உரையாடல்

தங்கேஸ் கவிதைகள்

உரையாடல்

உரையாடல்

கண்களை நேராகப் பார்த்து பேசமுடியாதவள்
பூமிக்குள் புதைந்து விட 
ஆசைப்படுகிறாள்

கால் கட்டைவிரலால் அழுத்தி
அனுப்பப்பட்ட சமிஞ்ஞைகளுக்கு
பதில் கிடைக்கும் முன்
ஒரு கோடி ஆண்டுகளை கடந்துவிடுகின்றன

நீ ஒரு மரமாகிப்  போ சென்மமே
என்று தன்னை   சபிக்கிறாள்

என் முன்னால் ஒரு அரிய வகைத் தாவரம்  இப்போது முளைத்திருக்கிறது

என்னோடு உரையாடலைத் 
தொடங்கு தாவரமே !
நான் புல் மனிதனாக சபிக்கப்பட்டு
ஏற்கனவே
நானூறு ஆண்டுகள் கடந்து விட்டனவே

-தங்கேஸ்,