சட்ட மாமேதை அம்பேத்கர் 060

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சட்ட மாமேதை அம்பேத்கர் 060

*ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம்,
எல்லாம் கடந்து, வீட்டை மறந்து,
வெளி நாட்டில் பயின்று, மேதையானவர்*
 *கற்பி! ஒன்று சேர்! போராடு!
அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற
பகுத்தறிவு தந்திரங்களை
மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர்*.

*நம் இந்திய அரசியல் சாசனத்தின்
தலையாய தந்தையானவர்.
சட்டம் பயில்வோர்கள்,
சமத்துவம் போற்றுவோர்கள்- என
ஏனைய மக்களின் குருவானவர்.

இந்த இருபதாம் நூற்றாண்டு
இன்று போற்றி மகிழும்
நம் இந்தியாவின்
இரண்டாம் தந்தையானவர்*

*யார்? அவர், அவர் தான்*.
சட்ட மேதை, அறிவுச் சுடரொளி,
ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம்,
உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம்,
எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம்,
இந்தியாவின் கலங்கரை விளக்கம்,
*மாமேதை, புரட்சியாளர்*

*பீமாராவ்  ராம்ஜி, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்*.

*உன்னுடைய பூத உடல் மறைந்து போனாலும் நீ கொடுத்துச் சென்ற ஊக்கம் எனும் ஆயுதம் எங்களிடம் இருக்கிறது.*

- திருமதி. ராஜலட்சுமி
   ராஜபாளையம்.