சுதந்திர தினம் கவிதை

சுதந்திர தினம் கவிதை

சுதந்திர தினம் கவிதை

75 வது சுதந்திரதின விழா!

எழுச்சியாய் பவணிவரட்டும்இந்த உலா!!
ஏழையும்! பாளையும்!
துள்ளி மகிழந்து கொண்டாட்டும் இந்நாளிலா!

பல உயிரைஈந்து பறக்கிறாய் பட்டொளி வீசி காற்றிலா!
பறவைகளை போல்
திமிர்பிடித்து பறக்கிறாய்
வான்நிலா!!

  நீ சிறகைவிரிக்க!
தான் சிறையிலேவாடி சிறகொடிந்தோர்பலர்!

நீ !சீர் இளமைகுன்றா திருக்க! தன் இளமையை சிறையிலே முடித்தோர்பலர்!

இந்தியதாயே! உன் அடிமை விலங்கொடுக்க!
அகிம்சையிலே
விலங்கை தன்கரங்களில் சுமந்தோர்பலர்!

உண்ண !உடுக்க!
எழுத !படிக்க!பெண்ணடிமை முடிக்க!
ஏட்டுச்சுதந்திரத்தை
கையில் எடுத்துபாரதி கவிபடைக்க!

விடுதலைவேட்கை தீ
பாரதீ யால் பாமரனும் எதிர்த்துகொடிபிடிக்க!

இந்தியா வின் கடைசிவைஸ்ராய்
மௌண் பேட்டன்
விருப்ப நாளான இன்று!

இந்தியதாய்நாடு விடுதலைபெற்றது நள்ளிரவில் நன்று!

மூவர்ணம்தாங்கி
தியாகம் அன்பு கருணையில்ஓங்கி!
போரை வெறுத்த அசோகரின் இருபத்தி நான்கு
தர்மவாசகங்கள் தாங்கி!

24ஆரம்கொண்ட தர்மச்சகரம்நடுவே தாங்கி !
அண்ணல் அம்பேத்காரால்
இந்தியசட்டம்வகுத்து
அண்ணல் காந்தியின்
அகிம்சை வழியிலே!

கத்தியின்றி !இரத்தம் இன்றி!
சுதந்தினபோரை வென்றறெடுத்த!

வெற்றியாளர்களின்
உதிரத்தை !
நம் தேசிகொடிமரத்தின்
கீழ் உரமாய்! வித்தாய்!
புதைந்து கிடக்க!

வெண்சாமரம்வீசி! விண்ணை தொடசிறகை வீசிபறக்கிறாயோ

பெற்றுத் தந்த சுதந்திரத்தை
பேணிகாப்போம்!
சுதந்திர காற்றை
சுவாசிக்க!
சாதி மதம் மொழி என்றநஞ்சுகலக்காதிருப்போம்!

நாணயமாய் நம்நாட்டு தேசியகொடியேற்றி!
நாளைய சந்ததிக்கு
நல்லதோர் எடுத்துக்காட்டாய்!நம்மை மாற்றி!

நாம் பயணிப்போம்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் போற்றி!

அன்றை!இந்திய சுதந்திர தியாகிகளை யும்!
இன்றைராணுவ (யஸ்வந்சிங்போன்ற) வீரர்களையும் போற்றிபாடி
வணங்கி துதிப்போம்!

ஜெய் ஹிந்த்!
பாரத்மாதாக்கே‌ஜே!
வந்ததே மாதரம்!

தேசியத்தை மதிக்கும்
தேசபக்தன்!

கவிதை மாணிக்கம்.