எம் எஸ் சுப்புலட்சுமி 047

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

எம் எஸ் சுப்புலட்சுமி 047

எம் எஸ் சுப்புலட்சுமி 

எம் எஸ் சுப்புலட்சுமி என்று கூறப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஓர் புகழ் பெற்ற கர்நாடக இசை பாடகி ஆவார்.  இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், குஜராத்தி மொழிகளில் பாடியுள்ளார். 

 இவர் உலகின் பல நாடுகளுக்கும், பண்பாட்டு தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் அவையில் ,தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 


 இவர் இசையரசி, இசைப் பேரரசி, இசைக் குயில், இசை ராணி என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் 1916 செப்டம்பர் 16ல் பிறந்தார்.  இவரது தாயார் மதுரை சண்முக வடிவு அம்மாள் வழக்கறிஞர் சுப்பிரமணியருக்கும் பிறந்தார்.  

இசை உலகில் காலடி


 இவருக்கு இசையில் அம்மா குரு.  இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர், இசையில் வெகு விரைவில் புகழ்பெற்றார்.  இவரது எட்டாவது வயதில்" மரகத வடிவம்" என்று "செஞ்சுருட்டி ராகம்" பாடலை உச்சத்தாயில் பாடினார்.  ஆளுநர் ஆச்சரியமடைந்து, பாடலை ஒளிப்பதிவு செய்து கொண்டார். 

 இசை உலக முன்னோடிகள் இடம் பெறு,ம் இசை நிகழ்ச்சியில் சிறு வயதிலேயே சென்று ரசித்தார். " மரகத வடிவம் செங்கதிர்வேலும்" 1926 இல் இசைத்தட்டில் வெளிவந்தது. 

 காளிதாசனின் சகுந்தலையில் கதாநாயகியாக நடித்தார் . கோகிலா கான இசைவாணி என்று விளம்பரம் செய்யப்பட்டார்.  இப்படம் தயாரித்த கல்கி சதாசிவம் என்பவர் 1940 இல் இருவரும் மணந்து கொண்டனர். 
,
, சாவித்திரி, பக்த மீரா திரைப்படங்களில் நடித்தார். " காற்றினிலே வரும் கீதம்"," கிரிதர கோபாலா"  போன்ற பாடல்கள் இன்றும் காதல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  பக்த மீராவை, இந்தி தயாரிப்பிலும் வெளிவந்தது.  அப்பொழுது மவுண்ட் பாட்டன் பிரபு, பிரதமர் ஜவஹர்லால் நேரு இவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.  நேருவே சுபலட்சுமியிடம் "இசை ராணிக்கு முன்னாள் சாதாரண பிரதமர் தானே" என்று பாராட்டினார். 


 இவர் பெற்ற சிறப்பு

 இந்தியாவில் வெளியான மீரா பஜனைகள் இந்தி ரசிகர்களிடமும் அங்கீகாரம் பெற்றது.  கேதாரி நாட்டிலிருந்து கன்னியாகுமரி வரை இவர்களுடைய ரசிகர்கள் பக்தர்களாகி இவரது குரல் எங்கும் ஒலித்தது. 

 1944 இல் நான்கு நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபாய் நிதி திரட்டி.  பொது நலத்திற்கு பயன்படுத்தினார்.  

"இந்தியா இந்த தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது"" என்றார் சரோஜினி நாயுடு. 


 பெற்ற விருதுகள்

 பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசை பேரறிஞர் விருது, பத்மவிபூஷன், சங்கீத கலா மாமனி, கலா சிகாமணி, காளிதாசன் சம்மன் விருது, நாட்டு ஒற்றுமைப் பாட்டிற்கான, இந்திரா காந்தி விருது, பாரத ரத்னா போன்ற பல விருதுகள் அவரது கையை முத்தமிட்டது. 


 கம்பீரமான குரல், காந்த குரல் ,தெய்வீக குரல் என்று அனைவராலும் புகழப்படும், காற்றினிலே வரும் கீதமான எம்எஸ் அம்மா, இன்றும் காற்றோடு கலந்து நம்மிடையே உள்ளார். 

 -இசைப்பேரரசி
 லதா சங்கரன் 
சென்னை