உரிமைக்குரல் 061

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

உரிமைக்குரல் 061

உரிமை குரல் ஒன்று
அரைவயிற்றுக்கு அல்லல்படும்
ஊமைகளின்உறுப்பினனாக…

ஒடுக்கப்பட்ட பாரதத்தின்
ஒரு முகம்வெளிச்சம்
கண்டது
சிந்தனை விதைகளை தூவிய
ஒரு 
புரட்சியாளரால்
அன்று
தேசம் நன்றியுடன்
நினைவுகூர்கிறது 
இன்று
மகாத்து குளத்தில் 
நீர் எடுத்து யாவருமே
சமத்துவத்தை பருக வைத்தது

நாசிக் கோயில் நுழைவு
வைக்கம் ஆலயபிரவேசம்

அனைவர்தம் மனத்தினிலும்
நுழைவு
முழுமையான விடுதலை
முன்மொழிவு
சமத்துவத்தை முன்னெடுத்த
இலட்சியவாதியாய்.
இருளிலும் அஞ்ஞானத்திலும்மூழ்கிய

தேசத்தை
சட்டத்தினால்
வெளிச்சம்
பெறவைத்தது

ஒளி படைத்த இந்தியாவை 
கனவில் கண்டே
கருமமே கண்ணாய்
செயலாற்றியவர்
சாதி எனும் பாறையை 
தகர்த்தெறிந்தவர்.
இந்தியஜனநாயகத்தின்
முதுகெலும்பை வடித்த சிற்பி 
சுயமரியாதை தாங்கி
சாதியத்தை எதிர்த்த
புரட்சியாளர்
கொண்டுவந்தீர்
இட ஒதுக்கீடு
பெண்களுக்கு சொத்துரிமை
பிரிவு 15

என உரிமைகளை சட்டத்தினால்
நிலைநாட்டியவர்.
மறுக்கப்பட்ட கல்வியை முயன்று கற்று
பாரீஸ்டர் பட்டம் பொருளாதார நிபுணர்
அரசியலமைப்பை உருவாக்கியவர்
என அசத்தலுடன் 
அசாத்திய துணிச்சலுடன்
ஆங்கிலேயரிடம்
முழுவிடுதலைக்கு
குரல் எழுப்பியவர்
சட்டமேதையாய்
சரித்திரம் கண்டவர்.
யாவருக்கும் சம உரிமை சமநீதி பெற்றுதந்தீர்
விடிந்த இந்தியாவிற்கு 
விடிவெள்ளியாய்
திகழ்ந்தீர் அன்றிலிருந்து 
இன்றுவரை.
கடைகோடியிலிருந்து 
தேசம் முழுமையும்  திரும்பிபார்க்கவைத்தீர்
அண்ணல் உம்மை அண்ணாந்தே.

-மு.கார்த்திகேயன் எம்.எஸ்.சி பி.எட்
 முதுகலை உயிரியல் ஆசிரியர்
 வேலம்மாள் போதி கேம்பஸ்.திருச்சி