தமிழரின் பண்பாடும் பெருமையும்...! 09

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பண்பாடும் பெருமையும்...!  09

தமிழரின் பண்பாடும் பெருமையும்

முன்னுரை

தமிழரின் பெருமை தரணியில் ஓங்கியே ஒலி(ளி)க்கும் தாய்மொழிப் பற்றில் தழைத்து நிற்கும்.  மறத்தோடு ஊறி மகத்துவம் சொல்லும். விஞ்ஞான வளர்ச்சியில் நவீனம் சென்றாலும் தமிழரின் பெருமையை மெஞ்ஞானம் புகட்டும். பழந்தமிழர்களின் வரலாறு சிற்பக்கலை, கோயில்கள், கல்வெட்டுக்கள், இலக்கணம், இலக்கியம் , ஐம்பெரும்  காப்பியங்கள், வழி வழியாய் புகழோடு எடுத்துரைக்கும் .
தொழில் வளம், வோளாண்மை,  ஆன்மீகம் ,போர்த்திறன், செயல்த்திறன், செல்வவளம், இனிமைசுவை, இயற்கைவளம், மருத்துவம், உயிர்வளம், அரசியலமைப்பு,
என சொல்லிக் கொண்டே போகலாம்.


தமிழரின் பண்பாடு பழக்கவழக்கம்,  பண்புகள், ஆடை,  என அன்றெ ஒழுக்கத்தில் சிறந்து .பக்தியிலும் கல்லையும் கடவுளாய்ப் பார்த்து அதன் வடிவத்தை சிலையாக்கி கோயிலமைத்து வழிபட்டனர்
பஞ்சபூதங்களையும் தொழுது அதன் சினத்தை அடக்கி வணங்கினர்
உழைப்பு, ஆற்றங்கரையோர நாகரீகத்தின் வழி தொழிலாக விவசாயத்தைச் சிறப்பாக செய்து ஆதவனை வணங்கித் தொழுதனர் அதற்காக புதுநெல்லறுத்து புதுப்பானை பொக்கலிட்டு வழிபட்டனர். வாழையடி வாழையாய் தொடரவைத்து, காய்கறி, பழங்கள், கீரை, கிழங்கு, என பலவகைப்  பயிர்களை மேற்கொண்டு முன்னேற்றம் கண்டனர்.

வீரம் தமிழரின் உதிரத்தில் ஊறியது.  ஆதியிலே வேட்டையாடி  எதற்கும் அஞ்சா வேங்கைகளாய் சீறியும் நின்று தற்காப்புக்களைகள் சிலம்பாட்டம். ஈட்டி, எரிதல்,அம்பு, எய்தல் எனபலவித்தைகளை கற்று வைத்து தனக்கு ஆபத்து வரும் வேளை அதன்படி தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.
 தமிழிர் விரும்பி விளையாடும் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு .

ஆதியில் தோன்றிய ஆதிமுலமும் தமிழனே என பல தொல்லியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பல அறிவியல் கேள்விகளுக்கு தமிழன் அன்றே பதில்கண்டு விட்டான். "அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி" என்னும் வாசகம் அணுவின் பயன்பாடுகள் பற்றி தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தான்.
கீழடி ஆராச்சியில் இன்னும் எத்தனையோ சான்றுகள் தோண்டத் தோண்ட புதையலாய் வந்து கொண்டிருக்கிறது.
தமிழன் கைவைத்த இடமெல்லாம் பொன்னாக வரலாற்று கட்டிடக்கலைகள், சிற்பக்கலைகள், எத்தனையோ ஒரேகல்லில் செய்யப்பட்ட தஞ்சைப் பெருங்கோவிலின் இராஜகோபும் எடுத்துக் காட்டாகும். விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம் அமைந்தது மொகஞ்சதாரோ நாகரிகத்தின் கட்டிடடக்கலைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்களே.

விருந்தோம்பல் திருநாட்கள் விழாக்கள் என்றாலே ஒரு கொண்டாட்டமாக ஆடல் பாடல் சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், பறை , என திருவிழாவே கலைகட்டும்  வந்த விருந்தினரை உபசரித்து தழைவாலை இலைபோட்டு விதவிதமாய் சமைத்த உணவுகளை இலையில் பகிர்ந்து அனைவரும் அமர்ந்து உணவருந்தி இன்பமாய் பேசி மகிழ்ந்து வீதிவரை சென்று வழியனுப்பி வைத்த தமிழினம் .

மனிதநேயம் அன்றே அத்திவாரம் இட்டது.
அரசன் முதல் ஆண்டிவரை மனிதம் தளாது வளர்ந்து தளிர்த்து நின்றது. 

முடிவுரை 
தமிழரின் பெருமை அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் சொல்லச் சொல்ல வந்து கொண்டே இருக்கும் பண்பாடுகளும் அறநெறிகளும் வரலாறுகளும் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது இன்னும் எத்தனையோ புதிய ஆய்வின் வழியே வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது தமிழனின் புகழும் ஓங்கி சங்காய் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

கிருஷ் அபி இலங்கை.