வீர மங்கை 030

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

வீர மங்கை 030

வீரமங்கையர்
 வீரம் விளைந்த நிலம்!

இது வெற்றி நிறைந்த நிலம்!  பெண்மையை போற்றும் தேசம்

  எங்கள் அன்னை தேசம் பாரத தேசத்திற்கு முதல் வணக்கம் ! 

அன்னை மொழி அமுதமொழி ,                   
  இனிய மொழி, இளமை மாறா
   கன்னிமொழியாம்   
   மூத்த தமிழ்மொழிக்கு                               
   முத்தாய்ப்பாய் வணக்கம் !
பெண்மைக்கு வீரம் தந்து ,விவேகம் நிறைத்து ,பின் நின்று முன் நிறுத்தும் ஆண்மைக்கு அன்பு வணக்கம் !
*கல்லாய் ஏன் படைத்தாய் ! கற்பாறை [ மங்கையர் ] கடவுளிடம் கேட்டது ஒளியின் வலி தாங்கு சிலையாவாய்! உன்னையும் வணங்குவர் கடவுளாய் என்றார். 
சக்தியின் வடிவமே சகலமும் , கல்லும் ,மண்ணும் ,நீரும் நிலமும் காணும் யாவும் இங்கு பராசக்தியே என்றான் முண்டாசு கவி.
 காவியப் பெண்களையும் ,சாதனைப் பெண்களையும் ,சரித்திர பெண்களையும் பற்றிய எழுத்துக்கள் அல்ல ! 
சாதாரண பெண்ணாக அன்றாட வாழ்வில் சாதனை படைத்து சரித்திரம் பேச மறந்த எளிமைப் பெண்களின் எழுத்துக்கள் சொல் மாலையாக !
வீர மங்கையர்க்கு பெருமை சேர்க்கும் புகழ் மாலையாக !
*கதிரவனின் வருகைக்கு முன்பே சண்டை தொடங்கிவிடும் சமையலறையில் அஞ்சறைப்பெட்டியோடும் , கரண்டியோடும் பாத்திரங்களின் உறவாடல் ,காரம் ,புளிப்பு ,கார்ப்பு சுவையோடு !
நானும் காபியும் என்ற இரு நிமிட இடைவெளி கூட கிடைக்காது !மருத்துவமனையோ , கல்லூரியோ ,அலுவலகமோ ,பள்ளியோ , கம்பெனியோ , கடையோ புறப்பாடு புயலாய் ! 
காலை உணவு சிலநாள் உண்டு பல நாள் கனவில் ,அலுவலகம் ஐந்து நிமிட  தாமதத்திற்கு ஆயிரம் வசை பாடல் ,அடுத்த கட்ட இரை தேடல் நிழலாட ,அதைவிடுத்து பணி சுமையை சுகமாய் சுமந்திட ,மதிய உணவும் விழுங்கியும் ,விழுங்காமலும் மாலை வீடு வந்தால் போர் வீரன் போல் போராடத் துணியும் ,பாத்திரமும்! காப்பியோடு பாடலும் மனதை வருடி உற்சாகமூட்ட வேலைகளை மாலைகளாக கோர்த்து முடித்துவிட்டு இரவு நேர உணவை நோக்கி பயணம். 
இடையிடையே குழந்தையோடு உரையாடல் அத்தனையும் முடித்து படுக்கைக்கு சென்றால் உறங்கவிடாது நிற்கும் வீட்டு பட்ஜெட். துண்டு விழாத மாதம் இல்லை ,கடன் வாங்காத மாதம் கனவிலும் இல்லை .வீரம் என்பது சண்டையிட்டு வெற்றி பெறுவது அல்ல!
 உள் மனதின் ஆழத்தில்  உணர்ச்சிகளை அடக்கி ஒவ்வொரு  பிரச்சனைகளையும் நின்று நிதானத்தில் முடித்து , அவமானங்களையும் ,தோல்விகளையும் தாங்கி வலிகளையும் ,கண்ணீரையும் தனக்குள்ளே புதைத்து தன் பிள்ளைகளை சான்றோனாக்கிட , கணவருக்கு கை கொடுத்து உயர்த்திட , 
அல்லும் பகலும் அயராது உழைத்து வீட்டையும் ,பணியிடத்தையும் , நாட்டையும் பசுமையாக்கிட உழைக்கும் ஒவ்வொரு கடை நிலை ஊழிய பெண்களும் சாதனைப் பெண்களே வரலாற்றில் ஜெயித்தவர்களையும் , வாழ்ந்து வழிகாட்டி சென்றவரையும் மட்டும் பற்றியே பேசி பழகிய நமக்கு , நம்முடன் பணி புரியும் சக மகளிரின் சாதனைகள் தெரிவதில்லை !
பாராட்ட மனதும் இல்லை ! 
வீறுகொண்டு நடை போட்டு !
வீழ்ந்தாலும் எழுந்து நின்று ! 
தோற்றாலும் துவண்டிடாது ! 
அவமானத்தையும் வெகுமானம் ஆக்கி ! 
அடித்தாலும் உடையாத இரும்பை போல் இறுகி இறுகி !
வலிமையோடு போராடும் 
                வீரமங்கையர்க்கு 
இந்த கட்டுரை சமர்ப்பணம்             
                 உங்களில் ஒருத்தி 
                                                                    எ..விக்னேஸ்வரி , எம்.ஏ.பிஎட்.