்டும் துறக்க முடியாமல் தான் தவித்துப் பல பாடல்களைப் பாடினார்.உலகையே ஈரடியில் அளந்த வள்ளுவரும் கூட தன் அன்பு மனைவி வாசுகி இறந்தபோது பிரிவு தாங்க முடியாமல் கையறுநிலைப் பாடலை நான்கு அடிகளில் அருளினார். 
முடிவுரை
இத்தகையபெண்மையை போற்றுவோம் பெண்மையை போற்றுவோம்.பெண்ணே நீ உனக்காக வாழ்வது எப்போது? உண்மையான மாற்றம் வரும் 
முழுவதும் சக்கரம் போல் ஓயாமல் சுழன்று வேலை செய்து வரும் பெண்கள் அனைவருமே போற்றப்பட வேண்டிய நடமாடும் தெய்வம் தான். அப்போது.அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

 மூளைப் பட்டறை 
முனைவர் அ இளவரசி  முதுகலை ஆசிரியர்
ஐயன் பேட்டை காஞ்சிபுரம்