அண்ணல் அம்பேத்கர் 050

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அண்ணல் அம்பேத்கர் 050

அண்ணல்  அம்பேத்கர்

சாதிச்சேற்றில் நிதம் புரண்டே சண்டையிட்ட சமயத்தில்  //
சமத்துவத்தைப் போதித்துச் சாதித்த சாதனையாளர் //
அமைதியின் வடிவமான அண்ணலே என்றும் //
அடக்கத்தின் உருவமான கருணையின் கடலே //
அவமானப்படுத்தி அடிமைப்படுத்தி ஒடுக்கியோரை நடுங்காமல் //
நேர்நின்று சட்டமெனும் சாட்டைகொண்டு
சளைக்காமல் சுழற்றியவர்  //
படித்தவர்க்கும் பாமரர்க்கும் பாங்காய் பாடம்புகட்டிய புரட்சியாளர் //
மகாபாரத பீமனவன் மாவலிமைகொண்டே
காப்பியக்கலைஞனானான் //
பாரதத்தின் பீமனாய் பாரினில்  அவதரித்தார் //
மனிதமனங்கள் கண்டே
மனிதர்களின் தலைவனானார் //
ஆண்டான் அடிமை களைந்தே அனைவரையும் ஆட்கொண்டார் //
சமூகத்தின்  ஆர்வலராய் 
சட்டத்தின் காவலராய்//
வீதியிலே வந்து நின்ற நாதியற்ற நன்மக்களுக்கு //
சோதியென ஒளிவீசி
ஆதியின் அருமருந்தானார் //

-அ. இராதா ,
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை ,
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி,
திருச்சி.