ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல் பேராசிரியரின் சிறு ஆலோசனைகள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல் பேராசிரியரின் சிறு ஆலோசனைகள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்
********************************************
சிறு ஆலோசனை
**********************
 பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள
ஒன்பதாம் வகுப்பு பாடநூலில் நல்ல எழுத்து வடிவில் பாடங்களும் வண்ண வண்ண ஓவியங்களும் அருமையாக இடம்பெற்றுள்ளன. பாராட்டுகள். 

        நடைமுறை செயல்பாட்டில் பல்வேறு
குறைபாடுகள் தெரிய வரும். அவற்றின் உண்மைத் தன்மையறிந்து திருத்தம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். 

          ஒவ்வொரு இயலின் பின்னால் தரப்பட்டுள்ள வினாக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன.
பாடங்கள் முழுவதும் மாணவர்கள் நுட்பத்துடன் படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில்  பாடத் திட்டக்குழு இவ்வாறு தந்துள்ளது என்று சிலர் கருத்து சொல்கின்றனர். 

        பாடங்களின் உள்ளே இருந்து வினாக்கள் கேட்கப்படும் போது அவற்றிற்கு விடையளிக்க இன்றைய மாணவர்கள் தயாராக இல்லை. 
 அதிகம் இந்த விஷயத்தில் பாதிக்கப்படப் போவது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தான். 

நூறு சதவீத தேர்ச்சி நூற்றுக்கு நூறு மதிப்பெண் என்று கேட்டு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி இலக்கு வைத்து வேலை வாங்குகிறது. ஆனால் மாணவர்களைக் கண்டிக்கும் சட்டம் ஆசிரியர்களுக்கு இல்லை. 

        மொத்தத்தில் செய்யுள் உரைநடை இலக்கணம் துணைப் பாடம் ஆகியவற்றுக்கான 
Book back Questions இப்போது தந்திருப்பது காணாது. அடுத்த கல்வி ஆண்டில் இத்தகைய வினாக்கள் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில்  அதிக எண்ணிக்கையில் போதுமான அளவிற்கு அச்சிடப்பட வேண்டும்.

வினாத்தாள் எடுக்கும் ஆசிரியர்களுக்கும்
இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

       பாடத் திட்டம் தயாரிக்கும் பணியில் அனுபவம் வாய்ந்த அரசு பள்ளிகள் மட்டும் அல்லாமல் தகுதி வாய்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களையும் 
பள்ளிக் கல்வித் துறை நியமிக்க வேண்டும். 
      பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பாடத்திட்டக் குழுவிற்கு இந்த பயனுள்ள வேண்டுகோளைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்

- முனைவர் வ ஹரிஹரன்,
 திருநெல்வேலி.