பல்கலை வித்தகிக்கு பல்துறையில் பாராட்டு

சாதனை நாயகி

பல்கலை வித்தகிக்கு பல்துறையில் பாராட்டு

பல்கலையின் வித்தகிக்கு
பல்துறையில்பாராட்டு....

 நாலாயிர திவ்யப் பிரபந்த உலக சாதனை நாயகி, கவிமாமணி, சிங்கப்பெண், இரும்புப் பெண்மணி, வரலாறு பேசும் நாயகி, நலலாசிரியர், கவிஞர்,எழுத்தாளர் பேச்சாளர், ஆன்மீகவாதி, பகுத்தறிவு சிந்தனையாளர், பாடகி, ஆடலரசி, பாடலாசிரியர், கலை வித்தகர், பன்முகத்திறனாளர்,சேவகர், கொடையாளர், இவைகள் பெற்ற பட்டங்கள் மட்டும் அல்ல.பட்டங்களை விட அதிகமாய் இவரின் செயல்கள் முன் மாதிரியாய் வரலாறு பேசும். இவருக்குள் இருக்கும் பல வரங்களை வார்த்தெடுக்கும் அழகினை..... இப்படி  அடுக்கிக் கொண்டே போகலாம் .
ஆம் அவர்தான்  ....!

Dr.ஸ்ரீவித்யா .சு 
M.A;B.ED;M.PHIL;,PH.D,
பல் துறை வித்தகி அவர்கள்...

கருவிலே திருவுடையார் என்பார் அப்படி ஒரு ஞானக்குழந்தையாய் ஞாலம் புகழ்பெற தவழ்ந்திட்டார்.ஆம் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டு, மதுரையின் மலராக... சிப்பிக்குள் இருக்கும் முத்தாக தரணியில்...

பாலப்பருவத்தில் பார்த்ததில்லை பேசியதில்லை . அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன் ...ஆனால் பிறர் எழுத நாம் படித்த வரலாறுகள் கண் முன் நிறுத்துகின்ற காட்சிகளை இவர் ஒரு சரித்திரம் படைக்க பிறந்த சாதனைச் சுவடு என்று... 

சாலச்சான்றாய் சான்றோர் கருத்தாய் துவங்கியது பயணம் சிறுவயது முதலே வீர மங்கையாய். விளையாட்டுப் பருவத்தில் வில் கொண்டு தொடுக்காது சொல் கொண்டு தொடுக்கின்றார் சேர்ந்தவரும் சொக்கிடவே..

முத்தமிழ் வைத்து சங்கம் வளர்த்த மதுரையின் புகழுக்கு போதா குறையாய் மேலும் புகழ் சேர்க்க செய்திட்டார் பல அரிய  செயல்களையே. மார் தட்டிச் சொல்கின்றார் நான் மதுரைப் பெண் என்று

படித்த பட்டங்கள், வகித்த பதவிகள் பெற்ற விருதுகள் ஏறிய மேடைகள் சொல்கின்றன இவரின் சோதனை கடந்த சாதனைகளை...!

மும் மொழிகள் அறிந்தவர் என்றாலும் பல கலைகளிலும் வல்லவராய் திகழ்கின்றார்... 

இன்னிசை குரல் எடுத்து இன்பம் சேர்க்கின்றார், ஈடில்லா கீதமதை இசைக்கின்றார் செவிக்கினிதாய் 

முத்திரை பதித்த நர்த்தனத்தில்  முக பாவனை தோரணையில் பரதமும் ,கிராமத்து கீதமாக இவர் வசமாய் பிறர் மனம் வசிய செய்கின்றார். வீசும் தென்றலாக வருடுகிறது.

கொட்டிய வண்ணப் பொடியோடு கோலமதில் சாதனையை  கடுங்குளிரில் செய்கின்றார். கோலத்தின் பெருமையை, கலாச்சார பண்பாட்டு வரலாற்று கருவூலமாக இடம் பெறவும் கடும் முயற்சி எடுக்கின்றார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர் அழைப்பு ஆறு தனிநபர் உலக சாதனை, பலநூறு குழும உலக சாதனை பங்கேற்பு, ஆறு புத்தகங்கள் வெளியீடு முடித்து மேலும் 5 புத்தகங்கள் 23/04/2023 அன்று வெளியிட தயார் நிலையில் இருக்கிறார்.

எழுத்துக்களில் முத்திரை பதிக்க ஏகத்துக்கும் ஆராய்ச்சி செய்து எண்ணிலடங்கா பக்கங்கள் எழுத்துலக பிரம்மாவாய் வலம் வர இருக்கிறார்

பல பரிசுகள் பல விருதுகள் படித்ததில் நினைவில்லை பல்லாயிரக்கணக்கில் இருப்பதினால்

எல்லாவற்றிக்கும் மேலாக ஆசிரியப் பணியை அறம் தவறாது அர்ப்பணிப்பாய் போதிக்கின்றார்.

தொடர்பில் இருக்கும் பல ஆளுமைகள் பெருந்தகைகள் நட்புகள் ஏராளம் ஏராளம்...

நம்பாரதி கண்ட இப்புதுமைப் பெண்ணிற்குசுயசரித்திரம் நாம் எழுத கிடைக்கும். நமக்கு பின் பிறர் எழுத கிடைப்பது வரலாறு ஆனால் இவருக்கு பிறர் எழுத இன்றே கிடைத்துவிட்டது இவர் வரலாறு.

இந்த ஒரு புத்தகம் போதும் இவரின் சாமர்த்தியமும் சாதுரியமும் சாதனையும் அறிவதற்கு...

ஒருபுறம் ஆன்மீகம் வெளியீடு மறுபுறம் வசந்தக் காற்றில் வாலியின் நூல் ஆய்வு.
நூலாசிரியர் கோணத்தில் தேடிய தேடல்கள் கொடுத்த செய்திகள் பக்கங்கள் தொடுத்த வரலாறு ஏராளம் . சங்க இலக்கியங்கள் சான்றுகள் சரித்திரங்கள் பேச இலக்கிய வானில் வட்டமிட இந்த நூல்கள் மாபெரும் சான்றாக அமையும்

எத்தனை பரிமாணம் கொடுத்தாலும் அத்தனையிலும் பாங்காய், பக்குவமாய் மிளிர்கின்றார்

சம்பாதித்தது போதும் சமூகத்தை உயர்த்த போகிறேன் தூணாய் என்ற கங்கனத்துடன் சாதிக்க நிற்கிறார். என்றுமே விலையில்லாக் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பாங்கில் அவருடைய எண்ணம் மிகவும் வலிமையானது. எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இதுவரை எண்ணற்ற மாணவ மாணவிகள் பொருளுக்கும் வழி வகை செய்து உள்ளவர்.

பெற்றெடுத்து வீதியில் விடும் பேதமைகள் இன்றும் இருக்க இரண்டு கிராமங்களை கேட்கிறார் தத்தெடுப்பதற்கு.. அழியா கல்விச் செல்வம் கொடுப்பதற்கு....

இனி வெளியிட இருக்கும் ஐந்து நூல்களும் ஐம்பெரும் காப்பியங்கள் போல் இவருக்கு அத்தனை தேடுதல் அத்தனை ஆய்வுகள்... நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள்... இவருடைய புத்தகத்திற்கு வாழ்த்துரையும் அணிந்துரையும் 30 நபர்களால் மிகப்பெரிய ஆளுமைகள் வடம் பிடித்து ஆசி அருளோடு தாங்கி நிற்கின்றனர்.

இவரின் கலகலப்பு பேச்சில் கடக்கும்... நேரத்தில் கணிக்க முடியவில்லை இவரின் உழைப்பை இத்தனைக்கும் நடுவிலா  இவ்வளவு உழைப்பு

எத்தனை இரவுகள் விழித்திருப்பார் எத்தனை இரவுகள் தூங்கியிருப்பார். ஏட்டைப் புரட்டினால் எழுதிய பக்கங்கள்தான் பதில் சொல்லும்

செம்மொழி கொண்டு சீர்தூக்கும் நடை கொண்டு சொல்லாற்றலோடு பேசும் சிறந்த சொற்பொழிவாளர்...

குட்டி குட்டியாய் வடித்த கவிதைகள் பெரிதாய் பேசுகின்றன இவரை அடையாளம் கொண்ட கவிஞர் என்று...

இவரின் இலக்கிய பயணம் வெற்றி பெறட்டும் சாதனை நோக்கம் விண்ணை தொடட்டும் வாழ்த்துகிறோம். வான் உயர வாழ்த்துகிறோம் விண்மீன் வெளிச்சம் கொண்டு.

மின்னி சிரிக்கட்டும் இவர் வெளிச்சம் புவி உலகில் உலா வரட்டும்.. உளமாற வாழ்த்துகிறோம் இன்னும் உயிரோடு உயிரட்டும், உயரட்டும்..

AMB WRH DR HA செல்வராணி ரெத்னகுமார் 
பி.லிட், எம்.ஏ, எம்.ஏ.டி.சி.ஏ
நிறுவனர்
சிந்தனைச் சிறகுகள்
President of Inner wheel
2022-2023