காதல் கவிதை..! 016

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் கவிதை..! 016

காதல் கவிதை

காதல் என்பது வெறும் கடைச்சரக்கு அல்ல ...
கண்களால் பேசிக்கொள்ளும் காவியம்.. 
கதையல்ல இது நிஜம்! 
*அ* ன்பால் ஈர்க்கப்படுவது காதல்..

*ஆ* னந்த யாழை மீட்டுவது காதல்...

*இ* தயங்கள் இடம் மாறி மாறி துடிப்பது காதல்... 

*ஈ* த்துவக்கும் இன்பம் காதல்...

*உ* ள்ளத்து உள்ளது காதல்...

*ஊ* ற்றெடுப்பது காதல்... 

*எ* ண்ணங்கள் வெளிப்படுத்துவது காதல்...

*ஏ* ணிப்படியாய் உயர்வது காதல்... 

*ஐ* ம்புலன்கள் நுகர்வது காதல்... 

*ஒ* ருவரை ஒருவர் புரிந்து கொள்வது காதல்... 

*ஓ* ங்கி வளர்வது காதல்... 

*ஔ* டதமாய் திகழ்வது காதல்...

காதல் காதல் காதல்... 

காதல் போயின் நோதல் நோதல்... 

காதல் வானில் கற்பனை சிறகுகள் சிறகடிக்கும்...

 எண்ணங்கள் கடல் அலை அலையாய் வந்து போகும்...

கண்கள் இரண்டும் அங்கும் இங்கும் தேடும்...

கால்கள் இரண்டும் நிலம் பதித்து நோக்கும்...

முத்தமிட்ட நினைவுகளில் 
மூழ்கி திளைப்பது காதல்...

சிறு சிறு ஊடல்... 

இருவரின் ஊடலுக்குப் பின் கூடல்...

இதுதான் அழியாத காதல்...

பெற்றோருக்கும் பெரியோர்க்கும் மற்றோருக்கும்
தெரியாமல் மறைத்து வைப்பது காதல்...

அன்பின் ஆழம் காதல்...

அன்புக்கு அடிபணிவது காதல்... 

வெட்கத்தின் வெளிப்பாடு காதல்... 

உயிர்கள் ஒன்று சேர உருவாவது காதல்... 

உருக்குலைந்து போனால் உயிரை விடுவது காதல்... 

ஈருடல் ஓர் உயிராய் வாழ வைப்பது காதல்...

இரு மனங்கள் இணைந்து திருமணங்கள் செய்து 
ஆயுள்‌ முழுதும் அன்பாய் வாழச்செய்வது காதல்... 

தொலைபேசியில் தொடர்வது காதல்... 

தொல்லைகளை மீட்டெடுப்பது காதல்... 

எப்பொழுதும் இன்பம் தருவது காதல்... 

காதல் நோய்க்கு மருந்தில்லை! மாத்திரையில்லை! நோய் தீர்க்க *சம்மதம்* என்ற மருந்தே சரியான மருந்து...

காதல் வாழ்க!
காதல் வளர்க!

காதலர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!

கவிஞர்.ந.மலர்க்கொடி
தலைமையாசிரியர்.